சிம்மம் ஜனவரி மாத ராசி பலன் 2022 | january Matha Simmam Rasi Palan 2022

சிம்மம் ஜனவரி 2022 பொதுப்பலன்கள்:
சிம்ம ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்கள் குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்பத்தில் நடக்கும் சுப விசேஷங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் குழந்தைகளுடன் நல்லுறவு காணப்படும். பணியிடத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். என்றாலும் நீங்கள் சிறப்பாகப் பணியாற்றி மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். உங்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. தனியார் உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அதிக பணிகள் காரணமாக குடும்பத்திற்கென அதிக நேரத்தை ஒதுக்க இயலாமல் போகலாம். உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள்.
உங்கள் ராசி பலன்களை பற்றி மேலும் அறிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அணுகுங்கள்
காதல் / குடும்பம்:
சிம்ம ராசி அன்பர்களின் குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்ப உறுப்பினர்களுடன் உறவு சிறக்கும். வீட்டில் உள்ள வயதானவர்களின் உடல் நலனில் அக்கறை தேவை. குழந்தைகளுடன் உறவு வலுப்படும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் பரஸ்பரம் விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் நல்லுறவு நீடிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் மற்றும் விசேஷங்கள் நடக்கும் வாய்ப்புகள் உள்ளது.
திருமண முயற்சி கைகூட செவ்வாய் பூஜை
நிதி நிலை:
இந்த மாதம் உங்கள் நிதிநிலை நீங்கள் வரவேற்கத்தக்க வகையில் இருக்கும். பண வரவு கணிசமாக உயரும். உங்கள் பொருளாதார நிலை ஏற்றத்துடன் இருக்கும். பங்கு வர்த்தகம், பொருள் வர்த்தகம் மற்றும் பிட் காயின் சார்ந்த முதலீடுகள் நல்ல லாபத்தைக் கொடுக்கும். புதிய வண்டி வாங்குதல் அல்லது பழைய வண்டி புதிப்பித்தல் வகையில் நீங்கள் செலவுகளை மேற்கொள்ள நேரும். கடன் சுமையில் இருப்பவர்கள் சேமிப்பை அதிகரித்து கடனை திரும்பச் செலுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.
நிதி நிலையில் ஏற்றம் உண்டாக கோ பூஜை
வேலை:
இந்த மாதம் பணியிடச் சூழல் உங்களுக்கு சாதகமாக இருக்கும் என்றாலும் உங்கள் பேச்சில் கவனமாக இருக்க வேண்டும். சக பணியாளர்களின் நல்லாதரவைப் பெறுவீர்கள். மேலதிகாரிகள் சில பொறுப்புகளை உங்களுக்கு அளித்து உங்களுடன் இணைந்து பணியாற்றுவார்கள். புதிதாக அரசு வேலைக்கு சேர்ந்திருப்பவர்களுக்கு வேலை பளு கூடுதலாக இருக்கும். வேலை பளுவால் மனச்சோர்வு ஏற்டலாம்.
தொழில்:
சந்தை வியாபாரம் செய்பவர்கள் இந்த மாதம் அதிக லாபம் காண்பார்கள். கூட்டுத்தொழில் செய்பவர்கள் தங்கள் தொழிலை மேம்படுத்த பணத்தை முதலீடு செய்யும் வாய்ப்பு உள்ளது. கூட்டுத்தொழில் சிறப்பாக நடக்கும் என்றாலும் தேவையற்ற பேச்சுகள் மற்றும் தனது கூட்டாளியுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை பயக்கும். புதிய முதலீட்டாளர்கள் மூலம் உங்கள் தொழிலை விரிவு படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
தொழில் வல்லுனர்கள்:
சிம்ம ராசி தொழில் வல்லுனர்கள் இந்த மாதம் சிறப்பாகச் செயல்படுவார்கள். மருத்துவத் துறையில் இருப்பவர்கள் சிறந்த வகையில் வருமானம் ஈட்டுவார்கள். வெளிநாடு சம்பந்தப்பட்ட தொழில் புரியும் தொழில் வல்லுனர்களுக்கு சிறந்த பலன்களை அளிக்கும் மாதம் ஆகும். தகவல் தொடர்புத் துறையில் பணியில் உள்ள தொழில் வல்லுனர்களின் தன நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
உத்தியோகம் மற்றும் தொழிலில் முன்னேற்றம் உண்டாக சனி பூஜை
ஆரோக்கியம்:
பணிச்சுமை மற்றும் அதனால் ஏற்படும் மனஅழுத்தம் உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும். நீங்கள் ஒற்றை தலைவலி மற்றும் கண் வலி போன்ற உபாதைகளை சந்திக்க நேரலாம். எனவே உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நடைபயிற்சி மற்றும் தியானம் யோகா போன்றவற்றில் ஈடுபடுவது உங்கள் ஆரோக்கியத்தை சிறந்த முறையில் காத்துக் கொள்ள உதவும்.
ஆரோக்கியமான உடல் நலனுக்கு செவ்வாய் பூஜை
மாணவர்கள்:
பள்ளிக் கல்வி பயிலும் மாணவர்கள் சிறந்த முறையில் கல்வி பயின்று தேர்வுகளையும் சிறப்பாக எழுதி நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். உயர்கல்வி பயிலும் மாணவர்கள் கவனச் சிதறல் போன்ற தடைகளையும் தாண்டி கல்வியில் முன்னேறுவார்கள். இறுதி ஆண்டு ஆராய்ச்சி கல்வி படிக்கும் மாணவர்களுக்கு படிப்பு முடித்தவுடன் வேலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
கல்வியில் ஏற்றம் உண்டாக துர்கா பூஜை
சுப நாட்கள்:
5, 7, 9, 12.
அசுப நாட்கள்:
6, 10, 11.
