AstroVed Menu
AstroVed
search
search

விருச்சிகம் ஜனவரி மாத ராசி பலன் 2022 | January Matha Viruchigam Rasi Palan 2022

dateDecember 10, 2021

விருச்சிகம் ஜனவரி 2022 பொதுப்பலன்கள்:

இந்த மாதம் குடும்ப உறவுகள் குதூகலம் அளிப்பதாக இருக்கும். குடும்பப் பொறுப்புகள் அதிகரிக்கும். கலை மற்றும் இசையின் மீது ஆர்வம் கூடும். தங்களின் வேலை மற்றும் நிதிநிலையில் முக்கிய மாறுதல்கள் ஏற்படும். உத்தியோகம் செய்யும் விருச்சிக ராசி அன்பர்கள் பணியிடத்தில் சில பிரச்சினைகளை சந்திக்க நேரும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். ஆன்மீக பயணம் மேற்கொள்வீர்கள். மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதன் மூலம் உங்கள் உடல் ஆரோக்கியத்தை நீங்கள் பாதுகாத்துக் கொள்ள இயலும். விருச்சிக ராசி மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள்.

உங்கள் ராசி பலன்களை பற்றி மேலும் அறிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அணுகுங்கள்

காதல் / குடும்பம்:

குடும்ப உறவுகள் குதூகலம் அளிப்பதாக இருக்கும். உடன் பிறந்தவர்களுடனான உறவு சுமுகமாக இருக்கும். கணவன் மனைவி உறவில் ஒற்றுமை இருக்கும். இந்த மாதம் நீங்கள் திடீர் பண வரவை எதிர்பார்க்கலாம். உத்தியோகம் நிமித்தமாக நீங்கள் வெளிநாடு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதால் நீங்கள் சில காலம் உங்கள் குடும்பத்தை விட்டுப் பிரிய வேண்டியிருக்கும். உங்கள் தொழில் சிறப்பாக நடக்கும்.

குடும்ப உறவுகள் மேம்பட குரு பூஜை

நிதி நிலை:

இந்த மாதம் நீங்கள் திடீர் பண வரவை எதிர்பார்க்கலாம். லாட்டரி மற்றும் காசினோ போன்றவற்றில் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம். பங்கு வர்த்தகம் மற்றும் பொருள் வர்த்தகத்தில் முக்கியமான முடிவுகள் எதையும் எடுக்காதீர்கள். ஏனெனில் அதில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. திருமணம், குழந்தை பிறந்த நாள் விழா போன்ற சுப காரியங்களுக்காக செலவீனங்கள் ஏற்படலாம். 

நிதி நிலையில் ஏற்றம் பெற ராகு பூஜை

வேலை:

உத்தியோகம் செய்யும் விருச்சிக ராசி அன்பர்கள் பணியிடத்தில் சில பிரச்சினைகளை சந்திக்க நேரும். சக பணியாளர்கள் ஒத்துழைப்பு கிடைப்பது கடினமாக இருக்கும். எனவே நீங்கள் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டியிருக்கும்.  நீங்கள் கவனமுடன் செயல்பட வேண்டும். அரசு உத்தியோகத்தில் உள்ளவர்கள் பணியிடத்தில் கடுமையாக உழைப்பதன் மூலம் பதவி உயர்வு கிடைக்கப் பெறுவார்கள். ஊதிய உயர்வு பெறுவதற்கும் சாத்தியம் உள்ளது. 

தொழில்:

உங்கள் தொழில் சிறப்பாக நடக்கும். தொழிலை விரிவுபடுத்துவது குறித்த உங்கள் எண்ணங்களுக்கு நீங்கள் இந்த மாதம் செயல் வடிவம் அளிக்கலாம். முதலீடுகளையும் நீங்கள் மேற்கொள்ளலாம்.  கூட்டுத்தொழில் செய்பவர்கள் இந்த மாதம் சிறந்த லாபம் காண்பார்கள்.  உங்கள் வருமானம் பெருகும். தரகுத் தொழில் செய்பவர்களின் பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.   

தொழில் வல்லுனர்கள்:

நீங்கள் பிறரிடத்தில் பணி புரிபவர் என்றால்,  சிறப்பாகச் செயலாற்றுவீர்கள்.  உங்களுக்கு பதவி உயர்வு கிட்டும். உங்கள் வருமானம் கணிசமாக உயரும். அதன் காரணமாக இந்த மாதம் உங்கள் பொருளாதார நிலையில் ஏற்றம் காண்பீர்கள். 

உத்தியோகம் மற்றும் தொழிலில் முன்னேற்றம் காண அஷ்ட லக்ஷ்மி பூஜை

ஆரோக்கியம்:

மனம் ஆரோக்கியமாக இருந்தால் உடல் ஆரோக்கியம் சிறந்த முறையில் காக்கப்படும். இந்த மாதம் நீங்கள் மனப் பதட்டத்திற்கு ஆளாக நேரும் என்பதால் உங்கள் ஆரோக்கியம் சிறிது பாதிக்கப்படும். எனவே மனதை அமைதியாக வைத்துக் கொள்ள தியானம் மேற்கொள்ளுங்கள். உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உடற் பயிற்சி மேற்கொள்ளுங்கள். உணவில் கவனமாக இருங்கள். தந்தைக்கு உடல் நலக் குறைவு ஏற்படலாம். தந்தையின் உடல் நலனில் அக்கறை தேவை. 

மனம் மற்றும் உடல் ஆரோக்கியம் பெற சந்திரன் பூஜை

மாணவர்கள்:

விருச்சிக ராசி மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள். கல்வியில் கவனம் சிறப்பாக இருக்கும். உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் இந்த மாதம் படிப்பில் அதிக கவனம் செலுத்துவார்கள். கல்வி உதவிப் பணம் வேண்டி விண்ணப்பிக்கும் மாணவர்கள்,  தங்கள் தேவை நிறைவேறக் காண்பார்கள். ஆராய்ச்சி கல்வி பயிலும் மாணவ மாணவியர்களுக்கு இந்த மாதம் சிறப்பான மாதமாக இருக்கும். விடாமுயற்சியுடன் கல்வி பயின்று ஆராய்ச்சியில் வெற்றி காண்பார்கள். 

கல்வியில் வெற்றி கிடைக்க கனேஷா பூஜை

சுப நாட்கள்: 

5, 7, 8, 9, 12, 13, 14. 

அசுப நாட்கள்:

6, 22, 26, 31. 


banner

Leave a Reply