கன்னி ராசி பொதுப்பலன்கள்
கன்னி ராசி அன்பர்கள் இந்த மாதம், நல்லவை, அல்லாதவை என இரண்டும் கலந்த பலன்களை எதிர்பார்க்கலாம். பணவரவு நன்றாக இருக்கும். சகோதர வழியில் நன்மைகள் வந்து சேரும். வாகனங்கள் வாங்க வாய்ப்பு உண்டாகும். திருமண வாழ்க்கை சுமுகமாக இருக்கும். எனினும், சிறிது கஷ்டங்கள் இடையிடையே வந்து போகும் வாய்ப்புள்ளது. காதலர்கள் உல்லாசப் பயணம் செல்வார்கள். வேலையில் இடமாற்றங்கள் ஏற்படும். தொழில் சாதாரணமாக நடைபெறும். செய்தொழிலில் லாபங்கள் தடைபடக் கூடும். எனவே, புதிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. தேவையற்ற அலுவலகப் பிரச்சினைகளில் இருந்து ஒதுங்கி இருப்பதும் நன்மை தரும். சிலர் அலுவலகப் பணி காரணமாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். தந்தையின் உடல் நலனில் அக்கறை தேவை.
உங்களது ஜாதக பிரத்யேக பலன்களை தெரிந்து கொள்ள ஜோதிட வல்லுனரை அணுகவும்
கன்னி ராசி காதல் மற்றும் திருமண வாழ்க்கை
காதலும் சரி, காதலர்களும் சரி, இந்த நேரத்தில் சிறிது மந்தமாகவே காணப்படுவார்கள். காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். இருப்பினும், திருமண வாழ்க்கை பொதுவாக, சீராகவே செல்லும். கர்ப்பிணிப் பெண்கள் இப்பொழுது கவனமாக இருப்பது அவசியம். சிலருக்கு வெளியூர்ப் பயணங்கள் ஏற்படலாம்.
கன்னி ராசி நிதி
நிதிநிலை நன்றாக இருக்கும். தொழில் நல்ல வருமானங்கள் தரும். பெண்கள் மற்றும் வாகனங்கள் மூலமாகவும் லாபம் வந்து சேரும். பணத்தை சேமிப்பதற்கான உங்களது ஒவ்வொரு முயற்சியும், எளிதில் வெற்றி பெறும்.
கன்னி ராசி வேலை
நீங்கள் சிறப்பாகவும், நேர்த்தியாகவும் பணி புரிவீர்கள். இது உங்களுக்கு ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்தித் தரும். உங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள வேலைகளில் கவனம் செலுத்துவதும், சூழ்நிலைகளை நன்கு புரிந்து கொண்டு, அவற்றிக்கு ஏற்றவாறு பொறுமையாகச் செயல்படுவதும், மேலும் நலன் பயக்கும்.
கன்னி ராசி தொழில்
தொழில் முன்னேற்றம் சாதாரணமாக இருக்கும். உங்கள் அனுபவமின்மையாலும், கவனக் குறைவுகளாலும் சில தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. வெற்றியும் உங்களுக்குத் தாமதமாகக் கிடைக்கலாம். ஆனால் கடின முயற்சிக்கு பின், நீங்கள் கண்டிப்பாக ஆதாயம் பெறுவீர்கள்.
கன்னி ராசி தொழில் வல்லுநர்
கன்னி ராசி தொழில் வல்லுநர்கள் இந்த மாதம் தங்கள் நடவடிக்கைகளில் பின்னடைவைச் சந்திக்கக் கூடும். எனவே அவர்கள், புதிய தொழில் முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. அவை தொடர்பாக எடுக்கும் முடிவுகளிலும் அதிக கவனம் தேவை. தற்போதைய சூழலில், புதிய முதலீடுகள் செய்வதைத் தவிர்த்து விட்டு, ஏற்கனவே செய்தவற்றைக் கொண்டு முன்னேற்றம் காண முயல்வது பயனுள்ளதாக அமையும் மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்
.
உங்களது ஜாதக பிரத்யேக பலன்களை தெரிந்து கொள்ள ஜோதிட வல்லுனரை அணுகவும்
கன்னி ராசி ஆரோக்கியம்
உடல்நிலை சாதாரணமாக இருக்கும். நீங்கள் மன அழுத்தம் இல்லாத அமைதியான வாழ்க்கையை அனுபவிப்பீர்கள். உங்கள் வெற்றி மற்றும் சந்தோஷம் உங்கள் ஆரோக்கியத்தைத் மேலும் முன்னேற்றும். இந்தக் கால கட்டத்தில், சித்த மருத்துவத்துக்கு முக்கியத்துவம் அளிப்பது பயனளிக்கும்.
கன்னி ராசி மாணவர்கள்
படிப்பதற்கும், சிறந்த கல்வி அனுபவத்தைப் பெறுவதற்கும் இது சரியான நேரமாகும். வருவதை ஏற்றுக் கொள்ளும் உங்கள் பரந்த மனம், உங்கள் தனிப்பட்ட திறமைகளையும், நற்பெயரையும் மேம்படுத்த உதவும். உங்கள் செயல் திறன், பெற்றோர்களையும் மகிழ்ச்சி அடையச் செய்யும். மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்
.சுப தினங்கள் : 4,5,8,9,21,22,23
அசுப தினங்கள் : 1,2,3,10,11,29
கன்னி ராசி பரிகாரம்
பகவான் ஸ்ரீமந் நாராயணன் மற்றும் ஆஞ்சநேயர் வழிபாடு, பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்
.நவக்கிரகங்கள் புதன், குரு, சனி, ராகு, கேதுவிற்குப் பூஜை, ஹோமம் செய்து வழிபடுதல்.
காகம் மற்றும் பறவைகளுக்கு உணவு அளித்தல். ஏழை, எளியோருக்கு அன்னதானம் கொடுத்தல். ரத்த தானம் மற்றும் மருத்துவ உதவி செய்தல்
.

Leave a Reply