ரிஷபம் ஜனவரி மாத ராசி பலன் 2022 | january Matha Rishabam Rasi Palan 2022

ரிஷபம் ஜனவரி 2022 பொதுப்பலன்கள்:
ரிஷப ராசி அன்பர்களே! புது வருடத்தின் ஆரம்பமே உற்சாகம் நிறைந்தாக இருப்பது உங்களுக்கு மிக்க மகிழ்ச்சியை அளிக்கும். உங்கள் வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும். திருமணம், குழந்தைப் பேறு என்ற வகையில் நீங்கள் செலவுகளை சந்தித்தாலும் சுப விரயங்கள் என்னும் வகையில் மகிழ்ச்சியுடன் செலவுகளை மேற்கொள்வீர்கள். கணவன் மனைவி உறவு சுமுக உறவாக இருக்கும். இந்த மாதத்தின் பிற்பகுதியில் நீங்கள் குடியிருக்கும் வீட்டை மாற்ற நினைப்பவர்களுக்கு ஏற்ற காலமாக அமையும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாணவர்கள் தங்கள் விடா முயற்சி மூலம் வெற்றி காண்பார்கள்.
உங்கள் ராசி பலன்களை பற்றி மேலும் அறிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அணுகுங்கள்
காதல் / குடும்பம்:
இந்த மாதம் குடும்ப உறுப்பினர்களுடன் நல்லுறவு காணப்படும். குடும்பத்தாருடன் ஆன்மீக பயணம் மேற்கொள்வீர்கள். பயணங்கள் மூலம் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். ரிஷப ராசி இளம் வயது காதலர்கள் இந்த மாதம் சிறிது கவனமுடன் நடந்து கொள்ள வேண்டும். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் வந்து போகும் என்பதால் தேவையற்ற பேச்சுகளை தவிர்க்க வேண்டும். வாக்குவாதங்களில் ஈடுபடுதல் கூடாது. திருமணமான தம்பதிகள் கருத்தொருமித்து வாழ்க்கை நடத்துவார்கள். தாம்பத்தியத்தில் நல்லிணக்கம் கூடும்.
காதலர்களுக்கு இடையே நெருக்கம் அதிகரிக்க சுக்கிரன் பூஜை
நிதி நிலை:
உங்கள் நிதி நிலை வரவேற்கத்தக்க வகையில் இருக்கும். உங்கள் வருமானம் கணிசமாக உயரும். குறிப்பாக பிட் காயின் முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். செலவுகளைப் பொறுத்தவரை வீடுபராமரிப்பு, பயணங்கள் போன்ற வகையில் செலவுகளை மேற்கொள்வீர்கள். தொழில் விரிவாக்கத்திற்காக பண முதலீடுகளை மேற்கொள்வீர்கள்.
நிதி நிலையில் ஏற்றம் காண ராகு பூஜை
வேலை:
நீங்கள் அரசுத் துறையில் பணி புரிபவர் என்றால் நீங்கள் எதிர்பார்க்கும் பதவி உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள். தனியார்த் துறை பணியாளர்கள் பணியிடத்தில் சில நெருக்கடிகளை சந்திப்பார்கள். மேலதிகாரிகளுடன் சில கருத்து வேறுபாடுகள் தோன்றும் எனவே கவனமுடன் செயல்பட வேண்டும்.
தொழில்:
இந்த மாதம் உங்கள் தொழில் சிறப்பாக நடக்கும். தொழில் மூலம் கணிசமான பண வரவு இருக்கும். உங்கள் நிதிநிலை மேம்படும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்கள் தங்கள் எண்ணங்களுக்கு இந்த மாதம் செயல் வடிவம் கொடுக்கலாம். வாகனம் சம்மந்தப்பட்ட கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். உங்களில் சிலர் இந்த மாதம் வெளிநாட்டு தொழில் வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
தொழில் வல்லுனர்கள்:
உங்கள் தொழில் சிறப்பாக நடக்கும். வாடிக்கையாளர்கள் திருப்தி அடையும் வகையில் தொழில் நடத்தவீர்கள். சுய தொழில் தொடங்க எண்ணம் கொண்டவர்களுக்கு இந்த மாதம் புதிய தொழிலில் முதலீடு செய்ய ஏற்ற காலகட்டமாக உள்ளது. வெளிநாடு செல்ல முயற்சி மேற்கொள்ளும் ரிஷப ராசி தொழில் வல்லுனர்கள் தங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பார்கள்.
உத்தியோகம் மற்றும் தொழில் வளர்ச்சிக்கு முருகன் பூஜை
ஆரோக்கியம்:
உங்கள் ஆரோக்கியம் சீராக இருக்கும் என்றாலும் உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உங்கள் தந்தையின் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. தந்தைக்கு இந்த மாத பிற்பகுதியில் சிறு சிறு உடல் உபாதைகள் வந்து மறையும். தந்தையின் உடல் நலனில் அக்கறை தேவை.
ஆரோக்கியமான உடல் நலனுக்கு செவ்வாய் பூஜை
மாணவர்கள்:
பள்ளிக்கல்வி படிக்கும் மாணவ மாணவிகள் இந்த மாதம் சிறப்பாகச் செயல்படுவார்கள். விடாமுயற்சி மூலம் தங்கள் இலக்குகளை அடைவார்கள். மட்டை பந்து மற்றும் கூடை பந்து போன்ற விளையாட்டுகளில் ஆர்வம் அதிகம் காட்டுக் காலக் கட்டமாக இந்த மாதம் அமையும். பொதுவாக விளையாட்டுகளில் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள்.
மாணவர்கள் படிப்பில் வெற்றி பெற சரஸ்வதி பூஜை
சுப நாட்கள்:
4, 5, 6, 7, 9, 12, 14, 15, 21, 29, 30.
அசுப நாட்கள்:
1, 2, 3, 28, 31.
