AstroVed Menu
AstroVed
search
search

துலாம் ஆகஸ்ட் மாத ராசி பலன் 2022 | August Matha Thulam Rasi Palan 2022

dateJune 28, 2022

துலாம் ஆகஸ்ட் 2022 பொதுப்பலன்கள்:

துலாம் ராசி அன்பர்களே! இந்த மாதம் குடும்ப உறவுகள் சிறப்பாக இருக்கும். கணவன் மனனவி உறவில் ஒற்றுமை இருக்கும். உங்கள் நட்பு வட்டாரம் விரிவடையும்.  புதிய  நண்பர்கள் கிடைக்கப் பெறுவார்கள். அவர்களின் மூலம் உங்களுக்கு லாபங்களும் ஆதாயங்களும் கிட்டும். உங்கள் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.பங்கு வர்த்தக நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கும் லாபங்களை ஈட்டுவதற்கும் இந்த மாதம் ஏற்றதாக உள்ளது. தொழில் செய்பவர்கள் சிறந்த தொழில் வாய்ப்புகளைப் பெறுவார்கள். வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும்.உங்கள் உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். மாணவர்கள் இந்த மாதம் கவனமுடன் படித்து முன்னேறுவார்கள். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான ராசி பலன் (Horoscope in Tamil) குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.

காதல் / குடும்பம்:

துலாம் ராசி காதலர்களுக்கு இது மகிழ்ச்சி தரும் மாதமாக இருக்கும். காதலர்களுக்கு இடையே அன்னியோன்யம் கூடும். காதலர்கள் மலை சார்ந்த இயற்கை வளம் நிறைந்த பகுதிகளுக்கு  சென்று மகிழ்வார்கள். குடும்பத்தில் நல்லுறவு காணப்படும். பெற்றோர் மற்றும் குழந்தைகளுடனான உறவு சிறப்பாக இருக்கும். 

குடும்ப உறவுகள் மேம்பட குரு பூஜை

நிதி நிலை:

உங்களின் நிதிநிலையைப் பொறுத்தவரை இந்த மாதம் ஏற்றம் தரும் மாதமாக இருக்கும். உங்கள் வருமானம் உயரும். நீங்கள் பிறருக்கு கடனாக கொடுத்து நிலுவையில் இருக்கும்  தொகைகள் வந்து சேரும். வண்டி வாகனம் வாங்கும் வகையில் செலவுகளை மேற்கொள்வீர்கள்.  புது ஆடைகள், நகைகள் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் வாங்குவதற்காக அதிகம் செலவு செய்வீர்கள். 

நிதி நிலையில் உயர்வு பெற ராகு பூஜை

வேலை:

உத்தியோகத்தைப் பொறுத்தவரை பணியிடச் சூழல் உங்களுக்கு சாதகமாக  இருக்கும். உங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் கிட்டும். பணியிடத்தில் நீங்கள் திறம்பட செயலாற்றி சாதனைகளைப் புரிவதற்கு வாய்ப்பு உள்ளது. நீங்கள் அரசு உத்தியோகத்தில் இருப்பவர் என்றால் சிறப்பாகப் பணியாற்றி அனைவரிடமும் நல்ல பெயரும் புகழும் பெறுவீர்கள். சகபணியாளர்கள் உங்களுக்கு அனுகூலமாக இருப்பார்கள். 

தொழில்:

சுய தொழில் செய்யும் துலாம் ராசி அன்பர்கள் சிறப்பாக தொழில் செய்து அதிக லாபம் காண்பார்கள். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கவனமாக செயலாற்ற வேண்டும். நீங்கள் அதிக அளவில் லாபம் ஈட்ட இயலாத நிலை இருக்கும். வரவை விட செலவுகள் அதிகமாக இருக்கும். தொழில் செய்வதற்கு புதிய முதலீடுகள் எதுவும் மேற்கொள்ள இயலாத நிலை இருக்கும். பணப்பற்றாக்குறை உங்களுக்கு பதட்டத்தை அளிக்கும். வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிலில் இருப்பவர்கள் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பைப் பெறுவார்கள். அவர்களின் மூலம் அதிக லாபம் காண இயலும். 

தொழில் வல்லுனர்கள்:

இந்த மாதம் உங்களுக்கு மந்தமாக செல்லும். நீங்கள் எதிர் பார்க்கும் அளவில் சிறப்பாக செயல்பட இயலாத நிலை இருக்கும். பணிகள் அதிகம் இருக்கும் காரணத்தால் குறிப்பிட்ட கால அவகாசத்தில் பணிகளை முடிக்க இயலாது. இதனால் வாடிக்கையாளர்களை திருப்தி படுத்த இயலாது. இது உங்களுக்கு அதிருப்தியை அளிக்கும். 

உத்தியோகம் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் காண சனி பூஜை

ஆரோக்கியம்:

மன ஆரோக்கியமே சிறந்த உடல் ஆரோக்கியத்தை அளிக்கும். உங்கள் ஆரோக்கியம் ஓரளவு சீராக இருக்கும் என்றாலும் உங்கள் மனம் சோர்வுடன் காணப்படும். எனவே உங்கள் மனதை அமைதியாக வைத்துக் கொள்வதன் மூலம்  உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனம் செலுத்த இயலும். ஒற்றை தலைவலி மற்றும் முதுகுவலியால் அவதிபட வேண்டியது வரலாம். எளிய உடற்பயிற்சி, முறையான ஒய்வு மற்றும் சரியான தூக்கம் உங்கள் ஆரோக்கியத்தை சீராக தக்க வைக்க உதவும். 

உடல் ஆரோக்கியத்திற்கு புதன் பூஜை

மாணவர்கள்:

பள்ளிக் கல்வி படிக்கும் மாணவர்கள் மனதை ஒருமுகப்படுத்தி கவானமுடன் படித்து முன்னேறுவார்கள். கல்வியில் சிறந்து விளங்குவார்கள். உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் கிரகிக்கும் திறன் கூடும். கல்லூரியில் சேரப்போகும் மாணவர்கள் வீட்டில்  மூத்தவர்களின் வழிகாட்டுதலை மேற்கொள்வதன் மூலம்  நன்மை பெறலாம்.  ஆராய்ச்சி கல்வி படிக்கும் மாணவர்கள் கல்வியில் பிரகாசிப்பார்கள். 

கல்வியில் ஏற்றம் உண்டாக துர்கா பூஜை

சுப நாட்கள்: 

9, 10, 12, 13, 14, 16, 17, 18.

அசுப நாட்கள்:

1, 11, 15, 19, 20, 21, 26.


banner

Leave a Reply