கும்ப ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2023 to 2024 | Guru Peyarchi Palangal Kumbam 2023

Saturn Retrogrades in Aquarius for 140 Days. Time to Refocus, Strategize & Progress towards Your Life Goals Join Now!
India's No. 1
Online Astrology &
Remedy Solution

கும்ப ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2023 to 2024 | Guru Peyarchi Palangal Kumbam 2023

March 28, 2023 | Total Views : 203
Zoom In Zoom Out Print

கும்ப ராசி குரு பெயர்ச்சி 2023 பொதுப்பலன்கள்:

கும்ப  ராசி அன்பர்களே!  குரு உங்கள்  ராசிக்கு மூன்றாம் வீட்டில் பெயர்ச்சி ஆகிறார்.  இந்த பெயர்ச்சி  ஏப்ரல் 22, 2023 அன்று தொடங்கும், மேலும் இது மே 1, 2024 வரை நீடிக்கும்.  இந்த பெயர்ச்சி  12 மாதங்களுக்கு இருக்கும். குரு  உங்கள் ராசிக்கு  2 மற்றும் 11 ஆம் வீடுகளை ஆட்சி செய்கிறார்

3 வது வீடு உங்கள் முயற்சிகள், தொடர்பு, குறுகிய பயணங்கள் மற்றும் இளைய உடன்பிறப்பு உறவுகளைக் குறிப்பது.  குருவின் பார்வை  உங்கள் வாழக்கைத் துணை,  தொழில் பங்குதாரர்கள் மற்றும் நட்புடன் இணைக்கப்பட்ட 7 ஆம் வீடு, உங்கள் தந்தையுடனான உறவு, அதிர்ஷ்டம், ஆன்மீக தொடர்பு போன்றவற்றுடன் தொடர்புடைய 9 ஆம் வீடு மற்றும். இலாபங்கள், மூத்த உடன்பிறப்பு உறவுகள் மற்றும் அனைத்து பொருள்சார் வசதிகளின் விரிவாக்கம் போன்றவற்றைக் குறிக்கும்  11 ஆம் வீட்டில் விழும்

உத்தியோகம் :

தொழில் வாழ்க்கை மந்தமாக இருக்கலாம், வளர்ச்சி மெதுவாக இருக்கலாம். பதவி உயர்வுகள் தாமதமாகலாம். 3வது வீடும் சற்று தோஷமாக உள்ளது, ஆனால் குரு இயற்கை சுபர் என்பதால், வளர்ச்சி இருக்கும். ஆனால் சற்று தாமதமாகலாம். உங்கள்  ராசியில் சனிப்பெயர்ச்சி உங்களை தனிமைப் படுத்தும். சில கசப்பான அனுபவங்களும் இருக்கலாம். எனவே இந்த காலகட்டத்தில் அதிக எதிர்பார்ப்புகளை தவிர்க்கவும். மேலும், உணர்ச்சிகரமான முடிவுகளை எடுக்க வேண்டாம், ஏனெனில் அவை சாதகமற்ற முடிவுகளைத் தரும்.

காதல் / குடும்ப உறவு :

திருமணம் செய்ய விரும்புபவர்கள் அதிர்ஷ்டசாலியாக மாறலாம். உங்கள் தந்தை ஆதரவு தரலாம். உங்கள் எண்ணங்களை உங்கள் குடும்பத்தின் மீது திணிக்காதீர்கள். மூத்த உடன்பிறப்புகள் மூலம் ஆதரவில்லாமல் இருக்கலாம், ஆனால் இளையவர்கள் ஆதரவாக இருக்கலாம். நெகிழ்வாக இருங்கள் மற்றும் அகங்கார நடத்தையைத் தவிர்க்கவும். இதன் மூலம் நல்லிணக்கத்தையும் அமைதியையும் கொண்டு வர முடியும். காதலில் இருப்பவர்கள் வதந்திகளில் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் தொடர்புகளில் சாதுரியமாக இருங்கள்.

கிரக நிலைகள் தவறான புரிதல்களால் ஏற்படும் பிரிவுகளைக் குறிக்கின்றது. எனவே அமைதியாகவும் நிதானமாகவும் இருங்கள். வாக்குவாதங்கள் நீடித்தால் தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது.  நேர்மறையை பராமரிக்கவும். குழந்தைக்காக ஏங்கும் திருமணமான தம்பதிகளுக்கு இப்போது ஒரு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

நிதிநிலை :-

நிதி வளர்ச்சி சாத்தியமாகும். மேலும் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் இருக்கலாம். ஆரம்பத்தில், தாமதங்கள் அல்லது குறைந்த லாபம் இருக்கலாம். ஆனால் நீண்ட காலத்திற்கு நல்ல வருமானம் கிடைக்கும். இப்போது வணிக விரிவாக்கத்தைத் தவிர்க்கவும், புதிய யோசனைகளைத் தொடங்குவதற்கு முன் நன்றாக யோசிக்கவும். முதலீடு செய்வதற்கு முன் கொஞ்சம் ஆராய்ச்சி செய்தால் பெரிய இழப்பு ஏற்படாது. நீங்கள் கூட்டு முயற்சியில் ஈடுபட்டிருந்தால் விழிப்புடன் இருங்கள். வாய்வழி உறுதிமொழிகள் மற்றும் குறுக்குவழிகளுக்குச் செல்வதைத் தவிர்க்கவும்.

மாணவர்கள் :-

குரு ஞானம் மற்றும் அறிவுடன் தொடர்புடையது. நீங்கள் சில புதிய திறன்களைப் பெற வேண்டியிருக்கும். சிலர் கல்விக்காக கடன் வாங்கி வெளிநாடு செல்ல நேரிடும். நீட் மற்றும் பிற போட்டித் தேர்வுகளில் பங்கு பெறுபவர்கள் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டும். உங்கள் பாடத்தைத் தேர்ந்தெடுக்கும்போது கவனமாக இருங்கள், உங்கள் எதிர்காலம் அதைப் பொறுத்தே அமையும்.

ஆரோக்கியம் :-

உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த சரியான உணவைப் பின்பற்றுங்கள். உங்களுக்கு ஏதேனும் பெரிய உடல்நலப் பிரச்சினைகள் இருந்தால், அவை குணமடைய சிறிது நேரம் ஆகலாம். நாள்பட்ட உடல்நலப் பிரச்சினைகளில் இருந்து சிறிது நிவாரணம் பெறலாம். உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த உடற்பயிற்சி தொடர்பான செயல்பாடுகளைத் தொடரவும். நோய் எதிர்ப்பு சக்திக்கு சத்தான உணவு மற்றும் கீரைகளை அதிகம் சாப்பிடுங்கள். மன அழுத்தத்தைத் தவிர்க்கவும், இது நாள்பட்ட நோய்களை ஏற்படுத்தும். உங்கள் வாழ்க்கையில் வேலை-வாழ்க்கை சமநிலையை பராமரிக்கவும்.

பரிகாரங்கள் :-

1 . தினமும் குங்குமத் திலகத்தை நெற்றியில் தடவவும்.

2. குருவின் ஆசிகளைப் பெற, தொண்டு நிறுவனங்களுக்கு, குறிப்பாக அனாதை இல்லங்களுக்கு பணத்தை நன்கொடையாக வழங்குங்கள்.

3, பருப்பு, நெய், வெல்லம் ஆகியவற்றை, மாதம் ஒருமுறை, வியாழக்கிழமைகளில் தேவைப்படுபவர்களுக்கு தானம் செய்யுங்கள்.

Leave a Reply

Submit Comment
See More

Latest Photos