Arupadai Veedu Muruga Program 2024: Invoke Muruga at His 6 Powerful Abodes During the 6th Moon Powertime Days JOIN NOW

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை சிறப்புகள்

October 23, 2020 | Total Views : 1,265
Zoom In Zoom Out Print

மஹிசாசூரனை வதம் செய்ய வேண்டி அன்னை ஆதிபராசக்தி துர்கா தேவியாக அவதாரமெடுத்துஅவனுடன் போர் புரிந்தாள். தொடர்ந்து ஒன்பது நாட்கள் நடைபெற்ற போரில் ஒன்பதாவது நாள் மஹிசாசூரனை வதம் செய்தாள் அன்னை துர்கா. இந்த ஒன்பது நாட்கள் தான் நவராத்திரி விழாவாக விரதமிருந்து  கொண்டாடப்படுகிறது. இந்த நவராத்திரியில் முப்பெரும் தேவியருக்கு முறையே மூன்று மூன்று நாட்களாக பிரித்து வழிபாடு செய்யப்படுகிறது. அவ்வகையில் முதல் மூன்று நாட்கள் வீரத்தின் தெய்வமான துர்கா தேவிக்கும், அடுத்த மூன்று நாட்கள் செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவிக்கும், கடைசி மூன்று நாட்கள் ஞானசொரூபினியான அன்னை சரஸ்வதிக்கும் வழிபாடு நடத்தப்படுகிறது.

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை சிறப்புகள்

ஆயுத பூஜை

ஆயுதத்தின் உண்மையான பயனை உணர்த்த வேண்டியே  ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. அன்னை ஆதிபராசக்தி அனைத்திலும் நீக்கமற நிறைந்திருக்கிறாள் என்பதை உணர்த்துவதே இதன் ஐதீகம். இதுவரை தொழில் சிறப்பாக நடந்ததற்கு கடவுளுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும், இனியும் சிறப்பாக நடைபெற அருள்புரிய வேண்டியும் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. ஆயுத பூஜையன்று வேளாண்மைக்கு உதவும் கருவிகள், நமது பணி, தொழில், வியாபாரத்துக்கு உதவும் கருவிகள், இயந்திரங்கள், கம்ப்யூட்டர், கணக்குப் புத்தகங்கள் போன்றவற்றுக்கு சந்தனம், குங்குமம் வைத்து, மாலையிட்டு, அவல், பொரி, இனிப்புகள் படையலிட்டு அலுவலகங்களிலும் தொழிற்கூடங்களிலும் ஆயுத பூஜை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. தொழிலையும், தொழிலாளர்களையும் போற்றும் விதமாக இந்தியா முழுவதும் இந்த ஆயுத பூஜை கொண்டாடப்பட்டு வருகிறது. செய்யும் தொழிலே தெய்வம். அந்தத் தொழிலுக்கு உதவிகரமாக இருக்கும் ஆயுதங்களை தெய்வமாகப் போற்றும் விதமாக, அவற்றையும் கடவுளாக பாவித்து வணங்குவதே ஆயுத பூஜை.

சரஸ்வதி பூஜை

சரஸ்வதி பூஜை ஞானத்தையும், அறிவையும் வழங்கும் தெய்வமான அன்னை சரஸ்வதியின் அருளாசிகளை வேண்டி செய்யப்படுகிறது. கல்வியில் வளர்ச்சி, கலைகளில் தேர்ச்சி, ஞானம், நினைவாற்றல் வேண்டி கலைமகளை வணங்கிடும் நன்னாளே சரஸ்வதி பூஜை எனப்படுகிறது.

எப்படி செய்வது?

வீட்டில் மற்றும் அலுவலகங்களில் சரஸ்வதி தேவியை வணங்கி பூஜைகள் செய்வர், பெரும்பாலும் அலுவலகங்களில் யாகம் செய்து பெரும் பூஜையாக மேற்கொள்கின்றனர். வீட்டிலும் அது போல் முறைப்படியான பூஜைகள் மேற்கொள்ளலாம். அது முடியாதவர்கள் சரஸ்வதி பூஜையன்று வழிபாட்டிற்குரிய இடத்தில் சரஸ்வதி படம் (அ) அவர் முக உருவம் வைத்து அலங்கரித்து வழிபாடு செய்யலாம்.

சரஸ்வதிக்கு அருகம்புல் மற்றும் மலர்மாலை சார்த்தி மஞ்சள் குங்குமம் இட்டு அலங்கரிக்க வேண்டும் நவராத்திரி முழுவதும் விரதமிருந்து அன்னையை வணங்காதவர்கள் கூட சரஸ்வதி பூஜையன்று சரஸ்வதியை வணங்கினால் போதுமானது. கலசம் வைத்து கலைவாணியை எழச்செய்தும் பூஜைகளை மேற்கொள்ளலாம்.

சரஸ்வதி படத்திற்கு அலங்காரம் செய்த பின் ஐந்து முக குத்து விளக்கினை ஏற்றி மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து தலைவாழை இலையில் பழங்கள், அவல், பொறிகடலை போன்றவை வைத்து கணபதியை முதலில் வணங்கிவிட்டு பூஜையை தொடங்க வேண்டும். சரஸ்வதி ஸ்தோத்திரம் மற்றும் ஆராதனை பாடல்களை பெரியவர்களும், குழந்தைகளும் ஒரு சேர சொல்லி பின் அன்னை சரஸ்வதிக்குப் பிடித்த    நைவைத்தியமான பால் பாயாசம், வெள்ளைகடலை சுண்டல், பொங்கல் போன்றவை வைத்து கற்பூர தீபாரதனை செய்திட வேண்டும்.

சரஸ்வதி தேவியின் படத்தின் முன் நமது வீட்டின் கணக்கு புத்தகங்கள், எழுதுகோல், குழந்தைகளின் பாடபுத்தகங்கள் அவசியம் வைத்து வணங்குதல் வேண்டும். அன்றைய தினம் தங்களால் இயன்ற கல்வி சார்ந்த பொருட்கள், பேனா, நோட்டு புத்தகம், புத்தகங்கள், படிப்பதற்கான பண உதவி போன்றவைகளை ஏழைக் குழந்தைகளுக்கு தானாமாக வழங்கலாம்.

சரஸ்வதி பூஜை முடிந்த பின் மறுநாள் காலை மறுபடியும் சரஸ்வதி தேவியின் முன் புதிய இலையில் வெற்றிலை பாக்கு, பழம், பொரி கடலை வைத்து பூஜை செய்த பின் தான் படத்தை எடுக்க வேண்டும். முகம் மற்றும் கலசம் வைத்திருந்தால் அந்த நீரை நீர் நிலைகளில் கரைத்து விடலாம்.

சரஸ்வதி தேவியை வணங்க ஏற்ற பூக்கள் 

சரஸ்வதி தேவி வெண்மை நிறத்துடன் இருப்பவர், அதனால் வெண்தாமரை, மல்லி, முல்லை, இருவாட்சி, சம்பங்கி போன்ற பூக்கள் அவளுக்கு ஏற்ற பூக்களாய் உள்ளன. சரஸ்வதி தேவி ஞானத்தின் பிறப்பிடம் அவளை வணங்கி ஞானமும் தெளிவும் பெறுவோம். மேலும் பலன்கள் மற்றும் பரிகாரம் பற்றி தெரிந்து கொள்ள

banner

Leave a Reply

Submit Comment