மகர ராசி பொதுப்பலன்கள்:
மகர ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்களுக்கு புகழும் , செல்வாக்கும் அதிகரிக்கும். என்றாலும் மனதில் ஒரு இனம் புரியாத உணர்வும் கவலையும் இருந்து கொண்டே இருக்கும். அதை தவிர்க்க முயலுங்கள். உங்களில் சிலருக்கு வெளியூர் பயணங்கள் ஏற்படலாம். உங்கள் வாக்குத் திறமையால் நீங்கள் சிறந்த ஆதாயங்களை அடைவீர்கள். தாய் வாழ் ஆதாயம் உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும். பூர்வீக நிலம் அல்ல்து சொத்து உங்களுக்கு தாயின் மூலம் வந்து சேரும். யோகமுண்டு. உறவினர்களிடையே நல்லிணக்க உறவும், அவர்களால் ஆதாயமும் உண்டாகும். உங்கள் உடன் பிறந்த இளைய சகோதரர்களால் உங்களுக்கு நஷ்டங்கள் ஏற்படலாம் கவனம் தேவை. தற்போதைய வெளியூர் பயணங்கள் ஆதாயத்தை தராது. வண்டி மற்றும் வாகனம் வாங்குவதற்கான யோகமும் உண்டு. சரியான நேரத்திற்கு உணவு உண்ணாததன் காரணமாக நீங்கள் சோர்வு அடையலாம். உணவு மற்றும் தூக்கம் ஆகியவற்றில் சரியான நேரத்தைப் பின்பற்றுங்கள்.உடல்நிலையில் சிறுபாதிப்புகள் வந்து நீங்கும்.
இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!
மகர ராசி காதல் மற்றும் திருமண வாழ்க்கை :
மகர ராசி காதலர்கள் இந்த மாதம் சந்தோஷமான காதல் வாழ்க்கையை அனுபவிப்பார்கள். திருமணமான தம்பதிகள் உறவில் இனிய சூழல் நிலவும். இருந்தாலும் அதனை தக்க வைத்துக் கொள்ள சில நேரங்களில் குடும்ப விஷயங்களில் நீங்கள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. திருமணத்திற்கு காத்திருப்பவர்களுக்கு வரன் தேடும் முயற்சிகள் வெற்றி அளிக்க இன்னும் சிறிது காலம் எடுக்கும். எனவே பொருத்தமான வரன் அமைவதற்குப் பொறுமை தேவைப்படலாம்.
மகர ராசி நிதி:
மகர ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்கள் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பண வரவும் பணப்புழக்கமும் இந்த மாதம் தாரளமாக இருக்கும். இந்த நேரத்தில், நீண்டகால சேமிப்பு பற்றி யோசித்து, திட்டமிட்டு சேமிக்கத் தொடங்குவது நல்லது. நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு கடனாக அளித்த பணத்தை கேட்டுப் பெறுவீர்கள்.
மகர ராசி வேலை:
வேலை செய்யும் மகர ராசி அன்பர்களைப் பொறுத்த வரை இந்த மாதம் திருப்திகரமான காலமாக இருக்கும். அலுவலகத்தில் உங்களுக்கு கூடுதல் பொறுப்புகள் தரப்படலாம். உங்களுக்கு அளித்த கடமைகளை நீங்கள் கடமை உணர்வுடன் சரியாக நிறைவேற்ற முயன்று வெற்றியும் காண்பீர்கள். இதனால் வரும் பாராட்டுகள் உங்களுக்கு மிகுந்த சந்தோஷத்தையும், திருப்தியையும் தரும்.
மகர ராசி தொழில் :
தொழில் செய்யும் மகர ராசி அன்பர்கள் இந்த மாதம் தொழிலில் பணவரவு அதிகரிக்கக் காண்பார்கள். நீங்கள் உங்கள் வியாபார நடவடிக்கைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிப்பீர்கள். இந்த மாதம் நீங்கள் தொலைதூர பயணம் மேற்கொள்வீர்கள். இது உங்களுக்குத் தொழில் ரீதியாக பணம் ஈட்ட உதவியாக இருக்கும். உங்கள் தொழிலை மேம்படுத்த சமூக ரீதியாக நல்ல ஆதரவு கிடைக்கும்.
மகர ராசி தொழில் வல்லுநர் :
மகர ராசியைச் சேர்ந்த தொழில் வல்லுனர்கள் இந்த மாதம் தங்கள் தொழில் சிறப்பாக நடக்கக் காண்பார்கள். இருப்பினும் கவனமின்மை மற்றும் அலட்சியத்தை தவிர்க்க வேண்டும். அதன் மூலம் வேலையில் ஏமாற்றம் நேராமல் தவிர்க்க அது உதவும். எனவே தொழில் ரீதியான உங்கள் அனைத்துப் பணிகளையும் கவனமாகவும் முறையாகவும் முடியுங்கள். மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்
இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!
மகர ராசி ஆரோக்கியம் :
மகர ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் ஆரோக்கியமான மாதம் என்று கூறலாம். என்றாலும் அதிக வேலைகள் காரணமாக உங்கள் உடல் நலத்திற்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்க முடியாமல் போக நேரிடலாம். எனவே உங்களை ஆரோக்கியத்தை தக்க வைத்து கொள்வதற்குக் தியானம் செய்வது உதவிகரமாக இருக்கும்.
மகர ராசி மாணவர்கள் :
மகர ராசி கல்வி பயிலும் மாணவ மாணவியர்களைப் பொறுத்தவரை இது ஒரு சாதாரண மாதமாக இருக்கும். இருந்த போதிலும் நீங்கள் புத்திசாலித்தனமாக செயல்படுவீர்கள். நீங்கள் நேர்மையாகவும் கடினமாகவும் முயற்சி செய்து படிப்பில் சிறந்து விளங்குவீர்கள். உங்கள் விடா முயற்சி காரணமாக நல்ல நிலை அடைவீர்கள். ஆனால், தேவையற்ற எண்ணங்கள் படிப்பின் போது தொந்தரவு கொடுக்கலாம். இதனால் உங்கள் கவனம் திசை திரும்ப நேரலாம். கவனம் தேவை.மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்
சுப தினங்கள் : 4,5,12,13,16,17,18
அசுப தினங்கள் : 6,7,10,11,19,20
மகர ராசி பரிகாரம்:
ஸ்ரீ ஆஞ்சநேயர் மற்றும் ஸ்ரீ விநாயகபெருமான் வழிபாடு, பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.
ஸ்ரீ சனிபகவான், குரு, ராகு, கேதுவிற்கு ஹோமம் மற்றும் பூஜை செய்து வழிபடுதல்.
காகத்திற்க்கு அன்னம் வைத்தல். அனாதை, ஏழை, எளியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அன்னதானம் மற்றும் உதவி செய்தல்.

Leave a Reply