கும்ப ராசி அன்பர்களே! உங்கள் ராசிக்கு 2 மற்றும் 11 ஆம் வீடுகளுக்கு அதிபதியான குரு பகவான் (வியாழன் கிரகம்), உங்கள் ராசியில் சஞ்சாரம் செய்வதால், இந்த 2022 ஆம் ஆண்டு துவக்கத்தில் உங்களது சில விருப்பங்களும், கனவுகளும் நிறைவேறக்கூடும். ஏப்ரல் 12 க்குப் பின்னர், குரு உங்கள் 2 ஆம் வீட்டிற்குப் பெயர்ச்சி ஆவது, உங்கள் வாழ்க்கையில் அபார வளர்ச்சியையும், வெற்றியையும் அளிக்கக்கூடும். உங்கள் திட்டங்கள் அனைத்தும் நிறைவேறக் கூடும்; மதிப்பும் மரியாதையும் கணிசமாக உயரக்கூடும். வேலையிலும் நீங்கள் பெரும் உயரங்களை எட்டக்கூடும். எனவே, கும்ப ராசி அன்பர்களுக்கு, இந்த 2022, மிகுந்த வளமும், வெற்றியும், திருப்தியும் தரும் ஆண்டாக விளங்கக்கூடும். மேலும், இந்த வருட இறுதியிலும், 2023 இன் துவக்கத்திலும், நீங்கள் பெரும் செல்வத்தையும், ஆடம்பட வசதிகளையும் சேர்த்துக் கொள்ளக்கூடும். வருடம் முழுவதும் அதிர்ஷ்டமும் உங்களுக்குக் கைகொடுக்கும் என நீங்கள் நம்பலாம். எனவே, வளமும், சந்தோஷமும் நிழல் போல உங்களைத் தொடரக்கூடும்.
நடிப்பு, பாட்டு, எழுத்து, ஓவியம் போன்ற துறைகளில் உள்ளவர்கள், இந்த 2022 இல், பாராட்டு, பரிசுகள் மற்றும் பெரும் செல்வம் ஈட்டுவதற்கு வாய்ப்புள்ளது. சிலர் ஊடகம், சமூக ஊடகம் மூலம் புகழ் பெறலாம். பயணம் தொடர்பான வலைப்பதிவுகள், ஃபேஷன் புகைப்படங்கள், உங்களுக்குக் கணிசமான ஆதாயம் தரலாம். பல கும்ப ராசி அன்பர்களுக்கு, சிறு பயணங்கள் வெற்றிகரமாக அமையலாம்; சந்தோஷம் தரலாம். உங்களின் சில ஆசைகளும், லட்சியங்களும் நிறைவேறலாம். பலருக்கு வேலை, தொழிலில், குறிப்பிடத்தக்க வெற்றியும், வளர்ச்சியும் கிடைக்கலாம். ஆனால், மருத்துவ, பொறியியல், தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் பதவி உயர்வும், ஊதிய உயர்வும் பெற, கடுமையாகவும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் பணியாற்ற வேண்டியிருக்கும். அதே நேரம், முதலீடுகள், ஊக வணிகம், சந்தை விற்பனை, விளம்பரத் துறை மூலம் சிலர் செல்வந்தராகலாம். தவிர, இந்த ஆண்டு, சிலர் ஆசிரியர் அல்லது பேராசிரியர் ஆவதற்கும் வாய்ப்புள்ளது.
இந்த ஆண்டு, இளம் வயதினர், தங்களுக்கு ஏற்ற துணையைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்புள்ளது. சிலருக்கு உண்மைக் காதலின் அனுபவமும் கிடைக்கக்கூடும். காதல் உறவில் உள்ளவர்கள் சிலர், தங்கள் காதலை பகிரங்கமாக அறிவிக்கவும் கூடும். காதலர் அல்லது காதலியுடன், நீங்கள், காதல் வேட்கை மிகுந்த தருணங்களை அனுபவிக்கக்கூடும். ஆனால், சிலர் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ளும் வாய்ப்புள்ளது. எனினும் உங்கள் துணையிடமிருந்து நீங்கள், விசுவாசத்தையும், அர்ப்பணிப்பையும் எதிர்பாக்கலாம். இந்த ஆண்டு உறவுகள் மீது நீங்கள் ஆழ்ந்த கவனம் செலுத்துவீர்கள். எனினும், சிலர், தங்களது நம்பிக்கைத் துரோகம் காரணமாக, விசுவாசத்திற்குரியவரை இழக்க வேண்டியிருக்கலாம். ஆயினும், பொதுவாக, இந்த 2022 இல், உங்கள் காதல் வாழ்க்கை ஆர்வத்தைத் தூண்டும் விதமாகவே அமையக்கூடும்.
மணவாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கையில் இணக்கமும், சந்தோஷமும், நிம்மதியும் நிலவக்கூடும். வசதி, சுகங்களை நீங்கள் அனுபவிக்ககூடும். இந்த ஆண்டு, வாழ்க்கைத் துணையின் ஆழ்ந்த அன்பு உங்களுக்குக் கிட்டக்கூடும். மண வாழ்க்கையில் மரியாதை, பரிவு, நெருக்கம் நிறைந்திருக்கக்கூடும். சிலருக்கு, வேலை விஷயங்களிலும், துணை அல்லது துணைவரின் அறிவுரையும், வழிகாட்டுதலும் கிடைக்கக்கூடும். சிலர் துணையுடன், இயற்கை அழகு மிக்க இடங்களுக்குப் பயணம் மேற்கொள்ளலாம். புதிதாகத் திருமணம் ஆனவர்களும் புதிய சூழ்நிலைக்கு விரைவில் அனுசரித்துக் கொள்வார்கள் எனலாம். காதல் திருமணங்கள் வெற்றி பெறக்கூடும்; சிலருக்குக் குழந்தை பாக்கியமும் கிடைக்கக்கூடும். வாழ்க்கைத் துணை தேடுபவர்களுக்கு, இந்த ஆண்டு, சரியான துணை கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது. எனவே, இந்த 2022, உங்களுக்கு, பெரும் இல்லற சுகம் தரும் மறக்கமுடியாத ஆண்டாகவும் இருக்கக்கூடும். வாழ்க்கைத் துணை, உங்கள் அனைத்து முயற்சிகளிலும் உதவி செய்து, நல்ல உறுதுணையாக விளங்குவார்.
உங்கள் வேலை, தொழிலில், இந்த வருடம் நீங்கள், பலவகையில் வருமானமும், லாபமும் ஈட்டலாம். கூட்டு வியாபாரம் வெற்றியும், மதிப்பும், பெரும் செலவமும் தரலாம். மேலும், சுயதொழில், கலைத்துறை அல்லது அரசியல் நடவடிக்கைகள், வெகு விரைவில் புகழும், செல்வமும் அளிக்கலாம். ஏப்ரல், 2022 க்குப் பின், ஹோட்டல், பயணம், உணவுத் தொழில்கள், வெற்றியும், வருமானமும் தரலாம். செலவுக்குப் பின்னரும், கணிசமான சேமிப்புடன், உங்கள் நிதிநிலை சிறந்து விளங்கும் எனலாம். தவிர, பல கும்ப ராசி அன்பர்களுக்குப் பல இடங்களிலிருந்து பணம் வந்து சேரலாம். ரியல் எஸ்டேட் எனப்படும் சொத்து வாங்கல், விற்றல், விவசாயம், தொழில் முனைவோர், சிறு கடை நடத்துபவர்கள் போன்றவர்களும் அதிக லாபம் பெறலாம். புதிதாகத் தொடங்கப்பட்ட வேலையும், வணிகமும் கூட நன்றாக நடைபெறலாம். ஆனால், இந்த ஆண்டு, ஆடம்பர வாழ்க்கை முறையைத் தவிர்த்து விடுவது நல்லது.
மாணவர்கள் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறக்கூடும். மேலும், சில கும்ப ராசி மாணவர்கள் நுழைவுத் தேர்வு அல்லது போட்டித் தேர்வுகளில் சிறப்பாக வெற்றி பெறும் வாய்ப்புள்ளது. இந்த வகையில் சிலருக்கு அரசாங்க அல்லது நிர்வாகத்துறையில் வேலை கிடைக்கவும் வாய்ப்புள்ளது. பல மாணவர்களுக்கு மதிப்பு மிக்க கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் இடம் கிடைக்கவும் கூடும். தவிர, இந்த ஆண்டில், மருத்துவம், பொறியியல், வெகுஜன ஊடகம், அக்கவுண்ட்ஸ் எனப்படும் கணக்கு வைத்தல் ஆகியவை பயிலும் மாணவர்கள், தங்கள் கல்வியில் சிறந்து விளங்கும் வாய்ப்புள்ளது.
இந்த ஆண்டு, சிலருக்கு இதயம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதிக மருத்துவச் செலவுகளும் ஏற்படக்கூடும். தவிர, குடும்பத்தினரின் ஆரோக்கியக் குறைபாடும், உங்களுக்குப் பிரச்சனையையும், பதட்டத்தையும் தரலாம். சிலருக்கு விபத்து காரணமாக, காயங்களும் ஏற்படலாம். சிலர் மஞ்சள் காமாலையினாலும், வேறு சிலர் சளி, இருமல், ஜுரத்தாலும் பாதிக்கப்படலாம். எனினும், எந்த உடல்நிலைக் குறைபாடாக இருந்தாலும், கும்ப ராசி அன்பர்கள், இப்பொழுது, விரைவில் குணமடைந்து விடக்கூடும். மேலும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையும், முறையான உடற்பயிற்சிகளும், இப்பொழுது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உங்கள் உடல், மன ஆரோக்கியத்தை அதிகரிக்கக்கூடும்.
சனிக்கிழமை மாலையில், அரச மரத்திற்கு அடியில், கடுகு எண்ணெய், ஆலிவ் எண்ணெய், அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றவும்
சனிக்கிழமைகளில், ரொட்டி, பாதாம், இனிப்பு போன்றவற்றை ஏழைகளுக்கும், பார்வை இல்லாதவர்களுக்கும் கொடுக்கவும்
சனிக்கிழமைகளில் நாய், பறவை, பசுவிற்கு உணவளிக்கவும்
சிவ ஆலயம் அல்லது ஹனுமான் ஆலயத்தில், சனி சாலிஸா அல்லது ஹனுமான் சாலிஸா பாராயணம் செய்யவும்
சனிக்கிழமைகளில் மாமிச உணவையும், மதுவையும் தவிர்க்கவும்
சனிக்கிழமைகளில் கருப்புப் பயிறு, கருப்பு ஆடைகள் போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் செய்யவும்.
எங்கள் ஜோதிடர்களின் ஆலோசனைகளைப் பெறுவதன் மூலம், குருபெயர்ச்சி பலன்களையும், எந்த முக்கிய செயல்களை தற்போது செய்யலாம், எதை தள்ளிப்போடலாம் என்று அறிந்து, அதற்கேற்ப நீங்கள் செயல்பட்டு வாழ்வில் வெற்றி காணலாம்.
உங்களின் ராசிக்கான குருபெயர்ச்சி 2020 பலன்களை அறியவும், குருபெயர்ச்சி காரணமாக உங்கள் வாழ்வில் ஏற்படவிருக்கும் முக்கிய நிகழ்வுகளை அறியவும், தனிப்பட்ட பலன்களுக்கு ஆர்டர் செய்யுங்கள்
குரு ஹோமம் செய்வதன் மூலம், குருவின் அருளால் உங்கள் வாழ்வில் அதிர்ஷ்டம், வெற்றி மற்றும் செல்வம் மேம்படும்