விருச்சிகம் ஆகஸ்ட் மாத ராசி பலன் 2020 | August Matha Viruchigam Rasi Palan 2020

விருச்சிகம் ஆகஸ்ட் மாத பொதுப்பலன்கள்:
விருச்சிக ராசி அன்பர்களுக்கு, இது ஒரு சராசரியான மாதமாக இருக்கும். பலன்கள் உங்களுக்கு அனுகூலமாக அமைய, ஒவ்வொரு சூழ்நிலையிலும் நீங்கள் கடினமாக முயற்சி செய்ய வேண்டியிருக்கும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையும் சரி, தொழிலும் சரி, சவால்கள் நிறைந்து காணப்படும். வேலையில் உங்கள் கவனக்குறைவு காரணமாக, நீங்கள் சில நல்ல வாய்ப்புகளை இழக்க நேரிடலாம். இந்த நேரத்தில், குடும்பத்திலும் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். மனைவி மூலம் செலவுகள் ஏற்படலாம். செய்தொழில் லாபங்களில் முடக்கமும் ஏற்படலாம். எனினும், எல்லா விஷயங்களிலும் நீங்கள் உறுதியாக இருப்பது அவசியம். இதன் மூலம், உங்களுக்கு தைரியம் மற்றும் எதையும் சமாளிக்கும் திறமை ஏற்படும். இந்த நேரத்தில் சிலருக்குத் திருமணம் நடக்க வாய்ப்புள்ளது. ஜோதிடம், ராசி பலன், நட்சத்திர பலன், இன்றைய பஞ்சாங்கம், வார ராசி பலன்கள், வருடாந்திர ராசி பலன்கள், பரிகாரங்கள் பற்றி மேலும் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.
காதல் மற்றும் திருமண வாழ்க்கை:
காதல் வாழ்க்கை சமபலன் உள்ளதாக இருக்கும். திருமண உறவுகள் நெருக்கமாக இருக்கும். எனினும், உங்கள் துணைவர்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கலாம். கவனம் தேவை. பொதுவாக இந்த மாதம், மிகவும் சந்தோஷம் நிறைந்த காலமாக அமையும்.
நிதி:
நிதி தொடர்பான விஷயங்களில், மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பணவரவு சுமாராக இருக்கும். ஆனால், பொழுதுபோக்கு மற்றும் ஆடம்பரச் செலவுகள் மிக அதிகமாக இருக்கக் கூடும். நிபுணர்களின் ஆலோசனையைப் பெற்ற பின்னரே, ஊகம் தொடர்பான முதலீடுகளைச் செய்யத் திட்டமிடுவது நல்லது.
வேலை:
வேலையில் இருப்பவர்களுக்கு, இது சாதாரணமான காலமாக இருக்கும். கொடுக்கப்பட்ட கடமைகளை இப்பொழுது நீங்கள் சரியாக நிறைவேற்றுவது அவசியம். இதனால் வரும் பாராட்டுகள் உங்களுக்கு மிகுந்த சந்தோஷத்தையும், திருப்தியையும் தரும். ஆனால், ஒரு சிலர், வேலையிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே, மிகுந்த எச்சரிக்கையுடன் பணியாற்றவும்.
தொழில்:
தொழில் முன்னேற்றம் சுமாராக இருக்கக் கூடும். அதில் லாபம் வருவதற்கும் பல தடைகள் ஏற்படக் கூடும். எனினும், திட்டமிட்ட இலக்குகளை, நீங்கள் கடின முயற்சிக்குப் பின் அடைவீர்கள். இந்த நேரத்தில், புதிய திட்டங்களைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்.
தொழில் வல்லுநர்கள்:
இது, விருச்சிக ராசி தொழில் வல்லுநர்கள், கவனமாக இருக்க வேண்டிய காலகட்டமாகும். உணர்ச்சி வசத்தில் திடீரென்று மேற்கொள்ளும் நடவடிக்கைகள் காரணமாக, நீங்கள் பணியில் உரிய கவனம் செலுத்த முடியாமல் போகலாம். எனவே, முக்கிய முடிவுகளை எடுக்கும் பொழுது உணர்ச்சி வசப்படாமல் இருப்பது அவசியம்.
ஆரோக்கியம்:
உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ஏற்கனவே நோயினால் பாதிக்கப்பட்டிருந்தாலும், உடல் நலத்தில் இப்பொழுது நல்ல முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். சத்தான உணவு உட்கொள்வது, எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்வது போன்றவற்றின் மூலம், நீங்கள் நல்ல ஆரோக்கியம் பெறலாம்.
மாணவர்கள்:
மாணவர்களுக்கு இது ஒரு சாதாரண காலமாகும். கல்வி மற்றும் வாழ்க்கையில் வெற்றி பெற, பெரியோர்களிடமிருந்து தன்னம்பிக்கையைக் கற்றுக் கொள்வது நல்லது. இப்பொழுது உங்கள் செயல்களால், பெற்றோர்கள் பெருமிதம் அடைவார்கள்.
சுப தினங்கள் : 8,9,18,19,22,23
அசுப தினங்கள் : 10,11,12,15,16,17,24,25
பரிகாரம்:
ஸ்ரீ முருகப்பெருமான் மற்றும் ஸ்ரீ காலபைரவர் வழிபாடு, பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.
செவ்வாய், குரு, சனி, ராகு, கேது கிரக மூர்த்திகளுக்குப் பூஜை, ஹோமம் செய்து வழிபடுதல்.
பாம்புப் புற்றுக்குப் பால் வார்த்தல், நாய்க்கு உணவு அளித்தல்.
