AstroVed Menu
AstroVed
search
search

Sri Durga Suktam Lyrics in Tamil With Meaning - துர்கா ஸூக்தம்

dateJuly 19, 2021

ஸுக்தம் பாராயணம் செய்வதன் பலன்:

கர்ம வினைகளால் மனிதப் பிறப்பில் நாம் சந்திக்கும் தீராத துன்பங்கள் யாவற்றையும் நீக்கி பரிபூரண வாழ்வைப் பெற நமக்கு உதவும் வகையில் ரிஷிகள் நமக்கு பல ஸுக்தங்களை அருளியுள்ளனர். இவற்றை ஓதுவதன் மூலம் நாம் சம்சாரம் என்னும் சாகரத்தைக் கடக்க இயலும்.

ஸுக்தங்கள் பல உள்ளன. மந்திர ஆற்றல் பெற புருஷ ஸுக்தம் அறிவை வளர்க்கும் சரஸ்வதி ஸுக்தம், நாராயணனை துதிக்க நாராயண ஸுக்தம் வியாதிகளைப் போக்கும் அஸ்வினி ஸுக்தம் ஆயுளை நீட்டிக்கும் ஆயுஷ் ஸுக்தம், என வாழ்வில் நாம் மேம்பட பல வகை ஸுக்தங்களை நமது முன்னோர்கள் அருளிச் சென்றுள்ளார்கள்.

துர்கா ஸுக்தம் பாராயண பலன்

பராசக்தியின் பல வடிவங்களுள் துர்கா தேவி வடிவம் சிறப்பு வாய்ந்தது. உக்ர தேவியாக விளங்கும் அன்னை துர்கா தேவியின் சிறப்பு பற்றி வேத நூல்களில் குறிப்பாக ரிக் வேத நூல்களில் நாம் காணலாம். துர்கா சுக்தம் பாராயணம் செய்வதன் நமது விருப்பங்கள் யாவும் நிறைவேறும். எடுத்த காரியங்களில் வெற்றி கிட்டும்.

துர்கா ஸுக்தம்

(தைத்திரீயாரண்யகம், 10-வது ப்ரபாடகம், 2-வது அனுவாகம்)

ஜாதவேதஸே ஸுநவாம ஸோம-மராதீயதோ நிதஹாதி வேத: ஸ நு:

பர்ஷததி துர்காணி விஸ்வா நாவேவ ஸிந்தும் துரிதாத்யக்னி:

தா-மக்னி-வர்ணாம் தபாஸாஜ்வலந்தீம் வைரோசனீம் கர்ம-பலேஷு

ஜுஷ்டாம் துர்காம் தேவீ ஸரண-மஹம் ப்ரபத்யே ஸுதரஸி

தரஸே நம:

 

அக்னே த்வம் பாரயா நவ்யோஅஸ்மான் ஸ்வஸ்திபி-ரதி

துர்காணி விச்வா பூஸ்ச ப்ருத்வீ பஹுலா ந உர்வீ பவா தோகாய

தனயாய ஸம்யோ

 

விஸ்வானி நோ துர்கஹா ஜாதவேதஸ்-ஸிந்தும் ந நாவா துரிதா-

திபர்ஷி அக்னே அத்ரிவன் மனஸா க்ருணானோ ஸ்மாகம்

போத்யவிதா தனூனாம்

 

ப்ருதனாஜித ஸஹமான-முக்ர-மக்னி ஹுவேம பரமாத்-ஸதஸ்தாத்

ஸ ந: பர்ஷததி துர்காணி விஸ்வா-க்ஷமாத் தேவோ அதி துரிதா

த்யக்னி:

 

ப்ரத்னோஷிகமீட்யோ அத்வரேஷு ஸநாச்ச ஹோதா நவ்யஸ்ச ஸத்ஸி

ஸ்வாஞ்சாக்னே தனுவம் பிப்ரயஸ்வாஸ்மப்யாம் ச ஸெளபக-மாயஜஸ்வ

கோபிர்ஜுஷ்ட-மயுஜோ நிஷிக்தம் தவேந்த்ர விஷ்ணோ-ரனுஸஞ்சரேம

நாகஸ்ய ப்ருஷ்ட-மபிஸம்வஸானோ வைஷ்ணவீம் லோக இஹ மாதயந்தாம்

 

காத்யாயனாய வித்மஹே கன்யகுமாரி தீமஹி

தந்நோ துர்கி: ப்ரசோதயாத்

 

ஓம் ஸாந்தி: ஸாந்தி: ஸாந்தி:


banner

Leave a Reply