AstroVed Menu
AstroVed
search
search

மேஷம் ஜனவரி மாத ராசி பலன் 2022 | january Matha Mesham Rasi Palan 2022

dateDecember 10, 2021

மேஷம் ஜனவரி 2022 பொதுப்பலன்கள்:

மேஷ ராசி அன்பர்களே! இந்த மாதம் குடும்பத்தில் நீங்கள் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டியிருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு நடந்து கொள்ள வேண்டியது அவசியம். வாழ்க்கைத் துணை மற்றும் அவர்கள் வீட்டாரிடம் கருத்து வேறுபாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே தேவையற்ற பேச்சு மற்றும்  வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மை தரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு  அதிக பணிச் சுமை மற்றும் அலைச்சல் இருக்கும். அதன் காரணமாக குடும்பத்திற்கென அதிக நேரத்தை ஒதுக்க இயலாமல் போகலாம். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாணவர்கள் தடைகளைத் தாண்டி சிறப்பாகக் கல்வி பயில்வார்கள். 

உங்கள் ராசி பலன்களை பற்றி மேலும் அறிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அணுகுங்கள்

காதல் / குடும்பம்:

இளம் வயது மேஷ ராசி அன்பர்கள் தங்கள் காதல் உறவில் கருத்து வேறுபாடுகள் ஏற்படக் காண்பார்கள். குறிப்பாக  பணம் சம்மந்தபட்ட  விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். எனவே வாக்கு வாதங்களை தவிர்ப்பது நன்மை பயக்கும். கணவன் மனைவி பரஸ்பரம் விட்டுக் கொடுத்துச் செல்வதன் மூலம் நெருக்கம் அதிகரிக்கும். இந்த மாதம் உங்கள் நண்பர்களுடனான உறவு சுமுகமாக இருக்கும். 

காதலில் வெற்றி உண்டாக லக்ஷ்மி பூஜை

நிதி நிலை:

மேஷ ராசி அன்பர்கள் இந்த மாதம் கிரிப்டோ கரன்சி மற்றும் பை கரன்சி முதலீடுகள் மூலம் நல்ல லாபத்தை ஈட்ட முடியும்.  பொறியியல் மற்றும் உயர்கல்வித் துறையில் பணிபுரிபவர்கள் கணிசமான பணம் சம்பாதிப்பார்கள். அதன் மூலம் பொருளாதார  முன்னேற்றம் காண்பார்கள். சொந்தத் தொழில் செய்யும் மேஷ ராசி அன்பர்கள் இந்த மாதம் நிலம் அல்லது வாகனம் வாங்கும் யோகம் காண்பார்கள். 

நிதி நிலையில் ஏற்றம் காண கேது பூஜை

வேலை:

நீங்கள் அரசுத் துறையில் பணியாற்றுபவர் என்றால் நீங்கள் சிறப்பாகப் பணியாற்றி மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவார்கள். உங்களில் சிலருக்கு வெளியூர் சென்று வேலை பார்க்க வேண்டிய சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது. உத்தியோகம் நிமித்தமாக பயணமும் அலைச்சலும் மிகுந்து காணப்படும். உத்தியோகம் பார்க்கும் இடத்தில் உடன் பணிபுரியும் சக பணியாளர்கள் உங்களுடன் நட்புணர்வுடன் பழகுவார்கள். அவர்களின் முழு ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்கும். 

தொழில்:

மேஷ ராசி அன்பர்களின் தொழில்  சிறப்பாக நடக்கும். குறிப்பாக வெளிநாட்டுத் தொடர்புடைய இறக்குமதி தொழில் செய்பவர்கள் இந்த மாதம் அதிக லாபத்தை காண்பார்கள். கூட்டுத்தொழில் செய்பவர்கள் இந்த மாதம் தங்கள் தொழிலில்  முன்னேற்றம் காண இயலும். கூட்டுத்தொழிலில் லாபம் அதிகரிக்கும். 

தொழில் வல்லுனர்கள்:

நீங்கள் அரசுத் துறை சார்ந்த தொழிலில் இருப்பவர் என்றால் சிறந்த பலன்களைக் காண கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். என்றாலும் உங்கள் உழைப்புக்கேற்ற அங்கீகாரமும் பெயரும் புகழும் பெறுவீர்கள். வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை சம்பாதிப்பீர்கள். இந்த மாதம் சுயதொழில் செய்யும் தொழில் வல்லுனர்கள் மனதில் தன்னம்பிக்கை நிறைந்து  காணப்படும். உங்கள் தன்னம்பிக்கை வெற்றிக்கு வழி வகுக்கும். 

உத்தியோகம் மற்றும் தொழிலில் ஏற்றம் கிடைக்க அஷ்ட லக்ஷ்மி பூஜை

ஆரோக்கியம்:

உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் என்றாலும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். முறையான உணவு உங்கள் சீரான ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கும். தியானம் மற்றும் நடைபயிற்சி செய்வதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியும். தாயாரின் உடல் நலனில் அக்கறை தேவை. தலைவலி மற்றும் இடுப்புவலி போன்ற உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. 

உடல் ஆரோக்கியம் பெற சந்திரன் பூஜை

மாணவர்கள்:

பள்ளிக்கல்வி பயிலும் மாணவர்கள் மனதை ஒருமுகப் படுத்துவதில் சிரமம் காண்பார்கள்  என்றாலும்  கவனச் சிதறல் காரணமாக ஏற்படும் தடைகளையும் தாண்டி பல புதிய விஷயங்களை கற்றுக் கொள்வார்கள். கணிதத் துறையில் ஆரய்ச்சிக் கல்வி படிக்கும் மாணவர்கள் சிறிது கவனமுடன் படித்தால் ஆராய்ச்சியில் வெற்றி பெற இயலும். 

மாணவர்களின் கிரகிக்கும் திறன் கூட கணேஷா பூஜை

சுப நாட்கள்: 

4, 5, 6, 9, 12, 14, 27, 29.

அசுப நாட்கள்:

2, 3, 21, 31.  


banner

Leave a Reply