மேஷம் ஜூலை மாத ராசி பலன் 2020 | July Matha Mesham Rasi Palan 2020

மேஷம் ராசி ஜூலை மாத பொதுப் பலன்கள் :
மேஷ ராசி அன்பர்களே! நீங்கள் மேற் கொள்ளும் அனைத்து செயல்களிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய மாதமாக இது அமையும். உங்களில் சிலருக்கு தைரியம் மற்றும் தன்னம்பிக்கை குறையக் கூடும். சில நேரங்களில் உங்கள் மனதில் குழப்பமும் நிறைந்து காணப்படும். உடன் பிறப்புகளுடன் பழகும் பொழுதும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். எனவே, பொதுவாக இப்பொழுது, உங்களது நடவடிக்கைகளில் மிகுந்த கவனம் தேவை. எனினும், பணப்புழக்கம் தாராளமாக இருக்கக் கூடும். குடும்ப வாழ்க்கையும் மகிழ்ச்சிகரமாக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையிலான உறவும் இனிமை தருவதாக அமையும். குறிப்பாக, பெண்கள் மூலம் இப்பொழுது உங்களுக்கு மகிழ்ச்சியும், பல லாபங்களும் கிட்டும் வாய்ப்புள்ளது. தொழிலில், உங்கள் கனவுகளையும், குறிக்கோள்களையும் அடைய மிகவும் கடினமாக முயற்சி செய்வீர்கள். இது, உங்கள் துறையில் நீங்கள் நல்ல லாபங்களை ஈட்ட உதவும். அதே நேரம், அரசாங்கத்துடன் தொடர்புடைய பணிகள் சிறப்பாக செயல்படக் கூடும். பொதுவாக உங்கள் வாழ்க்கை பல வகையிலும் சுமுகமாகவே நடைபெறும். உங்களில் சிலர், ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொள்ளும் வாய்ப்புள்ளது. ஜோதிடம், ராசி பலன், நட்சத்திர பலன், இன்றைய பஞ்சாங்கம், வார ராசி பலன்கள், வருடாந்திர ராசி பலன்கள், பரிகாரங்கள் பற்றி மேலும் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.
காதல் மற்றும் திருமண வாழ்க்கை
உங்கள் காதல் உறவில் அன்பு நிறைந்து இருக்கும். கணவன் மனைவி இடையே நல்ல புரிந்துணர்வும் நிலவும். இதனால் அவர்கள் பாசப் பிணைப்புடன் கூடிய நெருக்கமான உறவை அனுபவிப்பார்கள். எனினும், திருமணத்திற்குக் காத்திருப்பவர்கள், தங்கள் திருமணம் தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
நிதி நிலை
பொருளாதா ரீதியாக நீங்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். வாகனங்கள், வாசனை திரவியங்கள், அழகு சாதனப் பொருட்கள் போன்ற தொழிலில் இருப்பவர்கள், கணிசமான லாபத்தைக் காணலாம். உங்கள் வாழ்க்கைத் துணை மூலம் வருமானம் வரும் வாய்ப்பும் உள்ளது. இந்த மாதம் உங்களது அனைத்துப் பணத் தேவைகளையும், நீங்கள் முழுமையாக நிறைவேற்றிக் கொள்ள முடியும்.
வேலை
தொழிலில் ஏற்றத் தாழ்வுகளை சந்திக்க நேரிடும். மேலதிகாரிகளுடன் பழகுவதிலும், அவர்கள் தொடர்பான விஷயங்களைக் கையாள்வதிலும் மிகுந்த எச்சரிக்கை தேவை. மேலும், உங்கள் பணிகளை முறையாகவும், உரிய காலத்திலும் முடிக்க முயற்சி செய்யுங்கள். உங்களில் சிலர், பணி நிமித்தமான சிறு பயணங்களை மேற்கொள்ள வேண்டி வரலாம்.
தொழில்
தொழில் துறையில் உள்ள மேஷ ராசி அன்பர்கள், இந்த மாதம் சிறு சிக்கல்களை எதிர் கொள்ள நேரிடலாம். ஆயினும், தொழில் மூலம், நம்பிக்கை அளிக்கும் நல்ல பலன்கள் கிட்டும் வாய்ப்புள்ளது. மேலும், கணிசமான இலாபம் ஈட்டவும், உங்கள் நிதி நிலையை மேம்படுத்திக் கொள்ளவும் கூட, இந்த மாதம் உங்களுக்கு உகந்ததாக இருக்கக் கூடும். சனிக்கிழமைகளில் வயதானவர்களுக்கு அன்னதானம் வழங்குவதன் மூலம், நீங்கள் பல நன்மைகளைப் பெறலாம்.
தொழில் வல்லுநர்
தொழில் வல்லுநர்களுக்கு இது, நம்பிக்கைக்குரிய காலமாக இருக்கும். உங்கள் செயல் திறன், அனைத்துப் பணிகளையும் சிறப்பாகச் செய்து முடிக்க உதவும். மேலும், உங்கள் விடாமுயற்சியும், வேலையின் மீது நீங்கள் காட்டும் ஈடுபாடும், உங்களுக்குப் பாராட்டைப் பெற்றுத் தரும். இவை அனைத்தும் உங்களுக்கு, வரவேற்கத்தக்க பணிச்சூழலை ஏற்படுத்தித் தரும்.
ஆரோக்கியம்
உடல் நிலையில் கவனம் தேவை. நரம்பு தொடர்பான சில பிரச்சினைகள், இப்பொழுது உங்களை பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால் இவை நீண்ட காலம் நீடிக்காது. சிலருக்கு இந்த நேரத்தில், நோய்கள் குணமாவதற்கான வாய்ப்பும் உள்ளது. பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்வது, உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஏதுவாக இருக்கும்.
மாணவர்கள்
மாணவர்கள் தங்கள் படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம். சிலர், அவர்களது பாடங்களையோ அல்லது கற்றுக் கொண்டவற்றையோ மறந்து விடக்கூடும். ஆனால், கவனத்துடன் கற்பதன் மூலம், நீங்கள் கண்டிப்பாக வெற்றி பெறலாம். பெற்றோர்கள், நண்பர்கள் போன்றவர்களின் ஆதரவும், இப்பொழுது உங்களுக்குக் கிடைக்கும். எனினும், இந்த மாதம் நீங்கள் உடல்நலத்தில் அக்கறை செலுத்துவது அவசியம்.
சுப தினங்கள் : 5,6,9,10,23,24
அசுப தினங்கள் : 2,3,4,11,12,13,25,26,30,31
பரிகாரம்:
முருகப் பெருமான் மற்றும் ஸ்ரீ நரசிம்மர் பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.
செவ்வாய் (அங்காரகன்), சனி, குரு, ராகு மற்றும் கேது பகவானுக்கு பூஜை மற்றும் ஹோமம் செய்து வழிபடுதல்.
நாய் மற்றும் பறவைகளுக்கு தண்ணீர் அளித்தல். ஏழைகளுக்கு மருத்துவ உதவி செய்தல்.
