Mahalaya Paksha is the Ultimate Powertime to invoke Ancestral Blessings for Abundance, Material Comforts, Progress & Success Join Now
AstroVed Menu
AstroVed
search
search

கடகம் பிப்ரவரி மாத ராசி பலன் 2023 | February Matha Kadagam Rasi Palan 2023

January 20, 2023 | Total Views : 723
Zoom In Zoom Out Print

கடகம்  பிப்ரவரி  மாத பொதுப்பலன்கள் 2023

உத்தியோகத்தில் இருக்கும் கடக ராசி அன்பர்கள் இந்த மாதம் அதிக பொறுப்புகளை சுமக்க வேண்டியிருக்கும். இருப்பினும், அவர்கள் சக ஊழியர்களுடன் ஒரு நல்ல உறவைத் தொடரலாம். ஆனால் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிற உறவினர்களுடனான உங்கள் தொடர்புகளில் நீங்கள் கசப்பை அனுபவிக்க வேண்டியிருக்கும். உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். இது அவர்களுடனான உங்கள் பிணைப்பில் விரிசல்களைத் தவிர்க்க உதவும்.

காதல் / குடும்பம்:

திருமணமானவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையுடன் போதுமான நேரத்தை ஒதுக்காமல் இருக்கலாம். இது திருமண பந்தத்தில் அதிருப்தியை ஏற்படுத்தலாம் மற்றும் இருவருக்கும் மகிழ்ச்சியின்மையை தரலாம்.  நீங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல உறவைப் பேண முடியாமல் போகலாம். அதே நேரத்தில் உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகளுடன் நீங்கள் போராட வேண்டியிருக்கும். எனவே, உங்கள் பேச்சில் மிகவும் கவனமாக இருக்கவும்.

குடும்ப உறுப்பினர்களிடம் நல்லுறவு நீடிக்க பால திரிபுர சுந்தரி பூஜை

நிதி நிலை: 

இந்த மாதம் அதிர்ஷ்டம் உங்கள் கதவைத் தட்டலாம். குதிரைப் பந்தயம் அல்லது லாட்டரி சீட்டுகள் மூலம் பணம் சம்பாதிக்க உங்களுக்கு வாய்ப்புகள் உள்ளன. உங்கள் பொருளாதார நிலையில் உயர்வை காணக்கூடும். மேலும் இந்த காலம் உங்கள் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு ஏற்றதாக இருக்கும். வணிகர்கள் தங்கள் வருமானத்தை அதிகரிக்கவும், சிறந்த பொருளாதார சூழ்நிலையை அனுபவிக்கவும் புதுமையான நுட்பங்களை பின்பற்றலாம்

தன வருவாய் அதிகரிக்க சுக்கிரன் பூஜை

வேலை:

பணியிடத்தில் நீங்கள் மற்றவர்களை விமர்சிக்க அல்லது கருத்து தெரிவிக்க வாய்ப்புகள் உள்ளன. இதனால் நீங்கள் விரும்பத் தகாத சூழ்நிலைகளை எதிர்கொள்ள நேரலாம். எனவே, மற்றவர்களிடம் தேவையில்லாமல் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. அரசு ஊழியர்களுக்கு அதிக பொறுப்புகள் இருக்கலாம். ஆனால் அவர்கள் தங்கள் பணிகளை சிறப்பாக செய்து மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவார்கள். 

தொழில்:

தொழிலதிபர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் தங்கள் களங்களில் அதிக போட்டியை சந்திக்க நேரிடலாம். ஆனால் புதிய உத்திகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் உங்கள் பரிவர்த்தனைகளில் வெற்றி பெறலாம். உங்கள் போட்டியாளர்களால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளவும், அவற்றைச் சமாளிக்கவும் உங்களுக்கு உதவ உங்கள் நிறுவனத்தில் நிபுணர்களையும் நீங்கள் நியமிக்கலாம். இருப்பினும், உங்கள் கீழ் பணிபுரிபவர்களிடம் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். அதற்கு பதிலாக, அவர்களுடனான உங்கள் தொடர்புகளில் விவேக அணுகுமுறை மேற்கொள்ளவும்.

தொழில் வல்லுனர்கள்:

கடக ராசிக்காரர்களுக்கு வேலை சம்பந்தமான பயணங்களால் நன்மை உண்டாகும். பணியிடத்திலும் நல்ல பெயரைப் பெறலாம். ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்பவர்கள் சில வெளிநாட்டு தொழில் வாய்ப்புகள் மூலம் முன்னேற்றம் அடையலாம். வணிக மேலாண்மை துறையில் பணிபுரிபவர்களைப் பார்த்து அதிர்ஷ்டம் புன்னகைக்கக்கூடும். மேலும் அவர்கள் சாதகமான முடிவுகளை எதிர்பார்க்கலாம்.

உத்தியோகம் மற்றும் தொழிலில் ஏற்றம் உண்டாக சனி பூஜை

ஆரோக்கியம்:

இந்த மாதம் உங்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். இது சம்பந்தமான பிரச்சினைகளைத் தடுக்க உதவும் சத்தான உணவை உண்பதற்கு .முயற்சி செய்யுங்கள். உடல் பயிற்சிகள் மற்றும் தியானம் உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும். குடும்பத்தில் உள்ள வயதானவர்களின் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.

நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு முருகன் பூஜை

மாணவர்கள்:

பள்ளி மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்கி வெற்றி பெறலாம். உயர்கல்வி பயிலும் மாணவர்கள் கவனச்சிதறல்கள் போன்ற தடைகளைத் தாண்டி முன்னேற்றம் காணலாம். போட்டித் தேர்வுகளுக்கு அமர்பவர்கள் சற்றே சவாலான சூழ்நிலையை எதிர்கொண்டாலும் வெற்றி பெறலாம். ஆராய்ச்சி மாணவர்கள் அதிக முயற்சி எடுத்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாக முடிக்க முடியும்.

கல்வியில் ஏற்றம் உண்டாக துர்கா பூஜை

சுப நாட்கள்:

11, 12, 13, 16, 17, 18, 24, 25, 26.

அசுப நாட்கள்:

19, 20, 21, 22, 23, 27, 28.

banner

Leave a Reply

Submit Comment