துலாம் ஜனவரி மாத ராசி பலன் 2022 | January Matha Thulam Rasi Palan 2022

துலாம் ஜனவரி 2022 பொதுப்பலன்கள்:
துலாம் ராசி அன்பர்களே! வருடத்தின் ஆரம்ப மாதமான இந்த மாதத்தில் கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். கருத்து வேறுபாடுகள் நீங்கி இருவருக்கும் பரஸ்பர புரிந்துணர்வும் ஒற்றுமையும் ஓங்கும். இளம் வயது துலாம் ராசி அன்பர்கள் தங்கள் காதல் உறவில் இனிமை இருக்கக் காண்பார்கள். அதிக வேலை காரணமாக உடல் சோர்வு மற்றும் மன அழுத்தம் காணப்படும். நண்பர்கள் அனைவரிடமும் நல்ல உறவு நிலை காணப்படும். இது தங்களின் மன மகிழ்ச்சியை கூட்டும். உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். மாணவர்கள் படிப்பில் கவனமுடன் செயல்பட்டு படிப்பில் வெற்றி அடைவார்கள்.
உங்கள் ராசி பலன்களை பற்றி மேலும் அறிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அணுகுங்கள்
காதல் / குடும்பம்:
கணவன் மனைவி ஒற்றுமை காரணமாக குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் இருக்கும். தம்பதியர் மனமொத்து வாழ்வார்கள். இருவருக்கும் இடையே பரஸ்பர புரிந்துணர்வு காரணமாக அன்னியோன்யம் கூடும். குடும்ப உறுப்பினர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. தேவையற்ற பேச்சுகள் மற்றும் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நன்மை பயக்கும். திருமணத்திற்குக் காத்திருப்பவர்களுக்கு இந்த மாதம் மனதிற்கு பிடித்த வரன் அமையும்.
காதல் உறவு மேம்பட சுக்கிரன் பூஜை
நிதி நிலை:
இந்த மாத நிதிநிலை நீங்கள் வரவேற்கத்தக்க வகையில் இருக்கும். உங்கள் பொருளாதார நிலை ஏற்றம் காணும் வகையில் கிரக நிலைகள் உள்ளன. பங்கு வர்த்தக நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கும் லாபங்களை ஈட்டுவதற்கும் இந்த மாதம் ஏற்றதாக உள்ளது. கிரிப்டோ கரன்சி முதலீடுகள் ஏற்றம் நிறைந்து காணப்படும். இந்த மாத இறுதியில் நீங்கள் சிறந்த பண வரவை எதிர்ப்பார்க்கலாம்.
பொருளாதாரத்தில் ஏற்றம் காண குரு பூஜை
வேலை:
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியிடச் சூழல் மிகவும் அனுகூலமாக இருக்கும். நீங்கள் அரசுத் துறையில் பணிபுரிபவர் என்றால் நீங்கள் சிறப்பாகப் பணியாற்றி மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. தனியார் துறையில் உள்ளவர்கள் பணியிடத்தில் சாதனைகளைப் புரிவதற்கு வாய்ப்பு உள்ளது.
தொழில்:
நீங்கள் சொந்தத் தொழில் அல்லது வியாபாரம் செய்கிறீர்கள் என்றால் இந்த மாதம் உங்களுக்கு பல சிறந்த வாய்ப்புகள் தேடி வரும். நீங்கள் சிறப்பாக தொழில் செய்து வெற்றி காண்பீர்கள். கூட்டுத்தொழில் முயற்சிகளில் நீங்கள் எதிர்பார்க்கும் நற்பலனை எதிர்பார்க்க முடியாது. நிலம் மற்றும் வீடு கட்டும் தொழில் செய்பவர்களுக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். ஆடை சம்மந்தப்பட்ட தொழில் செய்பவர்கள் சுமாரான லாபங்களை எதிர்பார்க்கலாம்.
தொழில் வல்லுனர்கள்:
நீங்கள் அரசுத் துறையைச் சார்ந்த தொழில் வல்லுநர் என்றால் உங்கள் பணியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருக்கும். நீங்கள் சொந்தமாகத் தொழில் செய்யும் தொழில் வல்லுநர் என்றால் உங்கள் தொழிலை விரிவு படுத்துவீர்கள் அல்லது புதிய தொழிலைத் தொடங்குவீர்கள். சிறந்த முறையில் வாடிக்கையாளர்களைப் பெற்று தொழிலில் கணிசமான வருமானமும் லாபமும் பெறுவீர்கள்.
உத்தியோகம் மற்றும் தொழில் உயர்வுக்கு முருகன் பூஜை
ஆரோக்கியம்:
இந்த மாதம் உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். மனம் ஆரோக்கியமாக இருந்தால் தான் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இந்த மாதம் உங்கள் மனதில் காணப்படும் சோர்வு உங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கும். தியானம் மற்றும் உடற்பயிற்சி மூலம் உங்கள் மன நலம் மற்றும் உடல் நலத்தை நீங்கள் பாதுகாத்துக் கொள்ள இயலும். குடும்பத்தில் உள்ள வயதில் மூத்தவர்களின் உடல் நலனில் அக்கறை தேவை. அவர்களுக்கு கால் மூட்டு மற்றும் சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வரலாம்.
உடல் ஆரோக்கியத்திற்கு புதன் பூஜை
மாணவர்கள்:
பள்ளி மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். மாணவர்களின் கிரகிக்கும் திறன் கூடும். உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் விடா முயற்சியுடன் படித்தால் தான் படிப்பில் வெற்றி அடைய முடியும். ஆராய்ச்சி கல்வி படிக்கும் மாணவர்கள் படிப்பில் கவனமுடன் செயல்பட்டு படிப்பில் வெற்றி காண்பார்கள்.
சுப நாட்கள்:
14, 15, 20, 21.
அசுப நாட்கள்:
25, 26, 31.
