AstroVed Menu
AstroVed
search
search

மேஷம் ஜூலை மாத ராசி பலன் 2021 | July Matha Mesham Rasi Palan 2021

dateJune 3, 2021

மேஷம் ஜூலை மாத பொதுப்பலன் 2021 :

மேஷ ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்களுக்கு சிறப்பான  பலன்கள் கிட்டும். உங்கள் மனதில் தைரியம் நிறைந்து இருக்கும்  நீங்கள் துணிவுடன் செயல்படுவீர்கள்.  குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். குறிப்பாக உங்கள் இளைய உடன் பிறப்புகளுடன் உங்கள் உறவு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு மரியாதை இருக்கும். உங்கள் உத்தியோகத்தில் நீங்கள் சிறப்பாகச் செயல்படுவீர்கள்.  உங்கள் பேச்சுத் திறன் மற்றும் தகவல் தொடர்புத் திறன் மூலம் நீங்கள் பணியில் முன்னேற்றம் காண்பீர்கள். பணியிடத்தில் நீங்கள் கடினமாக உழைப்பீர்கள்.  நீங்கள் மிகவும் கவனமாகச் செயல்பட வேண்டும். தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக நடக்கும்.  இந்த மாதம் நீங்கள் அதிக ஆதாயங்களைப் பெறுவீர்கள். உங்கள் ஆரோக்கியம். கல்வி, மற்றும் வேலை என அனைத்தும் சிறப்பாக இருக்கும். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.

மேஷம் ஜூலை மாத காதல் / குடும்பம்:

மேஷ ராசி இளம் வயது  அன்பர்களின் காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.  கணவன் மனைவி இடையே உறவு  சிறப்பாக இருக்கும் என்றாலும் அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் நல்லுறவை தக்க வைத்துக் கொள்ள முடியும். உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆசைகள் மற்றும் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நீங்கள் எதிர்பாலினத்தவரைக் கவர்வீர்கள்.

திருமண உறவில் நல்லிணக்கம் காண :சுக்கிரன் பூஜை 

மேஷம் ஜூலை மாத நிதிநிலை :

இந்த மாதம் உங்கள் நிதிநிலை வரவேற்கத்தக்கதாக இருக்கும். பணத்தை நீங்கள் சிறப்பாகக் கையாள்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆசைளை நிறைவேற்றுவீர்கள். வேலை மற்றும் செய் தொழில் மூலம் உங்கள் பொருளாதார நிலை உயரும். சில ஆடம்பர செலவுகளை நீங்கள் மேற்கொள்வீர்கள். அதே சமயத்தில் பணத்தை சேமிக்கவும் சேர்க்கவும் செய்வீர்கள்..

உங்கள் நிதிநிலை மேம்பட: குபேரன் பூஜை 

மேஷம் ஜூலை மாத வேலை :

பணியில் இருக்கும் மேஷ ராசி அன்பர்கள் தங்கள் உத்தியோக வாழ்கை சிறப்பாக இருக்கக் காண்பார்கள். பணியிடத்தில் நீங்கள் உங்களின் கடின உழைப்பு மற்றும் பேச்சுத் திறன்  மூலம் மேலதிகாரிகளின் அங்கீகாரத்தைப் பெறுவீர்கள். நீங்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றுவீர்கள். உத்தியோகத்தின் மூலம் நீங்கள் சிறந்த ஆதாயம் பெறுவீர்கள். குடும்ப பிரச்சினைகள் காரணமாக பணியிடத்தில் உங்களால்  சிறப்பாக கவனம் செலுத்த முடியாது. இது உங்கள் செயல்திறனை பாதிக்கும். 

மேஷம் ஜூலை மாத தொழில் :

இந்த மாதம் உங்கள் தொழில் சிறப்பாக இருக்கும். குறிப்பாக கூட்டுத் தொழில் இந்த மாதம் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் இருக்கும். தொழில் குறித்த எந்தவொரு முயற்சியையும் நீங்கள் பொறுமையாக எடுக்க வேண்டும்.  தொழில் குறித்து  முடுவுகளை குடும்ப உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசித்து  எடுப்பது நல்லது.

மேஷம் ஜூலை மாத தொழில் வல்லுனர்கள்:

மேஷ ராசி தொழில் வல்லுனர்களுக்கு இந்த மாதம் சிறந்த மாதமாக இருக்கும்.  நீங்கள் கடின முயற்சி செய்து தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். நீங்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு தொழிலில் மேன்மை அடைவீர்கள். நீங்கள் துணிவுடன், அர்ப்பணிப்பு உணர்வுடன் தொழிலை மேற்கொண்டு நல்ல முறையில் முடித்து வெற்றியும் காண்பீர்கள். 

வேலை மற்றும் தொழிலில் மேம்பட : குரு பூஜை 

மேஷம் ஜூலை மாத ஆரோக்கியம் :

இந்த மாதம்உங்கள் ஆரோக்கியம்  சிறப்பாக இருக்கும். என்றாலும் தலைவலி, காய்ச்சல் போன்ற சிறு சிறு பிரச்சினைகள் வந்து போகும். பெரிய அளவிலான பாதிப்புகள் ஏதும் வருவதற்கு வாய்ப்பில்லை. என்றாலும் சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்தால் தான் சிறப்பாக செலாற்ற முடியும்.  எனவே  உங்கள் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.  குறிப்பாக கண்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். 

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : சூரியன் பூஜை 

மேஷம் ஜூலை மாத மாணவர்கள் :

கல்வி பயிலும் மேஷ ராசி மாணவர்களுக்கு இந்த மாதம் சிறந்த பலன்கள் கிடைக்கும். போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள் சிறப்பாகத் தேர்வு எழுதி வெற்றி காண்பார்கள். கல்வி உதவித் தொகை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் தங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறக் காண்பார்கள். மாணவர்களின் அறிவுத் திறன் பெருகும். மேற்படிப்பு படிக்க நினைக்கும் மாணவர்கள் சிறந்த முறையில் பயில்வார்கள். 

கல்வியில் மேன்மை பெற: ஹனுமான் பூஜை 
 
சுப நாட்கள் :   2, 3, 4, 7, 8, 9, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 23, 27.
அசுப நாட்கள் :   1, 5, 6, 10, 11, 12, 21, 22, 24, 25, 26, 28, 29, 30, 31.


banner

Leave a Reply