மிதுனம் ஜூலை மாத ராசி பலன் 2020 | July Matha Mithunam Rasi Palan 2020

மிதுனம் ராசி ஜூலை மாத பொதுப்பலன்கள்:
மிதுன ராசி அன்பர்களே! உங்களுக்கு இது, ஒரு சிக்கலான மாதமாக இருக்கக் கூடும். பண விஷயங்கள், மற்றவர்களுடன் கசப்பான உணர்வுகளுக்கு வழி வகுக்கக் கூடும். நீங்கள் பல நேரங்களில், மிகவும் குழப்பமாக இருக்கலாம். உங்கள் எண்ணங்களிலும், செயல்களிலும் அதிக தெளிவும் இல்லாமல் போகலாம். இந்த நிலை, வேலை மற்றும் தொழிலில், உங்கள் செயல்திறனை பாதிக்கக் கூடும். நீங்கள் பலவீனத்தாலும் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. எனவே, உங்கள் உடல் மற்றும் மன நிலை இரண்டிலும் சிறப்பு கவனம் தேவை. இப்பொழுது செலவுகளும் அதிகரிக்கக்கூடும். இவை முக்கியமாக, குழந்தைகளின் காரணமாக இருக்கலாம். எந்த காரணமாக இருந்தாலும் சரி, நீங்கள் செலவினங்களைக் கட்டுப்படுத்துவது அவசியம். எதிரிகளிடமிருந்தும் சில சிக்கல்களை நீங்கள் எதிர்கொள்ளக் கூடும். எனினும், இது போன்ற பிரச்சினைகளை எல்லாம், உங்களால் நன்றாக சமாளிக்க இயலும். உங்கள் முயற்சிகளின் மூலம், உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களின் தவறான புரிதல்களையும் நீங்கள் அகற்ற முடியும். ஜோதிடம், ராசி பலன், நட்சத்திர பலன், இன்றைய பஞ்சாங்கம், வார ராசி பலன்கள், வருடாந்திர ராசி பலன்கள், பரிகாரங்கள் பற்றி மேலும் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.
காதல் மற்றும் திருமண வாழ்க்கை:
காதல் உறவுகள் சாதாரணமாக இருக்கும். மணமானவர்களுக்கு, வாழ்க்கைத் துணையுடன் சுமுக உறவு இல்லாமல் போகலாம். இதனால் குடும்ப உறவில் மகிழ்ச்சியற்ற நிலை நிலவக் கூடும். எனினும், சமூக வட்டத்தில் நீங்கள் புதிய நட்புகளை உருவாக்கிக் கொள்வீர்கள். பழைய நட்புகளையும் வலுப்படுத்திக் கொள்வீர்கள். சிலர், வெளியிடங்களுக்கு சிறு பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் உள்ளது.
நிதி நிலை:
நிதி நிலை மந்தமாகவே காணப்படுகிறது. எனினும், சில போராட்டங்களுக்குப் பிறகாவது, உங்களது அனைத்துப் பணத் தேவைகளையும், உங்களால் பூர்த்தி செய்து கொள்ள இயலும். இந்த சவாலான சூழ்நிலையில் கூட, உங்களில் சிலர், நண்பர்களுடன் பொழுது போக்குவதற்காக பணம் செலவிடக் கூடும். எனவே, பணம் தொடர்பான எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதற்கு முன், நீங்கள் நன்கு சிந்தித்து செயல்படுவது நல்லது.
வேலை:
பணியில் மிதமான முன்னேற்றம் காணப்படும். பணியிடத்தில் நீங்கள், புதிய தொழில் நுட்பம் சார்ந்த அறிவும், நல்ல அனுபவமும் பெறும் வாய்ப்பு உள்ளது. சக பணியாளர்களின் ஆதரவும், உங்களுக்குக் கிடைக்கும்.
தொழில் :
தொழில் முனைவோர், தங்கள் தொழில் சார்ந்த நடவடிக்கைகளை சற்று தள்ளிப் போட வேண்டியிருக்கலாம். தொழில் ஒப்பந்தங்கள் மூலமும், இப்பொழுது, நீங்கள் எதிர்பார்க்கும் பலனைக் காண இயலாமல் போகலாம். எனினும், உங்கள் சொந்தப் பொறுப்புகளை நன்கு நிறைவேற்றுவதன் மூலமும், இடைவிடா முயற்சியின் வழியாகவும் நீங்கள் வெற்றி காண முடியும்.
தொழில் வல்லுநர்:
மிதுன ராசி தொழில் வல்லுனர்களுக்கு இது, ஒரு பயனுள்ள மாதமாக இருக்கும். ஆனால், வேலையில் எதிர்பாராத சில தாமதங்களை நீங்கள் சந்திக்க நேரலாம். எனினும், உங்கள் முயற்சிகளை உறுதியுடன் தொடர்ந்தால், வெற்றிகளையும் விரும்பிய முடிவுகளையும், நீங்கள் நிச்சயமாகப் பெறலாம்.
ஆரோக்கியம்:
உங்கள் உடல் நலத்தில் நீங்கள் தீவிர கவனம் செலுத்துவது அவசியம். சிலருக்கு வாத நோய் போன்ற நோய்களினால் பாதிப்பு ஏற்படலாம். எனவே, சாத்தியமான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுப்பதன் மூலம், நீங்கள் உங்களை நோயிலிருந்து காப்பாற்றிக் கொள்ள முடியும். போதுமான ஓய்வு, ஆழ்ந்த உறக்கம் போன்றவையும் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
மாணவர்கள்:
உங்கள் கல்வி முயற்சிகளுக்கு, இது, உகந்த நேரமாக இருக்கும். உங்கள் திறந்த மனமும், பரந்த கண்ணோட்டமும் உங்கள் தனித் திறன்களை வளர்த்துக் கொள்ளவும், நற்பெயரை மேம்படுத்திக் கொள்ளவும் உதவக்கூடும். உங்கள் கல்வித் திறன் கண்டு, உங்கள் பெற்றோர்களும் மகிழ்ச்சியடையும் வாய்ப்பு உள்ளது.
சுப தினங்கள்: 3,4,12,13,17,18,30
அசுப தினங்கள்: 5,6,9,10,11,19,20,21
பரிகாரம்:
ஆலயம் சென்று ஆஞ்சநேயர் மற்றும் ஆதி சேஷனை வழிபட்டு, பூஜை அர்ச்சனை செய்தல்.
புதன், குரு, சனி, ராகு மற்றும் கேது பகவானுக்கு ஹோமம் மற்றும் பூஜை செய்தல்.
பாம்பு புற்றுக்குப் பால் வார்த்தல். மேலும், முதியவர்கள், உடல் ஊனமுற்றோர் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உதவி புரிதல்.
