AstroVed Menu
AstroVed
search
search

ரிஷபம் ஜூலை மாத ராசி பலன் 2020 | July Matha Rishabam Rasi Palan 2020

dateJune 8, 2020

ரிஷபம் ராசி ஜூலை மாத பொதுப்பலன்கள்:

ரிஷப ராசி அன்பர்களுக்கு, இது, அதிர்ஷ்டங்கள் தரும் மாதம் எனலாம். தொழில் லாபகரமாக நடக்கும். முன்னோர்களின் சொத்து தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வரக்கூடும். குழந்தைகள் நன்றாகக் கல்வி கற்பார்கள். இது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். தந்தையின் ஆரோக்கியம் சீராக இருக்கும். உங்கள் மதிப்பும், கௌரவமும் அதிகரிக்கும். உங்களில் சிலருக்கு, ஏதோ ஒரு வகையில், இப்போது அதிர்ஷ்டம் கிடைக்க வாய்ப்பும் உள்ளது. உங்கள் வருமானம் சுமாராக இருக்கும். இந்த நிலையில், வெளியிடங்களுக்குப் பயணம் செய்ய அதிக பணம் செலவு செய்ய நேரிடும். வேலையிலும் சில தடைகளை சந்திக்க நேரிடலாம், ஆனால் இவை தற்காலிகத் தடைகளாகவே இருக்கும்.  உங்களின் சில செயல்கள் காரணமாக, இப்பொழுது நீங்கள் சிலரை விரோதித்துக் கொள்ள நேரலாம். எனவே, எச்சரிக்கையுடன் இருக்கவும். குடும்ப வாழ்க்கையிலும் அமைதி கெட வாய்ப்புள்ளது. ஆகவே, தேவையற்ற பேச்சுக்களை நீங்கள் தவிர்த்து விடுவது நல்லது. சிறிய அளவிலான ஆரோக்கியப் பிரச்சினைகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. ஜோதிடம், ராசி பலன், நட்சத்திர பலன், இன்றைய பஞ்சாங்கம், வார ராசி பலன்கள், வருடாந்திர ராசி பலன்கள், பரிகாரங்கள் பற்றி மேலும் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.  



காதல் மற்றும் திருமண வாழ்க்கை:

சிலருக்கு மனதில் பதட்டம் உருவாகலாம். குடும்பப் பிரச்சினைகளை, நீங்கள் மிகுந்த பொறுமையுடன் கையாள்வது அவசியம். உங்கள் அன்பை வெளிப்படுத்துவதாக இருந்தால் கூட, அதை நீங்கள் சஞ்சலமற்ற, அமைதியான மனநிலையுடன் செய்வது நல்லது. ஆனால் வாழ்க்கைத் துணையுடன் உங்கள் உறவு சுமுகமாக இருக்கும். 

நிதி நிலை:

பொருளாதார ரீதியாக, உங்களுக்கு இது, வரவேற்கத் தக்க மாதமாக இருக்கும். நிதி நிலை ஓரளவு சிறப்பாகவே இருக்கும். வருமானமும், உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்குப் போதுமானதாக இருக்கும். இப்பொழுது நீங்கள், உங்கள் குடும்பத்தினரின் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள்.

வேலை :

உங்கள் கடின உழைப்பு உங்களுக்குத் திருப்தி தரும். பணியிடத்தில் உரிய அங்கீகாரத்தையும் பெற்றுத் தரும். இருப்பினும், உங்கள் நடவடிக்கைகளின் மூலம், இப்பொழுது சிலரை நீங்கள் காயப்படுத்தி விடும் வாய்ப்பு உள்ளது. எனவே, இது குறித்து எச்சரிக்கையாக இருப்பது அவசியம். 

தொழில்:

தொழில் நடவடிக்கைகள் வழக்கம் போல இருக்கும். இப்பொழுது நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இந்தக் காலகட்டத்தில், குறைந்த உழைப்பில் அதிக பலன்களைக் காண்பது என்பது இயலாத செயல் எனலாம். இருப்பினும் மனம் தளர வேண்டாம். குறிப்பாக, புதிய தொழில் தொடங்கும் நேரத்தில் நீங்கள் மன உறுதியுடன் செயல்படுவது அவசியம். 

தொழில் வல்லுநர்:

ரிஷப ராசி தொழில் வல்லுனர்களுக்கு இது மிகவும் சிறந்த மாதம் எனலாம். தொடர் முயற்சிகள் மூலம், நீங்கள் சிறந்த பலன்களைக் காண முடியும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவது, உங்கள் திறமைகளை மேலும் வெளிப்படுத்த உதவும். 

ஆரோக்கியம்:

உங்கள் உடல் நிலையில் கவனம் தேவை. தியானம் மேற்கொள்வது, உடலுக்கு ஓய்வு அளிப்பது போன்றவற்றின் மூலம், உங்கள் ஆரோக்கியத்தை, உங்களால் நன்கு பேணிக் காக்க முடியும். 

மாணவர்கள்:

ரிஷப ராசி மாணவர்களின் கல்வி சீராகவே இருக்கும். உங்கள் அறிவாற்றல் மற்றும் கடின உழைப்பு, உங்கள் பாடங்களை நீங்கள் நன்றாகக் கற்க உதவும். பெற்றோர்களும், ஆசிரியர்களும் கூட, உங்களுக்கு உற்ற துணையாக இருந்து உதவுவார்கள். 

சுப தினங்கள்: 7,8,11,12,13,25,26 
அசுப தினங்கள்: 1,5,6,14,15,27,28,29

பரிகாரம்:

ஆலயம் சென்று, குல தெய்வம் மற்றும் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரை வழிபடுதல்.
சனி, குரு, ராகு மற்றும் கேது பகவானுக்கு ஹோமம் மற்றும் பூஜை செய்து வழிபடுதல். 
பெற்றோர் மற்றும் குருமார்களின் ஆசிகளைப் பெறுதல். ஏழைகள் மற்றும் தேவைப்படுபவர்களூக்கு, மருத்துவ உதவி செய்தல். புற்றுக்குப் பால் ஊற்றுதல். 
 


banner

Leave a Reply