AstroVed Menu
AstroVed
search
search

ரிஷபம் ஜூலை மாத ராசி பலன் 2021 | July Matha Rishabam Rasi Palan 2021

dateJune 3, 2021

ரிஷபம் ஜூலை மாத பொதுப்பலன் 2021:

ரிஷப ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் குடும்ப சூழ்நிலை சிறப்பாக இருக்கும். திருமணமான தம்பதிகள் இடையே ஒற்றுமை பெருகும். நல்லிணக்க உறவு மேம்படும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். இந்த மாதம் உங்கள் பணப் பிரச்சினைகள் மற்றும் கடன் பிரச்சினைகள் தீரும். பணப்பற்றாக் குறை ஏதுமின்றி உங்கள் நிதிநிலையை நீங்கள் சமாளிப்பீர்கள். இந்த மாதம் புதிய கடன்கள் ஏதும் வாங்காதீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியிடத்தில் சாதகமான சூழ்நிலையை எதிர்பார்க்கலாம். சிறப்பாகப் பணியாற்றி மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவார்கள்.    சுய தொழில் செய்யும் ரிஷப ராசி அன்பர்கள் தங்கள் தொழில் துறையில் பிரகாசிப்பார்கள். மாணவர்கள் இந்த மாதம் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள். உங்கள் ஆரோக்கியம் இந்த மாதம் சிறப்பாக இருக்கும்.  மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.

ரிஷபம் ஜூலை மாத காதல் / குடும்ப உறவு 

நீங்கள் திருமணம் ஆகாதவர் என்றால் உங்கள் திருமணம் இந்த மாதம் நிச்சயம் ஆகும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை பெருகும். நல்லிணக்க உறவு மேம்படும். குடும்ப உறுப்பினர்களுடன் நல்லிணக்க உறவு காணப்படும். குழந்தைகளுடன் உங்கள் உறவு சிறப்பாக இருக்கும்.  குழந்தைகளுக்கு நல்ல வழிகாட்டிகளாக இந்த மாதம் நீங்கள் செயல்படுவீர்கள். 

திருமண உறவில் நல்லிணக்கம் காண  : சந்திரன் பூஜை 

ரிஷபம் ஜூலை மாத நிதிநிலை:  

பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். இந்த மாதம் உங்கள் பணப் பிரச்சினைகள் மற்றும் கடன் பிரச்சினைகள் தீரும். உங்கள் நிதிநிலை கட்டுக்குள் இருக்கும். தொழில் மூலம் லாபம் கிட்டுவதால் உங்கள் வருமானம் பெருகும். கையில் அதிக பணப்புழக்கம் இருக்கும். உங்கள் தொழிலை நீங்கள் விரிவுபடுத்த நினைப்பீர்கள். விவசாய நிலம் அல்லது வண்டி வாகனங்களை வாங்குவீர்கள். பண விஷயங்களில் குடும்ப உறுப்பினர்களின் தலையீடு காணப்படும். இது உங்களுக்கு சற்று ஏமாற்றத்தை அளிக்கும்.

உங்கள் நிதிநிலை மேம்பட : சுக்கிரன் பூஜை 

ரிஷபம் ஜூலை மாத வேலை:

பணியிடச் சூழல் சிறப்பாக இக்கும். சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறும் வகையில் நீங்கள் பணியாற்றுவீர்கள். உங்கள் கடின உழைப்பிற்கான அங்கீகாரத்தை நீங்கள் பெறுவீர்கள். பணியிடத்தில் காணப்படும் பிரச்சினைகளுக்கு நீங்கள் தீர்வு காண்பீர்கள். அதிக வேலை காரணமாக பதட்டம் ஏற்படும். உங்கள் வார்த்தைகளில் கவனம் தேவை.  

ரிஷபம் ஜூலை மாத தொழில்:  

உங்கள் தொழில் சிறப்பாக இருக்கும். குறிப்பாக வெளிநாட்டு     தொடர்புடைய தொழில் செய்பவர்கள் சிறந்த லாபம் காண்பார்கள். நீங்கள் கூட்டுத் தொழில் செய்பவர் என்றால் இந்த மாதம் சற்று  ஏற்ற இறக்கமான நிலை காணப்படும்.   என்றாலும் சிறிது லாபம் கிட்டும்.  உணவு சார்ந்த தொழில் செய்பவர்கள் இந்த மாதம் சிறந்த லாபம் காண்பார்கள். பங்குச் சந்தை மூலம் தொழில் செய்பவர்கள் ஓரளவு லாபம்  காண்பார்கள். 

ரிஷபம் ஜூலை மாத தொழில் வல்லுனர்கள்:

புதிய தொழில் ஒப்பந்தங்கள் இந்த மாதம் உங்களை நாடி வரும். அதன் மூலம் நீங்கள் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். சிறந்த வருமானமும் ஆதாயமும் பெறுவீர்கள். உங்கள் பொருளாதார அந்தஸ்து உயரும். நீங்கள் சிறப்பாகச் செயலாற்ற உங்கள் தன்னம்பிக்கை உதவு செய்யும். 

வேலை மற்றும் தொழிலில் மேம்பட : புதன் பூஜை 

ரிஷபம் ஜூலை மாத ஆரோக்கியம்:

இந்த மாதம் நீங்கள் சிறந்த ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள் என்றாலும். அதிக பணிகள் காரணமாக பதட்ட நிலை இருக்கும். சிலருக்கு கழுத்து வலி ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். உங்கள் உணவில் கவனம் செலுத்துங்கள்.

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : சனி பூஜை 


banner

Leave a Reply