கும்பம் ஜனவரி மாத 2021 ராசி பலன்:
பொதுப்பலன்கள் : கும்ப ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்களுக்கு ஆன்மீகம் கை கொடுக்கும். இறைவன் மீதான உங்கள் நம்பிக்கை மற்றும் பிரார்த்தனை உங்களுக்கு நல்ல பலன் அளிக்கும். அதன் மூலம் நீங்கள் மாற்றங்களைக் காண இயலும். வெளிநாட்டில் வேலை தேடும் அன்பர்களுக்கு இந்த மாதம் வேலைக்குச் செல்லும் வாய்ப்பு கிட்டும். உங்கள் மனதுள் பல போராட்டங்கள் ஏற்படும். இதனால் பதட்டமான நிலை இருக்கும். ஆன்மீகப் பயணங்களை மேற்கொள்வதன் மூலம் உங்கள் மனப்பத்தட்டத்தைக் குறைத்துக் கொள்ள இயலும். இந்தச் சூழ்நிலையில் உங்கள் மனதிற்கு ஆறுதல் தரும் வகையில் உங்கள் நண்பர்களும் உங்கள் நலம் விரும்புபவர்களும் ஆதரவாக இருப்பார்கள். உங்கள் ஆன்மீக நாட்டமும் இறைவனின் அருளும் உங்கள் தனிப்பட்ட வாழ்விலும் தொழிலும் மேன்மை அளிக்கும். கும்ப ராசி மாத பலன் 2021 குறித்த முழு விவரம் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.
வேலை: பணி செய்யும் கும்ப ராசி அன்பர்கள் இந்த மாதம் தைரியமாகச் செயல்படுவீர்கள். உங்கள் தைரிய மனப்பான்மை தான் தடைகளை மீறி நீங்கள் செயல்பட துணை நிற்கும். மேலும் நீங்கள் முன்னேற்றப் பாதையில் பயணம் செய்ய உங்களுக்கு உதவும். உங்களின் திறமை மற்றும் துணிவான செயல்பாடு உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வை பெற்றுத் தரும்.
காதல் உறவு : நீங்கள் இளம் வயதினர் என்றால் உங்கள் மனதில் காதல் அரும்பு மலரும். உங்களின் துணிவான பேச்சு மற்றும் நடத்தை பிறருக்கு அதிருப்தியை அளிக்கும். உங்களின் மிடுக்கு பிறரின் பார்வையில் உங்களின் கடுமையான குணமாகத் தோன்றும். எனவே நீங்கள் கவனமுடன் செயல்பட வேண்டும்.
திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண : சுக்கிரன் பூஜை’
நிதிநிலை: சென்ற மாதத்தை விட இந்த மாதம் உங்கள் நிதிநிலையில் முன்னேற்றம் இருக்கும். பொருளாதார முன்னேற்றம் உங்கள் பதட்டத்தைத் தணிக்கும். நீங்கள் பிறருக்குக் கொடுத்த கடன் தொகைகளை வசூல் செய்வீர்கள். நீங்கள் உங்கள் சேமிப்பை உயர்த்திக் கொள்ள குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். உங்கள் உடன் பிறந்தவர்கள் அல்லது நண்பர்கள் மூலம் நீங்கள் மற்றவர்களிடம் பெற்ற கடனை அடைத்து விடுவீர்கள்.
நிதிநிலை மேம்பட : சூரியன் பூஜை
ஆரோக்கியம் : உங்கள் ஆரோக்கியம் இந்த மாதம் சீராக இருக்க வாய்ப்பில்லை. சில தொந்தரவுகள் இருக்கும். மருத்துவ சிகிச்சை தேவைப்படும். சிறிய அளவில் உடல் உபாதைகள் காணப்பட்டாலும் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று மருந்து உட்கொள்வது சிறந்தது. ஆரோக்கியத்தில் அஜாக்கிரதையாக இருக்காதீர்கள். உணவில் கவனம் செலுத்துங்கள். உடற் பயிற்சி செய்யுங்கள்.
உங்கள் ஆரோக்கியம் மேம்பட : அங்காரக பூஜை
தொழில் : இந்த மாதம் கூட்டுத் தொழில் சிறப்பாக இருக்காது. கூட்டுத் தொழில் குறித்து புதிய நபர்களுடன் ஆலோசனை நடத்துவீர்கள். ஆனால் சில வாக்குவாதங்கள் உங்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கும். தொழிலில் அதிக போட்டிகள் காணப்படும். நீங்கள் கூட்டாளிகள் அல்லது ஒப்பந்ததாரரை கவனமுடன் தேர்ந்தெடுக்க வேண்டும். தொழில் முதலீடு முறித்து கவனமுடன் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும்.
தொழில் வல்லுனர்கள் : கும்ப ராசி தொழில் வல்லுனர்களிடம் ஆராய்ச்சி குணமும் எந்தவொரு விஷயத்திலும் நம்பகத்தன்மை தேடும் குணமும் இருக்கும். ஒரு செயலை செய்வதற்கு முன் அதன் நிறை குறைகளை ஆராய்ந்து பாராமல் அச்செயலில் இறங்காதீர்கள். உங்கள் மேலதிகாரிகள் உங்கள் திறமைகளை பாராட்டுவார்கள். என்றாலும் நீங்கள் புகழ்ச்சிக்கு மயங்காதீர்கள். உங்கள் அதீத தைரியம் உங்கள் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு சிலருக்கு கிட்டும்.
வேலையில் முன்னேற்றம் காண : சுக்கிரன் பூஜை
மாணவர்கள் : கும்ப ராசி மாணவர்களுக்கு இந்த மாதம் சிறந்த மாதமாக இருக்கும். வெளிநாடு சென்று படிக்க விரும்பும் மாணவர்கள் கடுமையாக உழைப்பதன் மூலமும், பெற்றோர்களின் ஆலோசனை கேட்டு அதன்படி நடப்பதன் மூலமும் நீங்கள் வெற்றி காண்பீர்கள். பயணங்களின் போதும் விரிவுரையாளர்களிடம் பேசும் போதும் நீங்கள் தைரியமாகச் செயல்படுவீர்கள். ஆசிரியர்களின் பேச்சை கேட்டு நடந்து கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு கல்விக் கடன் எளிதாகக் கிடக்கும். நீங்கள் விரும்பும் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை கிடைக்கப் பெறுவீர்கள். போட்டித் தேர்வுகள் எழுதும் மாணவர்கள் எளிதில் வெற்றி பெறுவார்கள். உயர் கல்வி படித்த சில மாணவர்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
கல்வியில் மேன்மை பெற : குரு பூஜை
சுப நாட்கள் : 5, 6, 8, 9, 10, 11, 13, 14, 15, 22, 21, 27, 28, 29.
அசுப நாட்கள் : 1,2,3,4, 7, 12, 17, 18, 19, 20, 16, 23 24, 25, 26, 30, 31.
Leave a Reply