AstroVed Menu
AstroVed
search
search

கடகம் ஜனவரி மாத ராசி பலன் 2022 | january Matha Kadagam Rasi Palan 2022

dateDecember 10, 2021

கடகம் ஜனவரி 2022 பொதுப்பலன்கள்:

கடக ராசி அன்பர்களே! இந்த மாதம் குடும்பத்தில் உங்கள் பொறுப்புகள் அதிகரிக்குkkkம். கணவன் மனைவி உறவு அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் இணக்கமாக இருக்கும். உங்கள் வருமானம் கூடும். இந்த மாதம் நீங்கள் கணிசமான பண வரவை எதிர்பார்க்கலாம். கடந்த மாதத்தை விட இந்த மாதம் உங்கள் பொருளாதார நிலை ஏற்றமுடன் இருக்கும்.   உத்தியோகத்தை பொறுத்தவரை ஊடகத் துறை மற்றும் பொதுப்பணித் துறையில் பணி புரிபவர்களுக்கு இது சிறந்த மாதமாக இருக்கும். ஏற்றுமதி தொடர்புடைய தொழில் செய்பவர்கள் இந்த மாதம் அதிக பண வரவைக் காண்பார்கள்.

உங்கள் ராசி பலன்களை பற்றி மேலும் அறிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அணுகுங்கள்

காதல் / குடும்பம்:

இளம் வயது கடக ராசி காதலர்களிடம் நல்லுறவு காணப்படும். திருமணமான தம்பதிகள் தங்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கக் காண்பார்கள். இதைத் தவிர்க்க தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுதல் கூடாது. வார்த்தைகளில் கவனம் தேவை. உடன்பிறந்தவர்களுடனும்  கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே உங்கள் பேச்சில் கவனம் தேவை. நண்பர்களிடம் நல்லுறவை வளர்த்துக் கொள்வீர்கள். 

குடும்ப உறவில் மகிழ்ச்சி அதிகரிக்க செவ்வாய் பூஜை

நிதி நிலை:

இந்த மாதம் உங்கள் பொருளாதாரம் வரவேற்கததக்க வகையில் இருக்கும். கடந்த காலங்களில் வாங்கிய கடன்கள் எல்லாம் அடைபடும்.  யூக வணிகமான பங்கு வர்த்தகம், பொருள் வர்த்தகம், பிட் காயின் மற்றும் போரெக்ஸ் டிரேடிங் முதலீடுகள் மூலம்  நல்ல லாபங்களை  நீங்கள் எதிர்பார்க்கலாம். ஆடை மற்றும் அணிகலன் வாங்குவது தொடர்பான செலவுகள் ஏற்படலாம். 

பொருளாதாரத்தில் ஏற்றம் காண குரு பூஜை

வேலை:

உத்தியோகத்தில் இருக்கும் கடக ராசி அன்பர்கள் இந்த மாதம் அலுவலகத்தில் சிறப்பாகப் பணியாற்றுவார்கள். நன்மதிப்பும் நல்ல பெயரும் கிடைக்கப் பெறுவார்கள். அரசுத் துறையில் பணிபுரியும் கடக ராசி அன்பர்கள்  பணியிடச் சூழல் சாதகமாக இருக்கக் காண்பார்கள். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவு கிடைக்கும். உங்களின் கடின உழைப்புக்கேற்ற அங்கீகாரத்தை உங்கள் மேலதிகாரிகளின் மூலம் பெறுவீர்கள். 

தொழில்:

சொந்தத் தொழில் செய்யும் கடக ராசி அன்பர்கள் இந்த மாதம் தொழில் சார்ந்த முடிவுகளில் குடும்பத்தில் இருக்கும் மூத்தவர்களின் ஆலோசனை கேட்டு நடப்பது உங்களுக்கு சாதகமான பலன்களை கொடுக்கும். கூட்டுத்தொழிலில் நல்ல லாபங்களை எதிர்பார்க்கலாம். பகுதி நேரத் தொழில் தொடங்கும் எண்ணம் கொண்ட கடக ராசி அன்பர்களுக்கு தங்கள் எண்ணங்களை செயல்படுத்த இந்த மாதம் ஏற்ற மாதமாக இருக்கும். 

தொழில் வல்லுனர்கள்:

தொழில் சார்ந்த பயணங்கள் உங்களுக்கு நன்மை அளிக்கும். நிதி மற்றும் நீதித் துறையில் பணிபுரியும் தொழில் வல்லுனர்களுக்கு உயர்பதவி கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. இந்த மாதம் உங்கள் வருமானம் உயரும், பொருளாதார ஏற்றம் காண்பீர்கள். சக பணியாளர்களுடன் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நன்மை பயக்கும். 

உத்தியோகம் மற்றும் தொழில் உயர்வுக்கு முருகன் பூஜை

ஆரோக்கியம்:

உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்றாலும் நீங்கள் கவனமாகச் செயல்பட வேண்டும்.  தலைவலி மற்றும் குடல் சம்மந்தப்பட்ட உடல் உபாதைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. எனவே உணவு கட்டுப்பாடு அவசியம் தேவை. குறித்த நேரத்தில் உணவை உட்கொள்ள வேண்டும். எளிதில் ஜீரணம் ஆகும் உணவை எடுத்துக்கொள்வது சிறப்பு. 

உடல் ஆரோக்கியம் பெற சந்திரன் பூஜை

மாணவர்கள்:

இந்த மாதம் பள்ளிக் கல்வி படிக்கும் மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள். கடின உழைப்பு மற்றும்  விடா முயற்சி மூலம் வெற்றி காண்பார்கள். உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் ஆசிரியர் மற்றும் பெற்றோரின் அறிவுரைகளை கேட்டு நடந்தால் வெற்றி பெறாலாம். ஆராய்ச்சிக் கல்வி பயிலும் மாணவர்கள்  கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

மாணவர்களின் கிரகிக்கும் திறன் கூட கணேஷா பூஜை

சுப நாட்கள்: 

4, 5, 7, 8, 9.

அசுப நாட்கள்:

2, 3, 18, 31.


banner

Leave a Reply