கன்னி ஜனவரி மாத ராசி பலன் 2022 | January Matha Kanni Rasi Palan 2022

கன்னி ஜனவரி 2022 பொதுப்பலன்கள்:
கன்னி ராசி அன்பர்களே! இந்த மாதம் குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள் தோன்றினாலும் அவை வந்த வேகத்தில் மறைந்து விடும். கணவன் மனைவி உறவில் ஒற்றுமை அதிகரிக்கும். இருவருக்கும் இடையில் நெருக்கமும் அந்நியோன்யமும் கூடும். தாம்பத்திய உறவில் நல்லிணக்கம் கூடும். உங்கள் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். இந்த மாதம் நீங்கள் புதிய ஆடை ஆபரணங்களை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியிடச் சூழல் சிறப்பாக இருக்கும். தாயாருக்கு உடல் நலக் குறைவு ஏற்படலாம். கவனம் தேவை. இந்த மாதம் மாணவர்கள் கல்வியில் பளிச்சிடுவார்கள்.
உங்கள் ராசி பலன்களை பற்றி மேலும் அறிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அணுகுங்கள்
காதல் / குடும்பம்:
கன்னி ராசி இளம் வயதினரின் காதல் வாழ்க்கை இனிமையாகச் செல்லும். இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு சுமுக உறவை மேற்கொள்வார்கள். திருமணமான தம்பதிகள் பரஸ்பரம் அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் திருமண உறவில் நல்லிணக்கம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களுடன் சிறு சிறு பிரச்சினைகள் தோன்றினாலும் அது பெரிய அளவில் பாதிப்பை அளிக்காது.
கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்க சுக்கிரன் பூஜை
நிதி நிலை:
இந்த மாதம் உங்களின் பொருளாதார நிலை ஓரளவு சீராக இருக்கும். என்றாலும் திடீர் செலவுகளை நீங்கள் சந்திக்க நேரலாம். எதிர்பாராத செலவுகளை நீங்கள் சந்திக்க நேரும். எனவே பணத்தை நீங்கள் கவனமாகக் கையாள வேண்டியிருக்கும். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நல்லது.
தன நிலையில் ஏற்றம் ஏற்பட லக்ஷ்மி பூஜை
வேலை:
அரசு உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியிடச் சூழல் அனுகூலமாக இருக்கும். நீங்கள் பணியிடத்தில் சிறப்பாகப் பணியாற்றுவார்கள். உங்கள் மேலதிகாரிகளுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்வீர்கள். தனியார் துறையில் பணி புரிபவர்கள் தாங்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் பதவி உயர்வு கிடைக்கப் பெறுவார்கள். பணியிடத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் கூடும். வருமானம் கணிசமாக உயரும்.
தொழில்:
இந்த மாதத்தில் உங்கள் தொழில், அதிலும் குறிப்பாக கூட்டுத் தொழில் சிறப்பாக இருக்கும். வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளுக்காக காத்திருப்பவர்களுக்கு இந்த மாதம் கனவுகள் நிறைவேறும். கூட்டுத் தொழிலில் லாபங்கள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்களுக்கு இந்த மாதம் உகந்ததாக உள்ளது. எனவே புதிய தொழில் தொடங்க எண்ணுபவர்கள் தங்கள் எண்ணங்களுக்கு செயல் வடிவம் அளிக்கலாம். அதிக முதலீடுகளையும் நீங்கள் செய்யலாம்.
தொழில் வல்லுனர்கள்:
நீங்கள் தனியார் துறையில் வேலை செய்பவர் என்றால் சில பிரச்சினைகளையும் நெருக்கடிகளையும் நீங்கள் சந்திக்க நேரும். எனவே கவனமுடன் நடந்து கொள்ள வேண்டும். வாடிக்கையாளர்கள் மற்றும் அதிகாரிகளிடம் கவனமாகப் பேச வேண்டும். தகவல் தொடர்புத் துறையில் வேலை தேடும் தொழில் வல்லுனர்களுக்கு இந்த மாதம் வேலை கிடைக்கும். நீங்கள் அரசுத் துறை சார்ந்த தொழில் செய்கிறீர்கள் என்றால் இந்த மாதம் நீங்கள் சிறப்பாகச் செயல்படுவீர்கள்.
உத்தியோகம் மற்றும் தொழிலில் ஏற்றம் ஏற்பட சூரியன் பூஜை
ஆரோக்கியம்:
உங்கள் ஆரோக்கியம் சீராக இருக்கும் என்றாலும் காற்று மாசு காரணமாக ஆஸ்துமா போன்ற உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் உடல் நலனில் அக்கறை தேவை. பெற்றறோரின் உடல் நலத்திலும் அக்கறை தேவை.
நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு வைத்தியநாத பூஜை
மாணவர்கள்:
பள்ளியில் கல்வி பயிலும் மாணவ மாணவியர்களுக்கு இந்த மாதம் சிறப்பான மாதமாக இருக்கும். அதிக முயற்சி எடுத்து கல்வி பயின்று வெற்றி காண்பார்கள். கல்லூரியில் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தி படித்து பேராசிரியர்களின் பாராட்டுதலை பெறுவார்கள்.
கல்வியில் மேன்மை உண்டாக சரஸ்வதி பூஜை
சுப நாட்கள்:
4, 5, 7, 8, 9, 14, 15.
அசுப நாட்கள்:
10, 11, 12, 16, 22, 25, 26.
