AstroVed Menu
AstroVed
search
search

மிதுனம் ஜூலை மாத ராசி பலன் 2021 | July Matha Mithunam Rasi Palan 2021

dateJune 3, 2021

மிதுனம் ஜூலை மாத பொதுப்பலன்கள் 2021 :

மிதுன ராசி அன்பர்களே ! இந்த மாதம் நீங்கள் நல்ல பலன்களைக் காண்பீர்கள். குறிப்பாக குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்று கூறலாம். சிறு சிறு பிரச்சினைகள் வந்து போகும். தம்பதிகள் ஒற்றுமையுடன் காணப்படுவார்கள். நீங்கள் பணியில் இருப்பவர் என்றால் இந்த மாதம் வேலை பளு அதிகமாக இருக்கும். என்றாலும் சமாளித்து சிறப்பாகப் பணியாற்றி நீங்கள் வெற்றி காண்பீர்கள். பணியிடத்தில்  மேலதிகாரிகளின்   பாராட்டைப் பெறுவீர்கள். பண விஷயத்தைப் பொறுத்தவரை இந்த மாதம் வரவு இருக்கும் என்ற போதிலும் குடும்பத்தில்  செலவுகள் அதிகரிக்கும். தொழில் செய்பவர்கள் அதிக வாடிக்கையாளர்களைப் பெறுவதன் மூலம் லாபம் காண்பார்கள். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கடின முயற்சிகளை மேற்கொண்டு தொழிலில் வெற்றி பெறுவார்கள். லாபமும் காண்பார்கள். மாணவர்கள் பொறுமையுடன் செயல்பட்டால் வெற்றி பெற இயலும். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உடற்பயிற்சி மற்றும் தியானம் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.

மிதுனம் ஜூலை மாத காதல்/குடும்பம் :

குடும்பம் என்றால் சண்டை சச்சரவுகள் இருக்கத் தான் செய்யும். என்றாலும் இந்த மாதம் நீங்கள் அவர்களுடன்  வாக்கு வாதங்களில் ஈடுபடாதீர்கள். நீங்கள் திருமணத்திற்குக் காத்திருப்பவர் என்றால் இதுவரை திருமணம் தாமதப்பட்டு, தடங்கல் பட்டு வந்த உங்கள்  திருமணம் நிச்சயமாக வாய்ப்பு உண்டு. திருமணமான தம்பதிகள் இடையே ஒற்றுமை மற்றும் நல்லுறவு  காணப்படும். குடும்ப உறுப்பினர்களுடன்  உங்கள் பொன்னான நேரத்தை செலவழிப்பதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

திருமண உறவில் நல்லிணக்கம் காண :துர்கா பூஜை 

மிதுனம் ஜூலை மாத நிதிநிலை:

உங்கள் நிதிநிலையைப் பொறுத்தவரை இந்த மாதம் நீங்கள் வரவு, லாபம் மற்றும் சிறந்த ஆதாயங்களைப் பெறுவீர்கள். பங்குச் சந்தை மூலம் லாபம் கிட்டும். புதிய தொழில், கூட்டுத்  மூலம் நீங்கள் பண வருமானம் பெறுவீர்கள். நீங்கள் பிறருக்கு கடனாகக் கொடுத்த தொகைகளை வசூலிப்பதில் சில  சிக்கல்களை சந்திப்பீர்கள்.  

உங்கள் நிதிநிலை மேம்பட : சுக்கிரன் பூஜை 

மிதுனம் ஜூலை மாத வேலை:

நீங்கள் பணியில் இருப்பவர் என்றால் இந்த மாதம் வேலைப் பளு அதிகம் இருக்கும். என்றாலும் நீங்கள் சிற்பபாகச் செயல்பட்டு  முன்னேற்றம் காண்பீர்கள். பணியிடத்தில் உங்கள் பேச்சு மற்றும் வார்த்தைகளில் கவனம் தேவை. உங்கள் கவனமற்ற  பேச்சின் காரணமாக உங்கள் மதிப்பு குறையும் வாய்ப்பு உள்ளது. எனவே கவனம் தேவை.  பணியிடத்தில் மேலதிகாரிகளின் அங்கீகாரம் மற்றும் பாராட்டு  கிடைக்கப் பெறுவீர்கள். பணிச் சுமை காரணமாக உங்கள் செயல் திறன் பாதிக்காத வகையில் கவனம் செலுத்துங்கள்.  உங்கள் தலைமை ஏற்கும் பண்பு காரணமாக இந்த மாதம் உங்கள் பொறுப்புகளை திறமையுடன் சரிவர  செயலாற்றுவீர்கள். 

வேலை மற்றும் தொழிலில் மேன்மை பெற : சனி பூஜை 

மிதுனம் ஜூலை மாத தொழில் :  

இந்த மாதம் நீங்கள் மேற்கொள்ளும் தொழிலில் சிறப்புடன் செயல்படுவீர்கள். அதன் மூலம் சிறந்த லாபங்கள் கிட்டும். தொழில் என்றால் ஒரே சீராக இருக்கும் என்று கூற முடியாது என்பதை இந்த மாதம் நீங்கள் உணர்வீர்கள்.  உங்கள் தொழில் முன்னேற்றத்தில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் நீங்கள் எதிர் பார்த்த அளவு முன்னேற்றமும் கிட்டும். தொழில் சம்பந்தமான பயணங்கள் மூலம் நீங்கள் நன்மை  பெறுவீர்கள். அயல்நாட்டு தொடர்பு தொழில் அதாவது ஏற்றுமதி தொழிலில் இருப்பவர்கள் ஓரளவு லாபம் காண்பார்கள். தகவல் தொடர்புத் துறையில் இருக்கும் மிதுன ராசி அன்பர்கள் இந்த மாதம் சிறந்த வெற்றிகளைக் காண்பார்கள்.

மிதுனம் ஜூலை மாத தொழில் வல்லுனர்கள்:

மிதுன ராசி தொழில் வல்லுனர்கள் முன்னேற்றங்களைக் காண்பார்கள். நீங்கள் புதிதாக தொழில் முதலீடுகளை மேற்கொள்வீர்கள்.  அது உங்களுக்கு லாபத்தை அளிக்கும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயரும். தொழில் சார்ந்த ஆலோசனைகளை மேற்கொள்ளும் போது நீங்கள் வாக்கு வாதங்களில் ஈடுபடாமல் கவனமாக இருங்கள். 

மிதுனம் ஜூலை மாத ஆரோக்கியம்:  

உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.  என்றாலும் அதிக பணிகள்  காரணமாக முதுகுவலி,  மூட்டு வலி போன்ற உபாதைகளை நீங்கள் சந்திக்க நேரும். தொடர்ந்து உடற்பயிற்சி மற்றும் தியானம் மேற்கொள்வதன் மூலம் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஆரோக்கியமான சத்தான உணவை உண்ணுங்கள்.

உங்கள் ஆரோக்கியம் மேம்பட :சிவன் பூஜை 

மிதுனம் ஜூலை மாத மாணவர்கள் :  

மாணவர்களுக்கு இது ஒரு சாதகமான பலன் தரும்   மாதம் ஆகும். கல்வியில் பிரகாசிக்கக் கூடிய தருணம் இது.  ஆசிரியர்களின்  ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலைக் கேட்டு நடந்து கொண்டால் கல்வியில் சிறப்பாகப் பரிமளிக்கலாம். உங்கள் கவனிப்புத் திறன் மற்றும் கிரகிக்கும் திறன் அதிகமாக இருக்கும். உயர் கல்வி படிக்கும் மாணவர்கள் ஆர்வமுடன் படிப்பார்கள். வெளிநாட்டில் கல்வி பயிலும் மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள்.            

கல்வியில் சிறந்து விளங்க : புதன் பூஜை 

சுப நாட்கள் : 1, 4, 7, 15, 16
அசுப நாட்கள் : 8, 9, 10, 23, 24, 25, 27


banner

Leave a Reply