AstroVed Menu
AstroVed
search
search

துலாம் ஆகஸ்ட் மாத ராசி பலன் 2020 | August Matha Thulam Rasi Palan 2020

dateJuly 9, 2020

துலாம் ஆகஸ்ட் மாத பொதுப்பலன்கள்:

துலாம் ராசி அன்பர்களே! இது உங்களுக்கு ஒரளவு சாதகமான மாதம் எனலாம். தன வரவு நன்றாக இருக்கும். தொழில் துறையில் அதிக உழைப்பும், கடின முயற்சியும் செய்து, உங்கள் தனித்திறனை வெளிப்படுத்தி, நீங்கள் வெற்றி பெறுவீர்கள். இருப்பினும், உங்கள் தொழில், இடையிடையே, சிறிது மந்தமாக இருக்கவும் வாய்ப்புள்ளது. அலுவலகத்தில், உயர்பதவிகள் வர வாய்ப்பு அதிகம். சிலருக்கு, திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படக் கூடும். தாய் வழியில் சொத்துக்கள் வந்தடையலாம். இளைய சகோதரனால் நன்மைகள் ஏற்படக்கூடும். தகப்பனாரின் உடல்நிலையிலும் முன்னேற்றம் காணப்படும். எனினும், கணவன், மனைவி உறவு திருப்திகரமாக இல்லாமல் போகலாம். காதல் விவகாரங்களிலும், கவனம் தேவை. ஜோதிடம், ராசி பலன், நட்சத்திர பலன், இன்றைய பஞ்சாங்கம், வார ராசி பலன்கள், வருடாந்திர ராசி பலன்கள், பரிகாரங்கள் பற்றி மேலும் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.  

     

காதல் மற்றும் திருமண வாழ்க்கை:

இந்த மாதம் காதலர்கள் கவனமாக இருப்பது அவசியம். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவிலும் கவனம் தேவை. சிலருக்கிடையே தற்காலிகப் பிரிவுகள் ஏற்படலாம். சில நேரங்களில் அவர்கள் நேராக சந்திக்க இயலாமலும் போகலாம். சில குடும்ப உறுப்பினர்களுடன், வம்பு வழக்குகளும் ஏற்படக்கூடும்.

நிதி:

உங்கள் நிதி நிலை சிறப்பாக இருக்கும். இந்த நேரத்தில், தாயிடமிருந்து பல அனுகூலங்களையும் நீங்கள் பெறலாம். இப்பொழுது நீங்கள், உங்கள் செலவினங்களை கவனமாகத் திட்டமிடுவது அவசியம். மற்ற செலவுகளைக் குறைப்பதன் மூலம், உங்கள் கடன்களையும் நீங்கள் தீர்க்க முடியும். 

வேலை:

பணி புரிபவர்களுக்கு, இது, நல்ல, முன்னேற்றமான காலமாகும். எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப உங்கள் பணி அமையும். உங்கள் நேர்மையும், அர்ப்பணிப்பும் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். அலுவலகத்தில், உங்கள் மதிப்பை நிரூபிக்க ஒரு நல்ல வாய்ப்பு உங்களைத் தேடி வரக்கூடும். 

தொழில்:

இந்தக் காலகட்டத்தில், நீங்கள் எந்த வகையான வேலையை எடுத்துச் செய்தாலும், அதில் சிறப்பாகவே செயல்படுவீர்கள். எனினும், சிலருக்கு வெற்றி தாமதமாகக் கிடைக்கலாம். ஆனால் நீங்கள் நிச்சயமாக வெற்றியடைவதோடு, நீடித்த கௌரவமும் பெறுவீர்கள். 

தொழில் வல்லுநர்கள்:

துலா ராசி தொழில் வல்லுநர்கள், நேரத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப அவர்களது திட்டங்களைத் தீட்ட வேண்டும் இந்த மூலம், நீங்கள், எதிர்பார்த்தபடி, நல்ல பலன்களை அடைய முடியும். பணிகளில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்தி, சிறப்பாகவும் செயலாற்ற முடியும்.

ஆரோக்கியம்:

உங்கள் ஆரோக்கியம் சுமாராக இருக்கும். நீங்கள் இந்த நேரத்தில், கண்டிப்பான உணவுக் கட்டுப்பாட்டை பராமரிப்பது அவசியம். தினமும் சிறிது நேரம் உடற் பயிற்சி செய்வதும் நல்லது. இது உங்கள் உடலைச் சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும்.

மாணவர்கள்:

கல்வி முன்னேற்றம் சாதாரணமாக இருக்கும். கடும் முயற்சிக்குப் பின்னரே, உங்களுக்குப் பலன் கிடைக்கும். ஆனால் இப்பொழுது, நடைமுறையில் நீங்கள் பாடங்களை நன்கு தெரிந்து கொள்வீர்கள். மேலும், அவற்றைப் பற்றிய ஆழ்ந்த அறிவும் உங்களிடம் இருக்கும். 

சுப தினங்கள் : 5,6,7,15,16,17,20,21.
அசுப தினங்கள் : 8,9,13,14,22,23.

பரிகாரம்:

  • பகவான் ஸ்ரீ லக்ஷ்மீ நாராயணர் மற்றும் ஸ்ரீ துர்க்கை வழிபாடு, பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.
  • சுக்கிரன், சனி, குரு, ராகு, கேது கிரக மூர்த்திகளுக்குப் பூஜை, ஹோமம் செய்து வழிபடுதல்.
  • வீட்டுக்கு அருகில் உள்ள கோவிலில் ஏழைகள், சந்நியாசிகள் மற்றும் அந்தணர்களுக்கு தானம் அளித்தல். சித்தர் சமாதி வழிபாடு செய்தல். 
     

banner

Leave a Reply