சிம்மம் ஜூலை மாத ராசி பலன் 2020 | July Matha Simmam Rasi Palan 2020

சிம்மம் ராசி ஜூலை மாத பொதுப் பலன்கள்:
சிம்ம ராசி அன்பர்களே! இது உங்களுக்கு நன்மை பயக்கும் மாதமாக அமையும். பணியில் இருப்பவர்கள் முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம். தொழில் முயற்சிகளும் மிகவும் நம்பிக்கைக்குரியதாக இருக்கும். எதிர்காலத்தில் நன்மை பயப்பதாகவும் திகழும். வேலை மற்றும் தொழிலில் பல இலாபகரமான வாய்ப்புகளையும், இப்பொழுது நீங்கள் பெறலாம். ஆனால், சில நேரங்களில் பணியிடச் சூழல் உங்கள் பொறுமையை சோதிக்கக்கூடும். ஆயினும், நம்பிக்கையை இழக்காமல், நீங்கள் கடினமாக உழைத்தால், அதிக உற்பத்தித் திறனை அடைய இயலும். குடும்ப விஷயங்களைப் பொறுமையுடன் கையாள்வது நல்லது. இளைய உடன்பிறப்புகளின் காரணமாக, நீங்கள் சில இழப்புகளை சந்திக்க நேரலாம். உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ஆனால் தாயின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.ஜோதிடம், ராசி பலன், நட்சத்திர பலன், இன்றைய பஞ்சாங்கம், வார ராசி பலன்கள், வருடாந்திர ராசி பலன்கள், பரிகாரங்கள் பற்றி மேலும் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.
காதல் மற்றும் திருமண வாழ்க்கை:
காதல் மற்றும் திருமண உறவு சிறப்பாகவே இருக்கும். நீங்கள் உங்கள் உறவுகளிடம், அன்புடனும், அனுசரிப்புடனும் நடந்து கொள்வீர்கள். நெருக்கமானவர்களுடன், நேரத்தை, இனிமையாகச் செலவிட்டு மகிழ்வீர்கள். திருமணமாகாதவர்கள் ஆலயங்களுக்குச் சென்று வருவதன் மூலம், உங்களின் திருமணம் விரைவில் கை கூடுவதைக் காணலாம்.
நிதி நிலை
பண விஷயங்களில் படிப்படியான முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். தொழில் அல்லது வியாபாரத்தில் நீங்கள் கணிசமான லாபமும் ஈட்டலாம். எதிர்காலத்திற்கான அதிக முதலீடுகளைச் செய்யக்கூடிய நிலையிலும், இப்பொழுது நீங்கள் இருப்பீர்கள். எனவே, பல வகையிலும், இந்தக் காலகட்டம் உங்களுக்கு ஒரு லாபகரமான ஒன்றாக இருக்கும்.
வேலை
பணித் துறையில் உள்ள சிம்ம ராசி அன்பர்களுக்கு, இது முன்னேற்றகரமான காலமாக இருக்கும். ஆனால் அலுவலகத்தில் சில சிக்கல்கள் எழும் வாய்ப்புள்ளது. எனினும், அவை விரைவாக, வந்த வேகத்திலேயே மறைந்து விடக்கூடும். உங்களில் சிலருக்கு இப்பொழுது இடமாற்றங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. உங்களுக்குக் கீழ் பணி புரிபவர்களை நல்ல முறையில் நடத்துவது, உங்களுக்குப் பயன் தருவதாக அமையும்.
தொழில்
தொழில் அல்லது வியாபாரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணலாம். நீங்கள் இப்போது மேற்கொள்ளும் தொழில் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளிலும், உங்கள் செயல்பாடு சிறப்பாக இருக்கும். இருப்பினும், சில நேரங்களில் உரிய பலன்கள் தாமதமாகக் கிடைக்கலாம். எனினும், அது நீடித்த வெற்றியாக இருக்கும் என்பது உறுதி.
தொழில் வல்லுனர்
உங்கள் செயல்திறன், பல வெற்றி வாய்ப்புகளை உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும். இப்பொழுது உங்கள் செயல்பாடும், பிறர் வியந்து போகும் வண்ணம் அமையும். இது, உங்கள் தன்னம்பிக்கையை மேம்படுத்தி, உங்கள் செயல்திறனை மேலும் ஊக்குவிக்கும்.
ஆரோக்கியம்
உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும். சிறு பிரச்சினைகள் எழுந்தாலும், அவையும், உடனடியாக சீராகி விடும். பச்சைக் காய்கறிகள் உட்கொள்வதன் மூலம் உங்கள் ஆற்றல் பெருகும். அதன் மூலம் நீங்கள் மிகுந்த உற்சாகத்துடன் செயலாற்றும் வாய்ப்பு ஏற்படும்.
மாணவர்கள்
மாணவர்களுக்கு இது வழக்கமான மாதம் எனலாம். இப்பொழுது நீங்கள், உங்கள் சிந்தனையையும், மன ஓட்டத்தையும் கட்டுப்படுத்துவது அவசியம். இது, கல்வியில் நீங்கள் ஒருமுகப்பட்ட கவனம் செலுத்த உதவும். சக மாணவர்கள் மற்றும் நண்பர்களுடன் நல்லுறவு பேணுவதும் நன்மை தரும். இவை, உங்கள் கல்வித் தகுதியை மேம்படுத்த உதவும்.
சுப தினங்கள் : 5,6,14,15,19,20
அசுப தினங்கள் : 7,8,11,12,13,21,22
பரிகாரம்:
ஆலயம் சென்று, சிவபெருமான் மற்றும் ஸ்ரீ கால பைரவரை வழிபடுதல்.
சனி, குரு, ராகு மற்றும் கேது பகவானுக்கு பூஜை மற்றும் ஹோமம் செய்தல்.
ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்தல்
