ரிஷப ராசி பொதுப்பலன்கள்
ரிஷப ராசி அன்பர்களே! இந்த மாதம் நீங்கள் மேற்கொள்ளும் எல்லா செயல்களிலும் சாதாரண பலன்களே கிட்டக் கூடும். உங்கள் தொழிலிலும், அது சார்ந்த பணிகளிலும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். கூடுதல் வேலையால் மன அழுத்தம் உண்டாகலாம். பல்வேறு பணிகளை ஒரே நேரத்தில் செய்ய வேண்டிய சூழ்நிலையும் உருவாகலாம். அந்த நேரங்களில் நீங்கள் கவனமாக நடந்து கொள்வது அவசியம். எனினும், உங்கள் கூரிய அறிவுத் திறன், வேலைகளை எல்லாம் எளிதாக முடித்துவிட உதவும். இது உங்களுக்கு ஆறுதல் தரும். பொருளாதாரம் தொடர்பான விஷயங்களிலும் ஏற்ற இறக்கங்கள் காணப்படும். சிறிய பயணங்கள் மேற்கொள்வதன் காரணமாகவும் செலவுகள் ஏற்படலாம். இவற்றையும் உங்களால் நல்ல முறையில் கையாள முடியும். தேவையான நேரங்களில் உங்களுடைய செயலாற்றல் உங்களுக்குக் கை கொடுக்கும்.
இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!
ரிஷப ராசி காதல் மற்றும் திருமண வாழ்க்கை
காதல் உறவுகளில் தற்காலிக பிரிவினைகள் ஏற்படலாம். எனவே, காதல் விஷயங்களைக் கையாளும் பொழுது, தெளிவான மனநிலையுடன் இருப்பது அவசியம். வாழ்க்கைத் துணையுடன் உறவு சாதாரணமாக இருக்கும். எனினும், குடும்பப் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் நீங்கள் பொறுமையைக் கடைபிடிப்பது அவசியம்.
ரிஷப ராசி நிதி
பொருளாதார நிலை சுமாராகவே இருக்கும். பண உதவி கேட்டு பிறர் உங்களை அணுகும் வாய்ப்புள்ளது. இந்தக் காலகட்டத்தில், கடன் கொடுப்பதைக் கண்டிப்பாகத் தவிர்த்து விடவும். எனினும் நண்பர்களிடம் கொடுத்து வைத்திருந்த பணத்தை, நீங்கள் கேட்டுப் பெறும் வாய்ப்புள்ளது.
ரிஷப ராசி வேலை
பணிகளில் நீங்கள் காட்டும் அர்ப்பணிப்பு, அலுவலகத்தில் நீங்கள் அங்கீகாரம் பெறுவதற்கு உதவியாக இருக்கும். உங்கள் உற்பத்தித் திறன், உங்களுக்கு உரிய மதிப்பும், அங்கீகாரமும் பெற்றுத் தரும் அதே நேரம், உங்கள் கடின உழைப்பு மனநிறைவையும் உங்களுக்கு அளிக்கும்.மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.
இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!
ரிஷப ராசி தொழில்
வியாபார நடவடிக்கைகள் லாபகரமாக நடைபெறாமல் போகலாம். பொதுவாக, அனைத்து விஷயங்களும் சாதாரணமாகவே இருக்கக் கூடும். இந்த நேரத்தில், குறைந்த பட்ச முயற்சிகளைச் செய்து விட்டு, அதிக பலன்களை எதிர்பார்க்காதீர்கள். அதே நேரம், புதிய முயற்சிகளின் பொழுது நம்பிக்கை இழக்காதீர்கள்.
ரிஷப ராசி தொழில் வல்லுனர்கள்
பொதுவாக, இப்பொழுது உங்கள் நடவடிக்கைகள் நன்றாகவே செல்லும். எனினும், வேலையில் தாமதங்கள் ஏற்படலாம். ஆனால், அவற்றைக் கண்டு நீங்கள் நம்பிக்கை இழந்து விடாமல், உங்கள் முயற்சிகளைத் தொடருங்கள். தன்னம்பிக்கையுடன் செயல்படுவது, உங்கள் திறமைகளை நன்கு வெளிப்படுத்தி, சிறப்பாக செயலாற்ற உதவும்.
ரிஷப ராசி ஆரோக்கியம்
இந்த மாதம், ரிஷப ராசி அன்பர்களின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் நீண்ட நாள் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் கூட, விரைவில் குணமடையும் வாய்ப்புள்ளது. எனினும், சத்தான உணவை உட்கொள்வதும், மருத்துவரின் அறிவுரைகளைக் கண்டிப்பாகப் பின்பற்றுவதும் மேலும் நன்மை தரும்.
ரிஷப ராசி மாணவர்கள்
கடின முயற்சி, தங்கள் அறிவுத் திறன் போன்றவற்றின் மூலம், மாணவர்கள் கல்வியில் நல்ல நிலையை அடைவார்கள். ஆசிரியர்கள், பெற்றோர்கள், நண்பர்கள் போன்றவர்களின் ஆதரவும், இப்பொழுது உங்களுக்குக் கிடைக்கும். எனினும், உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.
சுப தினங்கள் : 12,13,21,22,23,26,27,28
அசுப தினங்கள் : 1,2,3,14,15,19,20,29.
ரிஷப ராசி பரிகாரம்
அன்னை மஹாலக்ஷ்மி மற்றும் துர்க்கை பூஜை, வழிபாடு மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.
சுக்கிரன், குரு, ராகு, கேது போன்ற நவக்கிரக தேவதைகளுக்கு ஹோமம் மற்றும் பூஜை செய்து வழிபடுதல்.
எல்லோரிடமும் இன்முகத்துடன் பேசிப் பழகுதல். பாம்புப் புற்றுக்குப் பால் வார்த்தல்.

Leave a Reply