பாக்ய ஸுக்தம், Bhagya Suktam Lyrics In Tamil

ஸுக்தம் பாராயணம் செய்வதன் பலன்:
கர்ம வினைகளால் மனிதப் பிறப்பில் நாம் சந்திக்கும் தீராத துன்பங்கள் யாவற்றையும் நீக்கி பரிபூரண வாழ்வைப் பெற நமக்கு உதவும் வகையில் ரிஷிகள் நமக்கு பல ஸுக்தங்களை அருளியுள்ளனர். இவற்றை ஓதுவதன் மூலம் நாம் சம்சாரம் என்னும் சாகரத்தைக் கடக்க இயலும்.
ஸுக்தங்கள் பல உள்ளன. மந்திர ஆற்றல் பெற புருஷ ஸுக்தம் அறிவை வளர்க்கும் சரஸ்வதி ஸுக்தம், நாராயணனை துதிக்க நாராயண ஸுக்தம் வியாதிகளைப் போக்கும் அஸ்வினி ஸுக்தம் ஆயுளை நீட்டிக்கும் ஆயுஷ் ஸுக்தம், என வாழ்வில் நாம் மேம்பட பல வகை ஸுக்தங்களை நமது முன்னோர்கள் அருளிச் சென்றுள்ளார்கள்.
பாக்ய ஸுக்தம் பாராயண பலன்
அந்த வகையில் நாம் வாழ்வில் அதிர்ஷ்டமும் வெற்றியும் பெற உதவுவது பாக்ய ஸுக்தம். நம் உழைப்பு என்பது நமக்கு கை கொடுக்கும் என்றாலும் வாழ்வில் பல சமயங்களில் நமக்கு அதிர்ஷ்டமும் தேவை. பாக்ய ஸுக்தம் ஓதி பாராயணம் செய்வதன் மூலம் வாழ்வில் அதிர்ஷ்டமும், அதன் மூலம் வெற்றியும் கிட்டும்.
பாக்ய ஸுக்தம்
ஓம் ப்ராதரக்நிம் ப்ராதரிந்த்ர ஹவாமஹே ப்ரதர்மித்ரா வருணா
ப்ராதரஸ்விநா ப்ராதர்பகம் பூஷணம் ப்ரஹ்மணஸ்பதிம்
ப்ராதஸ்-ஸோம-முத-ருத்ர ஹுவேம
ப்ராதர்ஜிதம் பகமுக்ர ஹுவேம வயம் புத்ர-மதி தேர்யோ விதர்தா
ஆத்த்ரஸ்சித்யம் மன்யமானஸ்துரஸ்-சித்ராஜா சித்யம்பகம்
பக்ஷீத்யாஹ
பக ப்ரணேதர்-பக ஸத்யராதோ பகே மாம் தியத வததன்ன:
பக ப்ரணோ ஜனய கோபி-ரஸ்வைர்-பக ப்ரந்ருபிர்-ந்ருவந்தஸ்-ஸ்யாம
பக ஏவ பகவா அஸ்து தேவாஸ்-தேன வயம் பகவந்தஸ்-ஸ்யாம
தம் த்வா பக ஸர்வ இஜ்ஜோஹவீமி ஸனோ பக புர ஏதா பவேஹ
ஸமத்வரா யோஷஸோநமந்த ததிக்ராவேவ ஸுசயே பதாய
அர்வாசீனம் வஸுவிதம் பகன்னோ ரதமிவாஸ்வா வாஜின ஆவஹந்து
அஸ்வாவதீர்-கோமதீர்-ந உஷாஸோ வீரவதீஸ்ஸத-முச்சந்து பத்ரா:
க்ருதம் துஹானா விஸ்வத: ப்ரபீனா யூயம் பாத ஸ்வஸ்திபிஸ்-ஸதா ந:
யோ மாக்நே பகிந ஸந்த-மதாபாகம் சிகீருஷதி
அபாகமக்நே தம் குரு மாமக்நே பாகிநம் குரு
ஓம் ஸாந்தி: ஸாந்தி: ஸாந்தி:
