AstroVed Menu
AstroVed
search
search

மீனம் ஜூலை மாத ராசி பலன் 2020 | July Matha Meenam Rasi Palan 2020

dateJune 9, 2020

மீன ராசி ஜூலை மாத பொதுப் பலன்கள்:

மீன ராசி அன்பர்களுக்கு, இது, பெயர், புகழ், மரியாதை ஆகியவற்றைப் பெற்றுத் தரும் மாதமாக அமையும். உங்கள் எல்லாப் பணிகளையும், நீங்கள் தைரியத்துடன் மேற்கொள்வீர்கள். தொழிலில் உங்கள் தகுதியை நிரூபிக்கவும், இது சரியான நேரமாக இருக்கும். சிலர் ஊதிய உயர்வு பெறுவீர்கள். இது உங்களுக்கு மனநிறைவை அளிக்கும். சமூகத்தில் புதிய தொடர்புகளையும் நீங்கள் எற்படுத்திக் கொள்ளலாம்.  உங்களில் சிலர் சிறு பயணங்களை மேற்கொள்வீர்கள். ஆரோக்கியம் சாதாரணமாக இருக்கும். இருப்பினும், ஆரோக்கியத்தை அவ்வாறே பராமரிக்க, நீங்கள் கண்டிப்பான உணவு முறையைப் பின்பற்ற வேண்டும். சில நேரங்களில், உங்களுக்குப் பதட்டமான மனநிலை உருவாகலாம். எனவே, எந்தவொரு முக்கிய முடிவையும் எடுப்பதற்கு முன், நன்கு சிந்தித்துச் செயல்படுங்கள்.  குடும்பத்தில் சற்றே தவறான புரிதல்கள் சில உருவாகக் கூடும். ஆனால் இவை தற்காலிகமானதாகவே இருக்கும். இருப்பினும், உடன் பிறந்தவர்களுடன் நீங்கள், நேசத்துடன் பழகுவீர்கள். தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படலாம். ஜோதிடம், ராசி பலன், நட்சத்திர பலன், இன்றைய பஞ்சாங்கம், வார ராசி பலன்கள், வருடாந்திர ராசி பலன்கள், பரிகாரங்கள் பற்றி மேலும் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.

காதல் மற்றும் திருமண வாழ்க்கை:

காதலர்கள் தங்கள் உறவைக் கவனமாகக் கையாள்வது அவசியம். திருமணத்திற்குக் காத்திருப்பவர்கள், தங்கள் எண்ணப்படி திருமணம் கைகூட, சில தடை அல்லது தாமதங்களைச் சந்திக்க நேரலாம்.   கணவன் மனைவிக்கு இடையிலும், சில பிரச்சினைகள் ஏற்படலாம். ஆனால், அவை வந்த வேகத்திலேயே தீர்ந்து விடக் கூடும். 
 
நிதி நிலை:

நிதி விவகாரங்களைப் பொறுத்தவரை இது சுமாரான நேரம். என்றாலும், உங்கள் நிதி நிலை படிப்படியாக முன்னேறும் வாய்ப்புள்ளது. எதிர்காலத்திற்காக பணத்தைச் சேமிப்பதற்கு நீங்கள் செய்யும் அனைத்து முயற்சிகளும் எந்த பிரச்சனையும் இல்லாமல் வெற்றி பெறும்.

வேலை:

வேலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். உங்கள் நேர்மறையான கண்ணோட்டமும், எண்ணங்களை உடனடியாகச் செயல்படுத்தும் ஆற்றலும், மகத்தான நன்மைகளை உங்களுக்குத் தரும். பணித்துறையில் புதிய ஒப்பந்தங்களைச் செய்து கொள்வதற்கும், இது சரியான தருணம் எனலாம். 

தொழில்:

உங்கள் சுய சிந்தனையும், தைரியமான அணுகுமுறையும் உங்களது தொழில் வளர்ச்சிக்கு பெரிய அளவில் உதவி புரியும். உங்கள் தொடர் முயற்சிகளின் பலனாக, சிறந்த சில தொழில் வாய்ப்புகளை நீங்கள் பெறக்கூடும். பொதுவாக தொழிலில் முன்னேற்றம் காணும் நேரமாக இது அமையும். 
  
தொழில் வல்லுனர் :

மீன ராசி தொழில் வல்லுனர்கள், நிலவும் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு, அதற்கேற்ப திட்டங்களை வகுத்துக் கொள்வது நன்மை தரும். உங்கள் முயற்சிகளைத் தன்னம்பிக்கையுடன் மேற்கொள்வதும், நீங்கள் நல்ல பலன் காண உதவும்.   

ஆரோக்கியம் :

உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நீங்கள் முன்பே ஏதாவது நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும், இப்பொழுது அது குணமாகும் வாய்ப்புள்ளது. அதிக வேலை காரணமாக, நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் உரிய கவனம் செலுத்த முடியாமல் போகலாம். எனவே உடல் நிலையைப் பராமரிப்பதற்கு, நீங்கள் போதிய நேரம் ஒதுக்குவது அவசியம். உடல் உபாதை ஏதாவது இருந்தால், உடனே மருத்துவர் அறிவுரையைக் கேட்டு, அதை நீங்கள் பின்பற்ற வேண்டும். 

மாணவர்கள் :

மீன ராசி மாணவ, மாணவியர் இந்த மாதம் நம்பிக்கையுடன் செயல்படுவார்கள். இருப்பினும், அளவுக்கு அதிகமான நம்பிக்கை காரணமாக, அலட்சிய போக்கு வராமல் பாதுகாத்துக் கொள்வது அவசியம். கவனம் சிதறாமல் மன உறுதியுடன் படித்தால், கல்வியில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். 

சுப தினங்கள் : 2,3,4,7,8,21,22,30,31
அசுப தினங்கள் : 1,9,10,23,24,27,28,29

பரிகாரம்:

திருச்செந்தூர் முருகப் பெருமானை, பூஜை செய்து வழிபடுதல். சித்தர் ஆலயங்களுக்குச் சென்று தரிசனம் செய்தல்.  
குரு, சனி, ராகு மற்றும் கேது பகவானுக்கு பூஜை மற்றும் ஹோமம் செய்தல்.  
நாய்க்கு உணவு அளித்தல். பாம்புப் புற்றுக்குப் பால் வார்த்தல். உடல் ஊனமுற்றோருக்கு உதவி செய்தல்.  


banner

Leave a Reply