AstroVed Menu
AstroVed
search
search

தனுசு ஜனவரி மாத ராசி பலன் 2023 | January Matha Dhanusu Rasi Palan 2023

dateDecember 12, 2022

தனுசு ஜனவரி  மாத பொதுப்பலன்கள் 2023

தனுசு ராசிக்காரர்கள் தங்கள் அன்பின் உணர்வுகளை வெளிப்படுத்தவும், தங்கள் அன்புக்குரியவர்களுடன் மகிழ்ச்சியான மற்றும் இணக்கமான காதல் உறவுகளை அனுபவிக்கவும் இந்த மாதம் சிறந்ததாக இருக்கிறது. புதுமணத் தம்பதியினருக்கும் சுமுகமான திருமண பந்தம் இருக்கும். வேலை செய்பவர்கள் வேலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம், அதேசமயம் வணிகர்கள் சிறந்த புத்திசாலித்தனத்துடன் செயல்படலாம். தொலைதூரப் பயணங்களால் நல்ல லாபம் கிடைக்கும்.

காதல் / குடும்பம்:

காதலர்கள் தங்கள் உறவுகளில் நல்ல நெருக்கத்தைக் கொண்டிருக்கலாம். திருமணமானவர்களும் தங்கள் கூட்டாளிகளிடம் அதிக பாசத்தைக் கொண்டிருக்கலாம் மற்றும் வெளிப்படுத்தலாம். இருப்பினும், சொத்து விஷயங்களில் உறவினர்களுடன் சில தவறான புரிதல்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. மோதல்களைத் தவிர்க்க தயவு செய்து வாக்குவாதங்களிலிருந்து விலகி இருங்கள்.

காதல் உறவு மேம்பட சுக்கிரன் பூஜை

நிதி நிலை:

இந்த மாதம் உங்கள் வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு அதிக நிதி ஒதுக்க வேண்டியிருக்கும். பணியிடத்தில் புதிய நண்பர்களை உருவாக்கி அவர்களிடமிருந்து நிதி உதவி பெறலாம். உங்கள் பொருளாதாரம் நிலையானதாக இருக்கும். பங்குச் சந்தைகளில் ஈடுபடுபவர்கள் பங்கு வர்த்தக நிறுவனங்களில் முதலீடு செய்து லாபம் ஈட்டுவதற்கும் இந்த மாதம் ஏற்றதாகத் தோன்றுகிறது.

தன வருவாய் அதிகரிக்க சுக்கிரன் பூஜை

வேலை:

இது ஒரு நல்ல மாதமாக இருக்கலாம், குறிப்பாக தனியார் துறைகளில் பணிபுரிபவர்களுக்கு, அவர்கள் மறக்க முடியாத சாதனைகளை கூட செய்ய முடியும். நீங்கள் பணியிடத்தில் அசாத்திய முயற்சிகளை மேற்கொள்வீர்கள் மற்றும் பரந்த பாராட்டுகளைப் பெறுவீர்கள். வேலை சூழ்நிலையும் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

தொழில்:

இந்த மாதம் அனைத்து வியாபார விஷயங்களிலும் சாதகமான பலன்களை எதிர்பார்க்கலாம். பின்னலாடை ஏற்றுமதி தொழில்கள் குறிப்பிடத்தக்க லாபத்தை ஈட்டலாம், இது உங்கள் பொருளாதார நிலையை மேம்படுத்தும். ஆனால் கூட்டாண்மை வணிகங்களை நடத்துபவர்கள் தங்கள் வணிக அலகுகளை விரிவுபடுத்துவதற்கான முதலீடுகளைச் செய்வதற்கான நிதி பற்றாக்குறையை உணர வாய்ப்புகள் உள்ளன. கூட்டு முயற்சிகளில் அதிக செலவுகள் ஏற்படலாம்.

தொழில் வல்லுனர்கள்:

சுய தொழில் செய்யும் தனுசு ராசிக்காரர்கள் இந்த மாதம் தங்கள் பணி தொடர்பான முக்கிய விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. அவர்கள் இப்போது எந்த முக்கிய முடிவுகளையும் எடுக்காமல் இருப்பது நல்லது. வேலையில் உள்ள தொழில் வல்லுநர்களும், வேலை உயர்வு மற்றும் சம்பள உயர்வு போன்ற நேர்மறையான தொழில் வளர்ச்சிக்காக சில வாரங்கள் பொறுமையாக இருக்க வேண்டும்.

உத்தியோகம் மற்றும் தொழிலில் ஏற்றம் கிடைக்க சூரியன் பூஜை

ஆரோக்கியம்:

இந்த மாதம் உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். நீங்கள் மனரீதியாக சோர்வாக உணரலாம், ஆனால் நடைப் பயிற்சிகள் மற்றும் ஆழ்நிலை தியானத்தின் மூலம் உடலையும் மனதையும் புத்துணர்ச்சியடையச் செய்யலாம். பசுமையான மலைப்பாங்கான பகுதிகள் அல்லது ஆற்றங்கரை அல்லது கரையோர இடங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான பயணத்தை நீங்கள் திட்டமிடலாம்.

நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு வைத்தியநாத பூஜை

மாணவர்கள்:

பள்ளி மாணவர்களின் கிரகிக்கும் திறன் அதிகரிக்கலாம், இது அவர்களின் படிப்பில் சிறந்து விளங்க உதவும். உயர்கல்வி மாணவர்களும் தங்கள் விடாமுயற்சியால் சிறப்பாக செயல்பட முடியும். இருப்பினும், ஆராய்ச்சி மாணவர்கள் தங்கள் பணியில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும்; இது அவர்களின் கல்வி முயற்சிகளில் வெற்றிபெற உதவும்.

கல்வியில் ஏற்றம் உண்டாக துர்கா பூஜை

சுப நாட்கள்:

10, 12, 13, 14, 17, 18, 19, 20, 23, 24, 26, 27, 28, 31.

அசுப நாட்கள்:

7, 8, 9, 11, 15, 16, 21, 22, 25, 29, 30.

 


banner

Leave a Reply