AstroVed Menu
AstroVed
search
search

கடகம் ஜூலை மாத ராசி பலன் 2021 | July Matha Kadagam Rasi Palan 2021

dateJune 3, 2021

கடகம் ஜூலை மாத பொதுப்பலன் 2021 :

கடக ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்கள் பொருளாதார நிலை உங்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் சாதகமாக இருக்கும்.  குடும்பத்தில் ஒற்றுமை மற்றும் அமைதி நிலவும். குடும்பத்தில் இருக்கும் மூத்த வயதினரின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பதன் மூலம் நீங்கள் நன்மை பெறலாம். இதனால் உங்கள் கவலைகள் குறையும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் இரண்டிலும் இந்த மாத மத்தியில் சில முன்னேற்றங்களை நீங்கள் காண்பீர்கள். தொழில் செய்பவர்களுக்கு இந்த மாதம் தொழிலில் பல புதிய வாய்ப்புகள் நாடி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியிடத்தில் கவனமாக இருக்க வேண்டும். சக பணியாளர்களுடன் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். இந்த மாதம் நீங்கள் ஆன்மீகத்தில் நாட்டம் கொள்வீர்கள். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.

கடகம் ஜூலை மாத காதல் / குடும்பம்:

குடும்பத்தில் நீங்கள் அன்பாக நடந்து கொள்வீர்கள்.  இளம் வயது கடக ராசி அன்பர்கள் மனதில் காதல் மலரும். திருமணத்திற்குக் காத்திருக்கும் உங்களில் சிலருக்கு திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவி உறவில் ஒற்றுமை மற்றும் நெருக்கம் அதிகரிக்கும். என்றாலும் சில கருத்து வேறுபாடுகள் வந்து மறையும். இதனை தவிர்க்க குடும்பத்தில் வாக்கு வாதங்களை மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது.  குடும்பத்தில் இருக்கும் வயதில் மூத்தவர்களின் ஆலோசனைகளை கேட்டு நடப்பது நல்லது.

திருமண உறவில் நல்லிணக்கம் காண :பிருஹஸ்பதி பூஜை

கடகம் ஜூலை மாத நிதிநிலை :

இந்த மாதம் உங்கள் பொருளாதார நிலை  ஓரளவு சாதகமாக இருக்கும். பணப்புழக்கம் நீங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு திருப்திகரமாக இருக்க வாய்ப்பில்லை. . எனவே உங்கள் செலவுகளை கட்டுப்படுத்துவதன் மூலம் சேமிப்பை அதிகரிக்க முடியும். நீங்கள் வாங்கிய கடனை அடைப்பதற்கு இந்த மாதம் உகந்த நேரம் ஆகும். 

உங்கள் நிதிநிலை மேம்பட :பிருஹஸ்பதி பூஜை 

கடகம் ஜூலை மாத வேலை :

நீங்கள் பணி செய்பவராக இருந்தால் இந்த மாதம் நீங்கள் சிறப்பாகப் பணியாற்றுவீர்கள். உங்கள் செயல் திறன் கண்டு மேலதிகாரிகள் உங்களைப் பாராட்டுவார்கள். அவரின் ஆதரவு மூலம் நீங்கள் பணியில் முன்னேற்றம் காண்பீர்கள். நீங்கள் கடமை உணர்வுடனும் கட்டுப்பாடுடனும்  பணியாற்றுவீர்கள். என்றாலும் பணியிடத்தில் சில பிரச்சினைகளை சந்திப்பீர்கள். நீங்கள் கவனமாக நடந்து கொள்வதன் மூலம் உங்கள் மதிப்பை பாதுகாத்துக் கொள்ள இயலும். 
உங்கள் வேலை மற்றும் தொழிலில் மேம்பட : சனி பூஜை 

கடகம் ஜூலை மாத தொழில் :    

தொழில் மற்றும் வியாபராம் செய்யும் கடக ராசி அன்பர்கள் தங்கள் தொழில் சிறப்பாக நடப்பதைக் கண்டு மனம் மகிழுவார்கள். கூட்டுத் தொழில் செய்பவர்களும் இந்த மாதம் சிறப்பாக செயல்படுவார்கள். வெளிநாட்டு தொடர்புடைய தொழில் செய்பவர்கள் தங்கள் தொழில் மூலம்  கணிசமான லாபம் காண்பார்கள். தொழில் குறித்த முக்கிய முடிவுகளை யோசித்து எடுக்க வேண்டும். 

கடகம் ஜூலை மாத தொழில் வல்லுனர்கள் :    

இந்த மாதம் நீங்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.  உங்கள் செயல்திறன் கூடும். தொழிலில் உங்கள் ஆர்வம் அதிகரிக்கும். நீங்கள் துடிப்புடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். உங்கள் வேகம் காரணமாக  பணியில் தவறுகள் ஏற்பட  வாய்புள்ளது என்ற காரணத்தால் கவனமாகப் பணியாற்ற வேண்டும். நீங்கள் தொழில் குறித்த பயணங்களை மேற்கொள்வீர்கள். அதன் மூலம்  நீங்கள் ஆதாயம் பெறுவீர்கள். நீங்கள் பிறருக்கு எடுத்துக்காட்டாக விளங்குவீர்கள்.  

கடகம் ஜூலை மாத ஆரோக்கியம்:

உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். வேலை பளு காரணமாக அதிக சோர்வு மற்றும் மந்த நிலை ஏற்படும். உங்கள் சோர்வை நீக்கி ஆரோக்கியமான வாழ்விற்கு  , தினமும்  உடற்பயிற்சி மற்றும் தியானம் மேற்கொள்வது சிறப்பு. 
உங்கள் ஆரோக்கியம் மேம்பட :அங்காரகன் பூஜை

கடகம் ஜூலை மாத மாணவர்கள் :

மனதில் ஏற்படும் பதட்டம் காரணமாக மாணவர்கள் மனதில் சிறிது மந்த நிலை இருக்கும். இது அவர்களின் நினைவுத் திறன் மற்றும் கவனத் திறனை குறைக்கும் என்பதால் அதில் கவனம் செலுத்த  வேண்டும். இதன் மூலம்  சிறப்பாகக் கல்வி பயில இயலும்  ஆசிரியர் மற்றும் பெற்றோர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்கள் உங்களை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்லும்.  

கல்வியில் சிறந்து விளங்க :விநாயகர் பூஜை 

சுப நாட்கள் : 1, 4, 7, 15, 16
அசுப நாட்கள் : 2, 3, 9, 10, 17, 18, 25, 26, 27, 28


banner

Leave a Reply