AstroVed Menu
AstroVed
search
search

மிதுனம் ஜனவரி மாத ராசி பலன் 2022 | january Matha Mithunam Rasi Palan 2022

dateDecember 10, 2021

மிதுனம் ஜனவரி 2022 பொதுப்பலன்கள்:

மிதுன ராசி அன்பர்களே! அதிக வேலை காரணமாக உங்கள் குடும்பத்தாருடன் உங்களால் அதிக நேரம் செலவு செய்ய இயலாத நிலை இருக்கும். என்றாலும் குடும்ப உறுப்பினர்களுடன் வெளி இடங்களுக்கு செல்ல நீங்கள் விருப்பம் கொள்வீர்கள். கணவன் மனைவி உறவு சுமுகமான உறவாக இருக்கும்.  உங்கள் நிதிநிலை ஏற்றத்துடன் இருக்கும். அரசுத் துறையில் பணி புரியும் மிதுன ராசி அன்பர்களுக்கு வருமானம் கணிசமாக உயரும். நீங்கள் விரும்பும் வண்ணம் பதவி உயர்வு பெறுவீர்கள்.   உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாணவர்கள் தாங்கள் விரும்பும் வகையில் வெற்றி காண பொறுமையுடன் செயல்பட வேண்டும்.  

உங்கள் ராசி பலன்களை பற்றி மேலும் அறிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அணுகுங்கள்

குடும்பம்:

மிதுன ராசி இளம் வயது காதலர்கள் தங்கள் காதல் உறவில் இனிமை இருக்கக் காண்பார்கள். இருவரும் பரஸ்பரம் ஓருவர் மற்றவரின்  அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். திருமணமான தம்பதிகளுக்கு இடையே ஒற்றுமை காரணமாக  கருத்து ஒருமித்து வாழ்வார்கள். இருவருக்கும் இடையே நெருக்கமும் அந்நியோன்யமும் அதிகரிக்கும்.   

கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்க சுக்கிரன் பூஜை

நிதி நிலை:

உங்கள் நிதிநிலை சிறப்பாக இருக்கும். முன்னேற்றத்தை நோக்கிய நிலையில் உங்கள் பொருளாதார     நிலை செல்லும். பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்வதற்கும் லாபங்களை ஈட்டுவதற்கும் இந்த மாதம் ஏற்றதாக உள்ளது.     வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குதல் போன்ற விஷயங்களுக்காக பணத்தை செலவு செய்வீர்கள். 

பொருளாதாரத்தில் ஏற்றம் காண குரு பூஜை

வேலை:

உத்தியோகத்ததைப் பொறுத்தவரை இந்த மாதம் நீங்கள் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். பணியிடச் சூழல் நீங்கள் வரவேற்கத்தக்க வகையில் இருக்கும். தனியார் துறையில் பணிபுரியும் மிதுன ராசி அன்பர்கள் புதிய யுக்திகளைப் பயன்படுத்தி சிறப்பாகப் பணியாற்றுவார்கள். பல புதிய விஷயங்களை கற்றுக் கொள்வார்கள். மேலும் தாங்கள் கற்றதை பயன்படுத்தி பணியிடத்தில் பாராட்டைப் பெறுவார்கள். 

தொழில்:

சொந்தத் தொழில் செய்யும் மிதுன ராசி அன்பர்கள் தங்கள் தொழில் சிறப்பாக நடை பெறக் காண்பார்கள். அதிக வாடிக்கையாளர்களைப் பெற்று சிறந்த லாபம் ஈட்டுவார்கள். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கும் தொழில் லாபகரமாக நடக்கும்.  பங்கு வர்த்தகத்தின் மூலம்  லாபம் கிட்டும். கடந்த கால முதலீடுகள் மூலம் நீங்கள் நல்ல ஆதாயமும் பண வரவும் பெறுவீர்கள். 

தொழில் வல்லுனர்கள்:

நீங்கள் சொந்தமாகத் தொழில்  செய்பவர் என்றால் இந்த மாதம் நீங்கள் அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். வெளிநாட்டில் தொழில் செய்வது குறித்த உங்கள் முயற்சிகளுக்கு இந்த மாதம் சிறந்த பலன் கிட்டும். பிறரிடம் பணி புரியும். தொழில் வல்லுனர்கள் பணி செய்யும் இடத்தில் சாதனைகளைப் புரிவதற்கு வாய்ப்பு உள்ளது. 

உத்தியோகம் மற்றும் தொழில் மேன்மைக்கு துர்கா பூஜை

ஆரோக்கியம்:

உடல் ஆரோக்கியத்தை பொறுத்த வரை, ஆரோக்கியம் சீராக  இருக்கும் என்ற போதிலும் ஒற்றைத் தலை வலி மற்றும் வயிற்றில் செரிமான பிரச்சனைகள் வரலாம். உண்ணும் உணவில் கவனம் தேவை. தாய் தந்தை போன்ற வயதானவர்களின் உடல் நிலையில் சிறிது கவனம் தேவை.   

ஆரோக்கியமான உடல் நலனுக்கு செவ்வாய் பூஜை

மாணவர்கள்:

பள்ளிக்கல்வி பயிலும் மாணவர்கள் இந்த மாதம் பொறுமையுடன் செயல்பட வேண்டும். பொறுத்தார் பூமி ஆள்வார் என்பது போல நீங்கள் பொறுமையுடன் கடினமாக உழைத்துப் படித்தால் வெற்றி நிச்சயம். உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். ஆராய்ச்சி கல்வி பயிலும் மாணவர்கள் கவனச் சிதறல் போன்ற தடைகளையும் தாண்டி கல்வியில் முன்னேறுவார்கள்.     

சுப நாட்கள்: 

23, 27, 31.

அசுப நாட்கள்:

3, 4, 21, 22.


banner

Leave a Reply