சிம்மம் ஜூலை மாத ராசி பலன் 2021 | July Matha Simmam Rasi Palan 2021

சிம்மம் ஜூலை மாத பொதுப்பலன் 2021 :
சிம்ம ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்களுக்கு சிறந்த பலன்கள் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் உறவு முறை சுமுகமாக இருக்கும். தம்பதியர் பரஸ்பரம் விட்டுக் கொடுத்து ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நடப்பதன் மூலம் குடும்ப உறவுகள் சிறப்பாக இருக்கும். இளம் வயது சிம்ம ராசி அன்பர்கள் சிலர் காதல் வலையில் விழும் வாய்ப்பு உள்ளது. ஒரு சிலரின் காதல் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது. நிதிநிலை ஓரளவு உங்களுக்கு சாதகமாக இருக்கும். பணப் புழக்கம் அதிகம் இருக்காது என்றாலும் பணப் பற்றாக் குறை ஏற்பட வாய்ப்பு குறைவு என்பது உங்களுக்கு சற்று ஆறுதலான விஷயம் ஆகும். என்றாலும் நீங்கள் உங்கள் செலவுகளை கட்டுபடுத்தி சேமிப்பை உயர்த்த வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமாரான பலன்கள் கிட்டும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் இந்த மாதம் கிடைக்கும் வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் நீங்கள் சிறந்த பலன்களை எதிர்பார்க்கலாம். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மாணவர்கள் மனதை ஓருமுகப்படுத்துவதன் மூலம் கல்வியில் சிறந்து விளங்க இயலும். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.
சிம்மம் ஜூலை மாத காதல் / குடும்ப உறவு :
கணவன் மனைவி உறவு சுமாராக இருக்கும். மனம் விட்டுப் பேசுவதன் மூலம் எந்தவொரு உறவையும் நல்லுறவாக மாற்ற இயலும். எனவே கணவன் மனைவி இருவரும் பரஸ்பரம் தங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொள்வதன் மூலம் சுமுகமான உறவை பராமரிக்க முடியும். கணவன் மனைவி இருவரும் வெளியிடங்களுக்குச் சென்று வருவதன் மூலம் உறவில் புத்துணர்ச்சி ஏற்படும். ஒருவர் தேவைகளை மற்றவர் நிறைவேற்றுவதன் மூலம் உறவில் நெருக்கம் அதிகரிக்கும். இளம் வயது சிம்ம ராசி அன்பர்கள் மனதில் காதல் அரும்பு மலரும்.
திருமண உறவில் நல்லிணக்கம் காண : அங்காரகன் பூஜை
சிம்மம் ஜூலை மாத நிதிநிலை :
நிதிநிலை ஓரளவு உங்களுக்கு சாதகமாக இருக்கும். பணப் புழக்கம் அதிகம் இருக்காது என்றாலும் பணப் பற்றாக் குறை ஏற்பட வாய்ப்பு குறைவு. உங்கள் சேமிப்பு மூலம் செலவுகளை சமாளிக்க இயலும். அதன் மூலம் உங்கள் குடும்பத்தின் வசதிகளை பெருக்கிக் கொள்வீர்கள். பங்குச் சந்தை, ஊக வணிகம் போன்றவற்றின் மூலம் நீங்கள் லாபம் காண விரும்புவீர்கள். உங்கள் எதிர்பார்ப்புகள் யாவும் இந்த மாதம் நிறைவேறும். அதிக லாபம் காண்பதன் மூலம் உங்கள் நிதிநிலை உயரும். பொருளாதார ஸ்திரத் தன்மையைக் காண்பீர்கள். இந்த மாதம் லாபங்களைக் காண்பீர்களே தவிர நஷ்டம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பது உங்களுக்கு ஆறுதல் தரும் விஷயமாக இருக்கும்.
உங்கள் நிதிநிலை மேம்பட : லக்ஷ்மி பூஜை
சிம்மம் ஜூலை மாத வேலை:
பணி செய்யும் சிம்ம ராசி அன்பர்கள் முயற்சி திருவினை ஆக்கும் என்பதை கருத்தில் கொண்டு கடின உழைப்பை மேற்கொள்வார்கள். முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்றாலும் இந்த மாதம் உங்கள் முயற்சிக்கேற்ற பலன் கிடைப்பது கடினமாக இருக்கும். அரசாங்க உத்தியோகத்தில் இருப்பவர்கள் இந்த மாதம் அதிக முன்னேற்றத்தை எதிர்பார்க்க இயலாது. இது அவர்களுக்கு சற்று ஏமாற்றத்தை அளிக்கும். பணியிடத்தில் சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளின் ஆதரவு மற்றும் ஒத்துழைப்பு கிடைப்பது கடினம். பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு போன்ற உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேற இன்னும் சிறிது காலம் ஆகும்.
சிம்மம் ஜூலை மாத தொழில் :
தொழில் அல்லது வியாபாரம் செய்யும் சிம்ம ராசி அன்பர்கள் சிறிது கவனச் சிதறலுடன் செயலாற்ற வேண்டிய சூழல் இருக்கும். இந்த மாதத்தின் முற் பகுதியில் குடும்ப பிரச்சினைகள் காரணமாக நீங்கள் தொழிலில் அதிக ஈடுபாடு கொள்வது இயலாமல் போகும். ஆனால் பிற்பகுதியில் சற்று விறுவிறுப்பாக இருக்கும். உங்கள் புத்திசாலித்தனம் மற்றும் கடின உழைப்பின் மூலம் நீங்கள் வெற்றியை அடைவீர்கள். நீங்கள் தொழிலை விரிவு படுத்த எண்ணுவீர்கள். உங்கள் எண்ணம் இந்த மாத இறுதியில் நிறைவேறும் வாய்ப்பு உள்ளது.
சிம்மம் ஜூலை மாத தொழில் வல்லுனர்கள் :
இந்த மாதம் அதிக பணிகள் காணப்படும். என்றாலும் நீங்கள் திறமையுடன் செயல்பட்டு இலக்கை வெற்றிகரமாக எட்டுவீர்கள். தொழில் செய்வதும் பணம் ஈட்டுவதும் அவசியம் தான் என்றாலும் குடும்ப வாழ்க்கையும் முக்கியம் என்பதை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். தொழிலில் நீங்கள் வெற்றி பெற்றாலும் குடும்ப நலன் கருதி நீங்கள் குடும்ப வாழ்க்கை தொழில் என இரண்டையும் சமநிலையில் எடுத்துச் செல்ல வேண்டும்.
வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றம் பெற : பிருகஸ்பதி பூஜை
சிம்மம் ஜூலை மாத ஆரோக்கியம் :
இந்த மாதம் நீங்கள் உணவு முறையை சரியாகப் பின்பற்றுவீர்கள். உங்கள் உடல் எதிர்ப்பு சக்தியை சத்தான ஆரோக்கியமான உணவின் மூலம் அதிகரித்துக் கொள்வீர்கள். இதனால் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பெரிய அளவிலான உடல் பாதிப்புகள் ஏதும் உங்களை அண்டாது. சிறு சிறு பாதிப்புகள் வந்தாலும் விரைவில் குணம் பெற்று விடுவீர்கள். என்றாலும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் உணவு விஷயங்களில் கவனம் அவசியம். உடற்பயிற்சி மற்றும் தியானம் மேற்கொள்வதன் மூலம் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
உங்கள் ஆரோக்கியம் மேம்பட : சூரியன் பூஜை
சிம்மம் ஜூலை மாத மாணவர்கள்:
இந்த மாதம் மாணவர்கள் அதிக முயற்சிகளை மேற்கொண்டு படிக்க வேண்டும். இந்த மாதம் சற்று பின்னடைவு காணப்படும். என்றாலும் முயற்சி மூலம் படிப்படியாக முன்னேற்றம் காண இயலும். மனதை ஒருமுகப்படுத்தி கவனமாகப் படிப்பதன் மூலம் வெற்றி இலக்கை எட்ட முடியும். கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் தங்கள் படிப்பை முடித்தவுடன் வேலை கிடைக்கப் பெறுவார்கள்.
கல்வியில் மேன்மை பெற : கேது பூஜை
சுப நாட்கள் : 1, 4, 7, 15, 16
அசுப நாட்கள் : 2, 3, 9, 10, 17, 18, 28, 29, 30
