மேஷ ராசி பொதுபலன்கள் :
மேஷ ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்களுக்கு வெற்றியை பெற்றுத் தரும் மாதம் ஆகும். உங்கள் தன்னம்பிக்கை மற்றும் தைரியம் சிறந்து விளங்கும் மாதம் இந்த மாதம் என்று கூறினால் மிகை ஆகாது. மற்றவர்களுடனான உங்கள் உறவு முறை, குறிப்பாக, உங்கள் சகோதரருடனான உறவு முறை இந்த மாதம் மிகவும் சிறப்பாக இருக்கும். அவர்கள் உங்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுவார்கள். தாயிடம் உங்கள் உறவு முறை சிறப்பாக இருக்கும். தாயின் அன்பைப் பெற்று மகிழ்வீர்கள். பணியிடத்திலும் நீங்கள் சிறப்பான பலன்களைக் காண்பீர்கள். நீங்கள் சிறப்பாக பணியாற்றுவீர்கள். பதவி உயர்வு பெறுவீர்கள். என்ற போதிலும் நீங்கள் கவனமாக செயல்பட வேண்டிய மாதம் இது. உங்களுக்கு நீங்களே பிரச்சினைகளை வரவழைத்துக் கொள்ள வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் நீங்கள் கவனமாக செயல்பட வேண்டிய மாதம் இது. ஆன்மீகத்தில் நீங்கள் இந்த மாதம் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள். தொலை தூரம் பிரயாணம் மேற்கொண்டு ஆலய தரிசனம் பெற்று மகிழ்வீர்கள். நீங்கள் மேற்கொள்ளும் தொழிலில் சிறப்பு பெறுவீர்கள். அதன் மூலம் சிறந்த லாபம் காண்பீர்கள். அரசாங்கம் சம்பந்தமான காரியங்களில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.
இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!
மேஷ ராசி காதல் மற்றும் திருமணம் :
மேஷ ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்கள் காதல் உறவு அவ்வளவு சிறப்பானதாக இருக்காது. திருமணம் குறித்த முடிவுகளில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். திருமணமான தம்பதிகள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வார்கள். அதனால் உறவில் நல்லிணக்கமும் அன்னியோன்யமும் அதிகரிக்கும். மேஷ ராசியை சேர்ந்த கணவன்மார்களே உங்கள் மனைவிக்கு உங்கள் வீட்டில் இருக்கும் பெரியவர்களால் பிரச்சினை ஏற்படும். எனவே கவனமாக இருங்கள்.
மேஷ ராசி நிதி:
மேஷ ராசி அன்பர்களே இந்த மாதம் உங்கள் நிதி நிலை முன்னேறக் காண்பீர்கள். உங்கள் பொருளாதார தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். செய்தொழிலில் லாபம் காண்பீர்கள். குறிப்பாக வாசனை திரவியங்கள், அழகு சாதன பொருட்கள் மற்றும் வண்டி வாகன தொழிலில் இருப்பவர்கள் இந்த மாதம் அதிக லாபம் பெற்று மகிழ்வார்கள்.
மேஷ ராசி வேலை
பணி புரியும் மேஷ ராசி அன்பர்களே! இந்த மாதம் நீங்கள் உங்கள் வேலையில் சிறந்த முன்னேற்றம் காண்பீர்கள். நீங்கள் எதிர்பார்க்கும் வகையில் உங்கள் பணியும், பணியிடச் சூழலும் அமையும். உங்கள் நேர்மையும் அர்ப்பணிப்பும் பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறும். பணியிடத்தில் நீங்கள் உங்கள் திறமையைக் காட்டி மதிப்பினை கூட்டிக் கொள்ள சிறந்த வாய்ப்பு இந்த மாதம் உங்களை நாடி வரும்.
மேஷ ராசி தொழில் :
இந்த மாதம் நீங்கள் சிறு சிறு பிரச்சினைகளை சந்திப்பீர்கள். இருந்த போதும் வினை விதைத்தவன் வினை அறுப்பான், திணை விதைத்தவன் திணை அறுப்பான் என்பதற்கேற்ப இந்த மாதம் உங்களின் பூர்வ புண்ணிய பலனாக நீங்கள் தொழிலில் சிறந்த பலனையும் காண்பீர்கள். வயதானவர்களுக்கு நீங்கள் சனிக் கிழமைகளில் அன்னதானம் கொடுப்பதன் மூலம் உங்கள் நிதிநிலையை நீங்கள் மேம்படுத்திக் கொள்ளலாம்.
மேஷ ராசி தொழில் வல்லுனர்களுக்கு :
மேஷ ராசியைச் சேர்ந்த தொழில் வல்லுனர்கள் இந்த மாதம் முன்னேற்றம் காணும் மாதம் ஆகும். தொழிலில் உங்கள் திறமைகளை பளிச்சிடச் செய்வீர்கள். நீங்கள் அர்ப்பணிப்பு உணர்வோடும், கவனத்துடனும் செயலாற்றுவீர்கள். அதன் காரணமாக பாராட்டையும் பெறுவீர்கள்.மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.
இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!
மேஷ ராசி ஆரோக்கியம் :
மேஷ ராசி அன்பர்களே! நீங்கள் கடந்த கால உடல் நலக் கோளாறு பாதிப்பில் இருந்து விலகுவீர்கள். நரம்பு சம்பந்தமான பிரச்சினைகள் வராமல் உங்களை காத்துக் கொள்ளுங்கள். பழங்கள், பச்சை காய்கறிகள் மற்றும் உங்கள் உடல் நிலைக்கு ஏற்ற சத்தான உணவுகள் போன்றவை, உங்களுக்கு நல்ல உற்சாகத்தை அளிப்பத்தோடு உங்கள் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
மேஷ ராசி மாணவர்கள் :
மேஷ ராசி மாணவர்களே! இந்த மாதம் நீங்கள் படிப்பில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். உங்களுக்கு ஞாபக மறதி ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. தியானம் மேற்கொள்வதன் மூலம் நீங்கள் உங்கள் ஞாபக சக்தியை வளர்த்துக் கொள்ளலாம். நண்பர்களுடன் நல்லுறவை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அவர்களுடன் மோதல்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்பதால் உங்கள் மனநிலையை நீங்கள் கட்டுப்பாடுடன் வைத்துக் கொள்ளுங்கள்.மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.
சுப தினங்கள் : 10,11,19,20,24,25.
அசுப தினங்கள் : 12,13,16,17,18,24,27,28
மேஷ ராசி பரிகாரம்:
ஸ்ரீ முருகப்பெருமான் மற்றும் ஸ்ரீ ஆஞ்சநேயர் பூஜை மற்றும் வழிபாடு மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.
செவ்வாய் பகவானுக்கு ஹோமம் மற்றும் பூஜை செய்து வழிபடுதல்.
காகம் மற்றும் அனைத்து பறவைகளுக்கும் உணவு அளித்தல். மாற்று திறனாளிகள் மற்றும் முதியோருக்கு உதவி செய்தல்.

Leave a Reply