விருச்சிக ராசி பொதுப்பலன்கள்
விருச்சிக ராசி அன்பர்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, தொழிலிலும் சரி, இந்த மாதம் சவால்கள் நிறைந்ததாகக் காணப்படும். முடிவுகள் உங்களுக்குச் சாதகமாக அமைய, ஒவ்வொரு சூழ்நிலையிலும் நீங்கள் கடினமாக முயற்சி செய்ய வேண்டியிருக்கும். வேலையில் கவனக்குறைவு காரணமாக, சில நல்ல வாய்ப்புகளை நீங்கள் இழக்க நேரிடலாம். சக ஊழியர்கள் சிலர், உங்கள் நம்பகத் தன்மையையும் சந்தேகிக்கலாம். எனவே, பிறருடன் பழகும் பொழுதும், பேசும் பொழுதும் அமைதியான முறையில் நடந்து கொள்வது அவசியம். இது போல, அனைத்து விஷயங்களையும் நீங்கள் உறுதியாகக் கையாள்வதும் அவசியம். உங்களில் சிலர், இடம் மாறுவதற்கும் திட்டமிடக்கூடும். எனினும் உங்கள் நற்பெயரை மேம்படுத்தக் கூடிய வகையில் சமூக வட்டத்தில் நீங்கள் ஆர்வமுடன் பங்கேற்பீர்கள். உங்கள் ஆரோக்கியத்தில் இப்பொழுது முறையாக கவனம் செலுத்துவது நல்லது.
உங்களது ஜாதக பிரத்யேக பலன்களை தெரிந்து கொள்ள ஜோதிட வல்லுனரை அணுகவும்
விருச்சிக ராசி காதல் மற்றும் திருமண வாழ்க்கை
காதல் வாழ்க்கை மிக சிறப்பாக இருக்கும். சிலரது காதல், திருமணமாக மாறும் வாய்ப்புள்ளது. திருமண உறவுகளும் சீராக இருக்கும். ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகக் கூடும். பொதுவாக இந்த மாதம் மகிழ்ச்சி நிறைந்த ஒன்றாக இருக்கும்.
விருச்சிக ராசி நிதி
இந்தக் கால கட்டம், நீங்கள் நன்கு முனைந்து சேமிப்புகளை அதிகப்படுத்த உகந்ததாக உள்ளது. ஆகவே, நீண்ட கால சேமிப்புகள் பற்றி யோசித்து, திட்டமிட்டு சேமிக்கத் தொடங்குவது நல்லது. இப்பொழுது நீங்கள் செய்யும் வெவ்வேறு வகையான முதலீடுகள் உங்களுக்கு லாபமும், மன நிறைவும் தரும்.
விருச்சிக ராசி வேலை
வேலை சூழல் மந்தமாக இருக்கக் கூடும். உங்கள் பொறுப்புகள் மிகவும் அதிகரிக்கலாம். எதிலும் எதிர் நீச்சல் போட வேண்டிய சூழ்நிலை உருவாகும் வாய்ப்புள்ளது. எனவே கொடுக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்றுவதில் மிகுந்த கவனம் தேவை. வல்லுனர்களின் ஆலோசனையை ஏற்று நடப்பதும் உதவிகரமாக இருக்கும்.
விருச்சிக ராசி தொழில்
தொழில் வளர்ச்சியில் நீங்கள் சிறப்பு கவனம் செலுத்துவீர்கள். இது உங்களுக்கு நல்ல பலனைத் தரும். உங்கள் நேர்மறை எண்ணங்களும், உடனடியாகச் செயலில் இறங்கும் ஆற்றலும், உங்களுக்கு பெரும் நன்மையைச் செய்யும். புதிய ஒப்பந்தங்களைச் செய்து கொள்ளவும் இது தகுந்த காலம் ஆகும். இது உங்கள் வணிகத்தை மேம்படுத்தும்.மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்
உங்களது ஜாதக பிரத்யேக பலன்களை தெரிந்து கொள்ள ஜோதிட வல்லுனரை அணுகவும்
விருச்சிக ராசி தொழில் வல்லுநர்
விருச்சிக ராசி தொழில் வல்லுநர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம் இது. முக்கிய முடிவுகளை எடுக்கும் பொழுது உணர்ச்சி வசப்படாதீர்கள். தொழில் கூட்டாளிகளுடன் வாதங்களையும் தவிர்த்திடுங்கள். உங்கள் செயல்களில் மட்டுமே முனைப்பு காட்டுங்கள். கூடுதல் பொறுப்புகளும் உங்களிடம் வந்து சேரலாம். எனவே, தொழில் துறையில், உங்கள் உற்பத்தித் திறன் மேம்பட்டு இருக்குமாறு பார்த்துக் கொள்வது நல்லது.
விருச்சிக ராசி ஆரோக்கியம்
ஆரோக்கியம் நன்றாக இருக்கும். எனினும், நீங்கள் சத்தான உணவை உட்கொள்வதும், மருத்துவரின் ஆலோசனைகளைக் கண்டிப்பாகப் பின்பற்றுவதும் நன்மை தரும். எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் உங்கள் உடல்நிலை மேலும் சிறந்து விளங்கும்.
விருச்சிக ராசி மாணவர்கள்
மாணவர்களுக்கு இது ஒரு சாதாரண காலமாகும். படிப்பில் நீங்கள் வெற்றி பெற கடினமாக முயற்சி செய்ய வேண்டும். ஆசிரியர்களின் வழிகாட்டுதலை ஏற்று நடப்பது, வாழ்க்கையில் நீங்கள் முன்னேற உதவும். உங்கள் செயலாற்றலால், பெற்றோர்கள் பெருமிதம் அடைவார்கள். மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்
சுப தினங்கள் : 8,9,12,13,26,27,28
அசுப தினங்கள் : 1,2,3,6,7,14,15,29
விருச்சிக ராசி பரிகாரம்
முருகப் பெருமான் மற்றும் ஸ்ரீ காலபைரவர் வழிபாடு.
நவக்கிரகங்கள் செவ்வாய், ராகு, கேதுவிற்கு ஹோமம், பூஜை செய்து வழிபடுதல்.
நாய்க்கு உணவு அளித்தல், பாம்பு புற்றுக்குப் பால் வார்த்தல். ஏழை, எளியோருக்கு அன்னதானம் செய்தல்.

Leave a Reply