AstroVed Menu
AstroVed
search
search

கடகம் ஜூலை மாத ராசி பலன் 2020 | July Matha Kadagam Rasi Palan 2020

dateJune 8, 2020

கடகம் ராசி ஜூலை மாத பொதுப் பலன்கள்:

கடக ராசி அன்பர்களுக்கு இந்த மாதம், பொருளாதார ரீதியாக பல நற்பலன்களை அளிப்பதாக அமையக் கூடும். ஆனால், அத்துடன் கூட, சில சோதனைகளையும் இது அளிக்கக் கூடும். குடும்ப வாழ்க்கையில் சில தவறான புரிதல்களுக்கான வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் ஒரே நேரத்தில் பல பணிகளைச் செய்ய வேண்டியிருக்கலாம். எனவே, பணியில் ஆழ்ந்த கவனம் தேவைப்படும். பொதுவாகவே,  உங்கள் தொழிலிலும் எச்சரிக்கை தேவை. பணிச்சுமையும் அதிகமாக  இருக்கலாம். இதனால், உங்கள் தனிப்பட்ட தேவைகளுக்கு போதுமான நேரத்தை ஒதுக்க இயலாமல் போகலாம். இதன் விளைவாக, சில ஆரோக்கியப் பிரச்சினைகளும் உங்களுக்கு ஏற்படலாம். இவை செலவுகளுக்கும் வழிவகுக்கலாம்.  உங்களில் சிலர்,  சிறு பயணங்களை மெற்கொண்டு, இவை தொடர்பாக செலவுகளையும் செய்ய நேரிடலாம். ஆனால் இது போன்ற எந்த சவாலையும், இப்பொழுது நீங்கள் நம்பிக்கையுடன் எதிர் கொண்டு சமாளிப்பீர்கள். ஜோதிடம், ராசி பலன், நட்சத்திர பலன், இன்றைய பஞ்சாங்கம், வார ராசி பலன்கள், வருடாந்திர ராசி பலன்கள், பரிகாரங்கள் பற்றி மேலும் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.

காதல் மற்றும் திருமண வாழ்க்கை : 

காதலுக்கு இது சாதகமான காலகட்டமாக இருக்கும். உங்கள் உறவில் பாசப் பிணைப்பும், நெருக்கமும் நிறைந்திருக்கும். ஆனால், உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவிலும், அவரைக் கையாள்வதிலும், நீங்கள் கவனமாக இருக்க வேண்டியிருக்கும். குடும்பத்தினருடன் நல்லுறவைப் பராமரிப்பதும் அவசியம்.

நிதி நிலை

இந்தக் காலகட்டத்தில், உங்கள் பொருளாதார நிலை முன்னேற்றம் அடையும் என்று நீங்கள் நம்பலாம். தொழில் தொடர்பான உங்கள்  முயற்சிகள் லாபம் தரக்கூடும். அதே நேரம், தாயின் வழியிலும் உங்களுக்கு லாபங்கள் கிடைக்கலாம். இப்பொழுது வீணான செலவினங்களும் இருக்கலாம் என்றாலும், பொருளாதார ரீதியாக இது, நம்பிக்கைக்குரிய மாதமாக அமையக்கூடும் என்பதில் ஐயமில்லை. 

வேலை:

இந்த நேரத்தில் உங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பினை நீங்கள் முறையாகப் பயன்படுத்தினால், பணியில் நீங்கள் நல்ல முன்னேற்றம் காணலாம். மேலும், அலுவலகத்தில், உங்களுக்குக்  கீழ் நிலையில் இருக்கும் ஊழியர்களுடன் நல்லுறவு கொள்ள முயற்சி செய்யுங்கள் உங்களுக்கு அளிக்கப்படும் பணிகள்  எதையும் நிலுவையில் வைக்காமல், அனைத்து வேலைகளையும் குறித்த நேரத்திற்குள் முடிக்க முயற்சி மேற் கொள்ளுங்கள். இவை உங்கள் முன்னேற்றத்திற்குத் துணை புரியும்.      

தொழில்:

தொழிலில் மிதமான அதிர்ஷ்டம் காணலாம். உங்கள் திறனும், செயல்பாடும் பிறர் கவனத்தை ஈர்த்து, அவர்களையும் உங்களைப் பின்பற்றத் தூண்டும். அதே நேரத்தில், உங்கள் போட்டியாளர்களின் கடும் போட்டியையும், நீங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இந்த நேரத்தில் ஏற்படும் சிறிய தடைகளும், பிரச்சினைகளும் கூட, உங்கள் தன்னம்பிக்கையை பலவீனப்படுத்தி விடக்கூடும். எனவே, எச்சரிக்கையாக இருப்பது நல்லது. 

தொழில் வல்லுனர்:

கடக ராசி தொழில் வல்லுனர்கள், தங்களது தனிப்பட்ட திறன்கள் காரணமாக, இந்த மாதம் முன்னேற்றம் காண இயலும். உங்களில் சிலருக்கு வேலையில் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன. வேறு சிலருக்குப் புதிய, நல்ல வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன. அலுவலகத்தில் உங்கள் செயல்பாடு வலுவாக இருக்கும் என்பதால், இந்தக் காலகட்டம் உங்களுக்கு மிகவும் சாதகமாக அமையக் கூடும்.

ஆரோக்கியம்:

உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்வது உடல் வலிமையை அதிகரிக்க உதவும். இதனால் உங்கள் நோய் எதிர்ப்புத் திறன் மேம்படும். இது, சிறு உபாதைகளை எதிர்த்துப் போராடும் ஆற்றலை உங்களுக்கு அளிக்க உதவும். 

மாணவர்கள்:

கல்வி பயிலும் மாணவ மாணவியர்களுக்கு இது, ஒரு நம்பிக்கைக்குரிய மாதமாக இருக்கும். படிப்பில்  நீங்கள் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். மேலும், உங்களது விரைந்து கற்கும் திறனும் மேம்படும். கல்வியில் நீங்கள் சிறந்து விளங்க, உங்களது இந்த கற்றல் திறன் உதவக் கூடும். உங்கள் தைரியமான அணுகுமுறையும், இந்த நேரத்தில் உங்களுக்கு உதவியாக இருக்கும். 

சுப தினங்கள்: 2,3,4,11,12,13,16,17,18,30,31 
அசுப தினங்கள்: 5,6,9,10,19,20 

பரிகாரம்:

திருப்பதி ஏழு மலையானை தரிசனம் செய்து பூஜை செய்தல்.  ஸ்ரீ ஆஞ்சநேயரையும், பூஜை செய்து, வழிபடுதல். 
சனி, குரு, ராகு மற்றும் கேது பகவானுக்கு பூஜை மற்றும் ஹோமம் செய்தல். 
மீன்களுக்கு உணவிடுதல். ஏழைக் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு உதவுதல்.  


banner

Leave a Reply