கடக ராசி பொதுப்பலன்கள் :
கடக ராசி அன்பர்களே! இந்த மாதம் நீங்கள் சாதாரண பலன்களையே அனுபவிப்பீர்கள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் மற்றும் செயல்கள் உங்களுக்கு சாதாரண பலன்களையே அளிக்கும். எனவே நீங்கள் கவனமாக செயல்பட வேண்டிய மாதம் இது. இந்த மாதம் உங்களுக்கு பணிச் சுமை அதிகமாக இருக்கும். அதிக பணிகள் காரணமாக நீங்கள் மனச் சோர்வினை அடைவீர்கள். பல பணிகள் ஒரே நேரத்தில் வந்து குவியும். நீங்கள் கவனமாகவும் புத்த்திசாலித்தனத்துடனும் செயல்பட்டால் நிச்சயம் வெற்றி உங்களுக்கே. அந்த வகையில் நீங்கள் மன ஆறுதலையும் மகிழ்ச்சியையும் பெறலாம். இந்த மாதம் உங்கள் பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கங்கள் காணப்படும். பயணங்கள் வகையில் செலவுகள் நேரலாம். என்ற போதிலும் நீங்கள் அறிவாற்றலுடன் செயல்பட்டு இந்தச் சூழ்நிலையை சரியான முறையில் கையாள்வீர்கள்.
உங்களது ஜாதக பிரத்யேக பலன்களை தெரிந்து கொள்ள ஜோதிட வல்லுனரை அணுகவும்
கடக ராசி காதல் மற்றும் திருமண வாழ்க்கை :
நீங்கள் காதல் புரிபவராக இருந்தாலும் சரி, திருமணமானவராக இருந்தாலும் சரி, இந்த மாதத்தில் உங்கள் துணையுடன் மகிழ்ச்சியான நேரத்தை அனுபவிப்பீர்கள். திருமணமான தம்பதிகள் குடும்ப உறுப்பினர்களுடன் நல்லுறவு காண்பார்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் உறவு வலுவாக இருக்கும். நீங்கள் தகவல் தொடர்பில் சிறப்பாக செயல்பாடு மகிழ்ச்சி காண்பீர்கள்.
கடக ராசி நிதி :
இந்த மாதம் உங்க பொருளாதார நிலை மிகவும் சிறப்பாக இருக்கும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் நீங்கள் சாதகமான பலன்களைக் காண்பீர்கள். இந்த மாதம் உங்கள் வருமானம் உயரும். அதன் காரணமாக உங்கள் சேமிப்பும் உயரும். இந்த மாதம் நிதி நிலை உங்கள் சேமிப்புகளை அதிகப்படுத்த ஏதுவாக இருக்கிறது. இப்பொழுது நீங்கள் செய்யும் வெவ்வேறு வகையான முதலீடுகள் உங்களை திருப்திப்படுத்தும். உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களிடம் நீங்கள் கொடுத்த பணம் இப்போது திரும்ப உங்கள் கைக்கு வந்து சேரும்.
கடக ராசி வேலை :
கடக ராசி அன்பர்களே! இந்தமாதத்தில், நீங்கள் வேலையில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்பது போல இந்த மாதம் உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை நீங்கள் முறையாகப் பயன்படுத்தி கொள்ள வேண்டும். உங்கள் சக பணியாளர்கள் மற்றும் கீழ் பணிபுரிபவர்களிடம் நட்புடன் பழக வேண்டும். உங்கள் அனைத்து பணிகளையும் நிலுவையில் வைக்காமல், விரைவாக முடிப்பது உங்களுக்கு நன்மையை பெற்றுத் தரும்.
கடக ராசி தொழில்:
கடக ராசி அன்பர்களே! தொழிலைப் பொறுத்தவரை இந்த மாதம் நீங்கள் எதிர்ப்பார்த்த முன்னேற்றம் காண்பது சிறிது கடினம் தான். ரியல் எஸ்டேட் தொழிலில் உள்ளவர்கள் தங்கள் தொழில் மூலம் அதிகமான வருமானத்தைப் பெறலாம். அதே சமயத்தில் தொழில் ரீதியான போட்டி காரணமாக நீங்கள் சில கஷ்டங்களையும் சந்திக்க நேரலாம். தொழிலில் உங்கள் திறமையால் பிறர் மத்தியில் உங்களுக்கு முக்கியத்துவத்தை பெற்றுத் தரும்.மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்
உங்களது ஜாதக பிரத்யேக பலன்களை தெரிந்து கொள்ள ஜோதிட வல்லுனரை அணுகவும்
கடக ராசி தொழில் வல்லுநர் :
தொழில் வல்லுனர்கள் இந்த மாதம் எதிலும் கவனமுடன் செயல்பட வேண்டிய காலக் கட்டம் ஆகும். நீங்கள் எதிர் பார்த்த வகையில் பதவி உயர்வு அமைவதோ அல்லது அதற்கான வாய்ப்புகள் கிடைப்பதில் தாமதங்கள் ஏற்படும். பணியிடத்தில் உங்கள் தனிப்பட்ட திறமைகளை வெளிகாட்ட கடின முயற்சி மேற்கொள்வீர்கள். நீங்கள் எதிலும் நிதானமாக செயல்பட வேண்டிய மாதம் இது.
கடக ராசி ஆரோக்கியம் :
கடக ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் சுமாராக இருக்கும். நீங்கள் சுறுசுறுப்பையும் ஆற்றலையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். மன அமைதி காரணமாக வாழ்க்கை சீராகவும் அமைதியாகவும் செல்லும். எனினும், உங்கள் உடல்நலத்தில் அலட்சியம் காட்டாதீர்கள். நல்ல ஒய்வும் போதுமான தூக்கமும் உடலுக்கு நலம் விளைவிக்கும்.
கடக ராசி மாணவர்கள் :
இந்த மாதம் கடக ராசி மாணவர்கள் சிறிது மந்தமாக காணப்படுவார்கள். சிறப்பான பலன்களை இந்த மாதம் எதிர்பார்க்க இயலாது. கல்வியில் சிறந்து விளங்கவும், வெற்றி வாகை சூடவும் உங்கள் ஆசிரியர்களிடமிருந்து தன்னம்பிக்கையை கற்றுக் கொள்ளுங்கள். கலாச்சார விழாக்களில் பங்கு பெறுவதன் மூலம் உங்கள் அறிவு மேம்படுவதற்கான வாய்ப்பினை பெறுவீர்கள்.மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்
சுப நாட்கள் : 4,5,16,17,18,26,27.
அசுப நாட்கள் : 6,7,19,20,24,25,28.
கடக ராசி பரிகாரம்:
திருப்பதி ஏழுமலையான் மற்றும் ஸ்ரீ ஆஞ்சநேயர் வழிபாடு, பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.
சந்திரன் மற்றும் குருபகவானுக்கு ஹோமம் மற்றும் பூஜை செய்து வழிபடுதல்.
வசதியில்லாதோருக்கு திருமணத்திற்க்கு உதவி செய்தல் மற்றும் அன்னதானம் அளித்தல்.

Leave a Reply