விருச்சிகம் ஆகஸ்ட் மாத ராசி பலன் 2022 | August Matha Viruchigam Rasi Palan 2022

Celebrate Krishna Jayanthi - Overcome Poverty, Fulfill Desires, Enjoy Good Relationships Join Now!
cart

விருச்சிகம் ஆகஸ்ட் மாத ராசி பலன் 2022 | August Matha Viruchigam Rasi Palan 2022

June 28, 2022 | Total Views : 121
Zoom In Zoom Out Print

விருச்சிகம் ஆகஸ்ட் 2022 பொதுப்பலன்கள்:

விருச்சிக ராசி அன்பர்களே!  தம்பதிகளுக்கு இடையே ஒற்றுமையும் அந்நியோன்யமும் கூடும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே சுமுகமான உறவு இருக்கும். என்றாலும்  தங்களின் நெருங்கிய உறவினர்களிடம் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். எனவே தேவையற்ற பேச்சுகள் மற்றும் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். உங்கள்  வாக்கில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டியிருக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு இது சிறந்த மாதமாக இருக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உங்கள் கடந்த கால முதலீடுகளின் மூலம் நீங்கள் லாபம் பெறுவீர்கள். உங்கள் பணப்புழக்கம் கணிசமாக அதிகரிக்கும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மாணவர்கள் கவனம் சிதறாமல் கல்வி பயில வேண்டும். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான ராசி பலன் (Horoscope in Tamil) குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள். 

காதல் / குடும்பம்:

விருச்சிக ராசி இளம் வயதினர் மனதில் காதல் அரும்பு மலரும். காதலர்களுக்கு இடையே அன்னியோன்யம் கூடும். குடும்பத்தில் ஒற்றுமையும் குதூகலமும் காணப்படும். குழந்தைகளுடனான உறவு சுமுகமாக இருக்கும். அவர்களால் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள்.   திருமணமான தம்பதிகளுக்குள் நல்ல புரிந்துணர்வும் நல்லிணக்க உறவும் மேம்படும். இதுவரை இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கப் பெறும். திருமணமான தம்பதிகளின் தாம்பத்திய வாழ்வு சிறக்கும். 

கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்க சுக்கிரன் பூஜை

நிதி நிலை:

இந்த மாதம்  நிதிநிலையைப் பொறுத்தவரை அனுகூலமான மாதமாக இருக்கும். உங்கள் வருமானம் கூடும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். உங்கள் அன்றாடத் தேவைகளை சமாளிக்க போதிய அளவில் நிதிநிலை இருக்கும்.  நீங்கள் இந்த  மாதம் பணத்தை சேமிக்கவும் செய்வீர்கள். வீட்டு மராமரத்துப்பணி குறித்த செலவுகளை மேற்கொள்வீர்கள். உங்களுடைய நண்பர்களிடம் வாங்கிய பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். 

கடன் பிரச்சனை தீர ருண விமோச்சன பூஜை

வேலை:

உத்தியோகத்தைப் பொறுத்தவரை நீங்கள் சற்று அனுசரித்து நடந்து கொள்ள வேண்டியிருக்கும். நீங்கள் தனியார் துறையில் உத்தியோகத்தில் இருப்பவர் என்றால் கடின உழைப்பை மேற்கொள்வீர்கள். என்றாலும் உங்கள் கடின உழைப்பிற்கான அங்கீகாரம் பெறுவீர்கள்.  எழுத்துத் துறை மற்றும் உயர்கல்வித்துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் காணப்படும். மருத்துவ துறையை சேர்ந்தவர்கள் இந்த மாதம் லாபமும் ஆதாயமும் காண்பார்கள். 

தொழில்:

சுய தொழில் செய்யும் விருச்சிக ராசி அன்பர்கள் இந்த மாதம் சுறுசுறுப்பாக பணியாற்றுவார்கள். வாடிக்கையாளர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாவார்கள். இலக்குகளை அடைவதில் வெற்றி காண்பார்கள். கூட்டுத்தொழில் குறித்த முக்கிய முடிவுகளை எடுக்கும் முன்பு ஒன்றிற்கு இரண்டு முறை யோசித்து அதன் நன்மை தீமைகளை ஆராய்ந்து முடிவு எடுங்கள். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் இந்த மாதம் கணிசமான லாபம்  காண்பார்கள்.  

தொழில் வல்லுனர்கள்:

தொழில் வல்லுனர்கள் இந்த மாதம் சிறப்பாக செயல்பட்டு தங்கள் இலக்கை அடைவார்கள். அதன் மூலம் வருமானம் பெருகும். குறிப்பாக உயர்கல்வித்துறை, ஊடகத்துறை மற்றும் ஆராய்ச்சித் துறையில் வேலை செய்யும் தொழில் வல்லுனர்கள் சிறந்த வகையில் வருமானம் ஈட்டுவார்கள். அரசுத் துறை சார்ந்த தொழில் வல்லுனர்கள் வாடிக்கையாளர்களின்  நன்மதிப்பையும்  பாராட்டையும் பெறுவார்கள்.  அவர்களுக்கு பதவி உயர்வு  கிட்டும்  வாய்ப்பு உள்ளது.

உத்தியோகம் மற்றும் தொழில் சிறக்க சனி பூஜை

ஆரோக்கியம்:

சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய இயலும். ஆரோக்கியம் சிறப்பாக இருந்தால் தான் சுறுசுறுப்பாக செயல்பட இயலும். எனவே உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். சிறுநீரகம் சம்மந்தப்பட்ட உடல் நல பாதிப்பு ஏற்படலாம். பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. குழந்தைகளின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். 

மனம் மற்றும் உடல் ஆரோக்கியம் பெற சந்திரன் பூஜை

மாணவர்கள்:

பள்ளிக் கல்வி படிக்கும் மாணவர்கள் மனதை ஓருமுகப்படுத்துவதில் சிரமம் காண்பார்கள். எனவே மனதை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் படிப்பில் கவனமுடன் செயல்பட்டு வெற்றி அடைவார்கள். ஆராய்ச்சி கல்வி படிக்கும் மாணவர்கள் படிப்பில் விடா முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். 

மாணவர்கள் படிப்பில் வெற்றி பெற சரஸ்வதி பூஜை

சுப நாட்கள்: 

2, 3, 4, 7, 8, 9, 10, 12, 13, 25, 29, 30.

அசுப நாட்கள்:

20, 21, 22, 23, 24, 26, 27, 28, 31.

Leave a Reply

Submit Comment
See More

Latest Photos