January Matha Magaram Rasi Palan 2022
மகரம் ஜனவரி 2022 பொதுப்பலன்கள்:
குடும்ப உறவினர்களுடன் நல்லுறவு நீடிக்கும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். ஆன்மீகத்திற்காக பயணம் மேற்கொள்வீர்கள். திருமணத்திற்குக் காத்திருப்பவர்களுக்கு தக்க துணை கிடைக்க இந்த மாதம் உகந்த மாதம் ஆகும். திருமணமான தம்பதிகளுக்கு இடையே ஒற்றுமை நிலவும். இந்த மாதம் உங்கள் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். மகர ராசி அன்பர்கள் இந்த மாதம் தங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். மாணவர்கள் பல புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுவார்கள். வெளிநாடு சென்று கல்வி பயில விரும்பும் மாணவர்கள் தங்களின் விருப்பங்கள் நிறைவேறக் காண்பார்கள்.

உங்கள் ராசி பலன்களை பற்றி மேலும் அறிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அணுகுங்கள்
காதல் / குடும்பம்:
மகர ராசி இளம் வயது காதலர்களுக்கு இது கவனமாக இருக்க வேண்டிய மாதம் ஆகும். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் மற்றும் மனஸ்தாபங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. . திருமணமான தம்பதிகள் கருத்தொருமித்து வாழ்வார்கள். இருவருக்கும் இடையே சுமுகமான உறவு இருக்கும். குழந்தைகளுடனான உறவுநிலை பலப்படும்.
காதல் உறவு மேம்பட சுக்கிரன் பூஜை
நிதி நிலை:
இந்த மாதம் உங்கள் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். சந்தை வியாபாரம் செய்பவர்கள் அதாவது காய்கறி மற்றும் பழங்கள் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று மந்த நிலை இருக்கும் காரணத்தால் பணப்புழக்கம் குறைவாக இருக்கும் இது உங்கள் மனதில் பதட்டத்தை ஏற்படுத்தும். பணத்தை கவனமாகச் செலவு செய்ய வேண்டும். வீடு பராமரிப்பிற்காக அதிகம் செலவுகள் செய்ய நேரலாம்.
பொருளாதாரத்தில் ஏற்றம் காண குரு பூஜை
வேலை:
அரசு உத்தியோகத்தில் இருக்கும் மகர ராசி அன்பர்களுக்கு பணியிடத்தில் அதிக பொறுப்புகள் வழங்கப்படும். நீங்கள் உங்கள் பொறுப்புகளை சரிவர நிறைவேற்றுவீர்கள். உங்கள் திறமைக்குரிய பாராட்டை மேலதிகாரிகளிடம் இருந்து பெறுவீர்கள். தனியார் துறையில் பணி புரியும் மகர ராசி அன்பர்கள் இந்த மாதம் பணியிடத்தில் அதிக பணிகள் இருக்கக் காண்பார்கள். அதிக பணிச் சுமை இருந்த போதிலும் சிறப்பாகப் பணியாற்றுவார்கள். பணியிடச் சூழல் அனுகூலமாக இருக்கும். சக பணியாளர்களின் ஆதரவும், ஒத்துழைப்பும், உதவியும் கிடைக்கும்.
தொழில்:
இந்த மாதம் உங்கள் தொழில் சிறப்பாக நடைபெறும். குறிப்பாக கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு தொழில் மூலம் வருமானம் பெருகும். குறிப்பாக ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழில் புரிபவர்களுக்கு இந்த மாதம் சிறந்த பலன்கள் கிட்டும். தொழிலில் லாபம் அதிகரித்து காணப்படும்.
தொழில் வல்லுனர்கள்:
மகர ராசி தொழில் வல்லுனர்கள் இந்த மாதம் பல புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள். பொறுப்புகள் உங்களுக்கு வழங்கப்படும். நீங்கள் சிறப்பாகப் பணியாற்றி வாடிக்கையாளர்கள் மற்றும் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். கட்டிடத் துறையை சார்ந்த தொழில் வல்லுனர்கள் தங்களது தொழிலில் அதிக லாபங்களை எதிர்பார்க்கலாம்.
உத்தியோகம் மற்றும் தொழில் உயர்வுக்கு முருகன் பூஜை
ஆரோக்கியம்:
மகர ராசி அன்பர்கள் இந்த மாதம் தங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்யிருக்கும். வயதில் மூத்தவர்களுக்கு சிறுநீரகம் சம்மந்தப்பட்ட உடல்நல பாதிப்பு ஏற்படலாம். எனவே உங்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. போதுமான நீர் உட்கொண்டு இந்த பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம். முறையான உடற்பயிற்சியும் சத்தான உணவும் உங்கள் ஆரோக்கியத்தைக் காக்கும்.
உடல் ஆரோக்கியத்திற்கு புதன் பூஜை
மாணவர்கள்:
பள்ளிக் கல்வி பயிலும் மாணவர்கள் பல புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுவார்கள். வெளிநாடு சென்று கல்வி பயில விரும்பும் மாணவர்கள் தங்களின் விருப்பங்கள் நிறைவேறக் காண்பார்கள். பேராசிரியர்களின் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகளைப் பின்பற்றுவதன் மூலம் நீங்கள் வெற்றி காண இயலும். ஆராய்ச்சி கல்வி பயிலும் மாணவர்கள் கவனச் சிதறல் போன்ற தடைகளையும் தாண்டி கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். .
மாணவர்கள் படிப்பில் வெற்றி பெற சரஸ்வதி பூஜை
சுப நாட்கள்:
1, 4, 5, 7, 9, 12, 14, 15, 27, 28, 29, 30.
அசுப நாட்கள்:
2, 3, 6, 8, 10, 11, 13, 16, 21, 22, 23, 25, 26, 31







