AstroVed Menu
AstroVed
search
search

தனுசு ஜனவரி மாத ராசி பலன் 2022 | January Matha Dhanusu Rasi Palan 2022

dateDecember 10, 2021

தனுசு ஜனவரி 2022 பொதுப்பலன்கள்:

தனுசு ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்கள் குடும்ப உறவுகள் சிறப்பாக இருக்கும். உங்கள் நிதிநிலை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாகச் செயல் பட வேண்டும். தொழில் நிமித்தமாக அதிக அலைச்சல்களை எதிர்கொள்ள வேண்டியது வரும். புதிய தொழில் முதலீடுகள் மூலம் நல்ல லாபங்களை எதிர்பார்க்கலாம். காப்பீடு சம்மந்தப்பட்ட முதலீடுகள் மூலமான தன வருவாய் அதிகரிக்கும். உங்கள் ஆரோக்கியம் சீராக இருக்கும் என்றாலும் உங்கள் ஆரோக்கியத்தில் சிறிது கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.  இந்த மாதம் மாணவர்கள் ஆக்கப்பூர்வமாகச் செயல்பட்டு படிப்பில் வெற்றி காண்பார்கள். வெளிநாட்டில் கல்வி பயிலும் மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயின்று வெற்றி காண்பார்கள்.  

உங்கள் ராசி பலன்களை பற்றி மேலும் அறிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அணுகுங்கள்

காதல் / குடும்பம்:

இந்த மாதத்தின் முற்பகுதியை விட மாதத்தின் பிற்பகுதியில் கணவன் மனைவி உறவு சுமுகமாக இருக்கும். இருவருக்கும் இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கி பரஸ்பர ஒற்றுமை நிலவும். உங்கள் குடும்ப உறவுகள் சிறப்பாக இருக்கும். என்றாலும் வயதில் மூத்தவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படாத வகையில் அவர்களை அனுசரித்து நடந்து கொள்ள வேண்டியது அவசியம். அவர்களுடன் வீண் வாக்குவாதத்தை  தவிர்ப்பது நல்லது. திருமண வயதில் இருக்கும்  ஆண்-பெண் இந்த மாதம் தங்களுக்கு ஏற்ற துணை கிடைக்கப் பெறுவார்கள். வீட்டில் உள்ள பெரியவர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை பயக்கும்.

கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்க சுக்கிரன் பூஜை

நிதி நிலை:

உங்கள் நிதிநிலை இந்த மாதம் சிறப்பாக இருக்கும். உங்கள் வருமானம் பெருக உங்கள் வாழ்க்கைத்துணை உங்களுக்கு உறுதுணையாக இருப்பார். ஊக வணிகமான போரெக்ஸ் டிரேடிங் முதலீடுகள் மூலம்  நல்ல லாபங்களை  எதிர்பார்க்கலாம். காய்கள் மற்றும் பழ வியாபாரம் மூலமாக நல்ல வருமானம் கிடைக்கும். பகுதி நேரத் தொழில் செய்து கிடைக்கும் வருமானத்தில் நல்ல ஆதாயம் காண்பீர்கள். வாகனங்கள் பழுது போன்ற வகையில் செலவுகள் செய்வீர்கள். 

பொருளாதாரத்தில் ஏற்றம் காண குரு பூஜை

வேலை:

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு, அதிலும் குறிப்பாக அரசு உத்தியோகத்தில் உள்ள தனுசு ராசி அன்பர்கள் பணியிடத்தில்  சிறு  சிறு தடைகளை சந்திக்க நேரும். இது உங்கள் முன்னேற்றத்தில் சில தாமதங்களை ஏற்படுத்தும். இந்த மாத இறுதியில் மேலதிகாரிகளுடன் கருத்து வேறுபாடு காரணமாக சில மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே நீங்கள் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். உங்கள் பேச்சில் பணிவும் கனிவும் தேவை. தனியார் துறையில் பணி புரியும்  தனுசு ராசி அன்பர்கள் இந்த மாதம் தாங்கள் எதிர் பார்த்துக் காத்திருந்த பதவி உயர்வைப் பெறுவார்கள். ஊதிய உயர்வும் அதன் காரணமாக பொருளாதார முன்னேற்றமும் பெறுவார்கள். 

தொழில்:

சொந்தத் தொழில் செய்யும் தனுசு ராசி அன்பர்கள் இந்த மாதம் தங்கள் தொழில் சிறப்பாக நடக்கக் காண்பார்கள். தொழில் மூலம் நல்ல வருவாய் மற்றும் லாபம் கிட்டும். தரகு சம்மந்தப்பட்ட தொழிலிலும்  நல்ல லாபங்களை எதிர்பார்க்கலாம். கூட்டுத் தொழிலில் உள்ளவர்களுக்கு வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் கிடைக்கப் பெறுவார்கள். இவர்கள் தங்கள்  தொழிலை வெளிநாட்டிற்கு மாற்றும் வாய்ப்பு உள்ளது.

தொழில் வல்லுனர்கள்:

இந்த மாதம் நீங்கள் ஏற்கனவே மேற்கொண்டிருக்கும் தொழிலை விரிவாக்கம் செய்வது அல்லது புதிய தொழிலை தொடங்குவது உங்களுக்கு நல்ல பலனை அளிக்கும். புதிய தொழில் முதலீடுகள் மூலம் நீங்கள்  நல்ல லாபங்களை எதிர்பார்க்கலாம். தகவல் தொடர்புடைய தொழில் செய்யும் தொழில் வல்லுனர்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து உரிய நேரத்தில் பணம் வராமல் சில பிரச்சனைகளை சந்திக்க நேரும். 

உத்தியோகம் மற்றும் தொழில் மேன்மைக்கு துர்கா பூஜை

ஆரோக்கியம்:

இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். அதே நேரத்தில் அதிக பணிச் சுமை உங்கள் மனதில் சோர்வை ஏற்படுத்தும். தலைவலி மற்றும் தூக்கமின்மை போன்ற உபாதைகளை நீங்கள் சந்திக்க நேரும். தியானம் மற்றும் உடற்பயிற்சி மூலம் மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள  முடியும். தாய் மற்றும் தந்தையின் உடல் நலனில் அக்கறை தேவை. 

உடல் ஆரோக்கியம் பெற சந்திரன் பூஜை

மாணவர்கள்:

இந்த மாதம் பள்ளிக் கல்வி பயிலும் மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள். அவர்களின் கிரகிக்கும் திறன் அதிகரித்து காணப்படும் அதன் மூலம் கல்வியில் பிரகாசிப்பார்கள். உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு மனதை ஒருமுகப்படுத்துவதில் சிரமம் இருக்கும். அதன் காரணமாக படிப்பில் கவனச்சிதறல்கள் ஏற்படலாம். வெளிநாடு சென்று ஆராய்ச்சி கல்வி படிக்க நினைக்கும் மாணவர்கள் தங்கள் விருப்பங்கள்  நிறைவேறக் காண்பார்கள்.

மாணவர்களின் கிரகிக்கும் திறன் கூட கணேஷா பூஜை

சுப நாட்கள்: 

1, 4, 5, 7, 8, 9, 12, 13, 14. 

அசுப நாட்கள்:

2, 3, 6, 22, 26, 31. 


banner

Leave a Reply