AstroVed Menu
AstroVed
search
search

தனுசு ஆகஸ்ட் மாத ராசி பலன் 2020 | August Matha Dhanusu Rasi Palan 2020

dateJuly 9, 2020

தனுசு ஆகஸ்ட் மாத பொதுப்பலன்கள்:

தனுசு ராசி அன்பர்களுக்கு, இது பெருமளவு சாதகமான மாதம் எனலாம். வேலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். சக ஊழியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். அன்றாட நடவடிக்கைகளில் நீங்கள் காட்டும் தீவிரமான ஈடுபாடு, அனைவரையும் ஈர்த்து உங்களுடன் இணைந்து பணியாற்ற வைக்கும். நாகரீகமான பொருட்களில் உங்களுக்கு அதிக ஆர்வம் ஏற்படும். பொதுவாக, உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை மேம்படுத்திக் கொள்ள இது ஒரு மிகச் சரியான நேரம் எனலாம். ஆனால், .தன வரவு சற்றே மந்தமாகக் காணப்படும். இளைய சகோதரர்களினால் பிரச்சனைகள் வரலாம். காதல் வாழ்க்கையிலும் கவனம் தேவை. ஆரோக்கியம் சாதாரணமாக இருக்கும். சிலருக்கு வேலை தொடர்பாக, வெளியூர்ப் பயணம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.  ஜோதிடம், ராசி பலன், நட்சத்திர பலன், இன்றைய பஞ்சாங்கம், வார ராசி பலன்கள், வருடாந்திர ராசி பலன்கள், பரிகாரங்கள் பற்றி மேலும் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.

      

காதல் மற்றும் திருமண வாழ்க்கை:

உங்கள் வாழ்க்கைத் துணையுடன் உறவு மிகவும் சுமுகமாக இருக்கும். அவருடன் நேரத்தை இனிமையாகச் செலவிட்டு, மகிழ்ச்சியான அனுபவம் பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களுடனும் நல்லுறவு நிலவும். பொதுவாக, உங்கள் எல்லாச் செயல்களுக்கும் இப்பொழுது சரியான பலன் கிடைக்கும் எனலாம். 

நிதி:

உங்கள் நிதி நிலை சுமாராகவே இருக்கும். எனவே, எந்த விஷயத்தைச் செய்வதற்கு முன்பாகவும், இரண்டு முறை யோசித்துச் செய்வது நல்லது. எனினும், அரசாங்கம் மற்றும் கலை தொடர்பான துறைகளின் மூலம் பண வரவு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

வேலை:

இது, வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் காலமாகும். எனினும், நீங்கள் செய்த பணியை, ஒரு முறைக்கு இரு முறை ஆராய்வது, அலுவலகத்தில் நல்ல முறையில் செயலாற்ற உதவும். சூழ்நிலைக் கேற்ப பணிகளை மேற்கொள்வதும், நன்மை தரும். 

தொழில்:

வியாபாரத்தில் நீங்கள் தொடர்ந்து மேற்கொள்ளும் முயற்சிகள், உங்களுக்கு நல்ல வாய்ப்புகளைப் பெற்றுத் தரும். ஆயினும், முன்னேற்றங்கள் மெதுவாகவே வந்து சேரலாம். இந்த நேரத்தில், புதிய தொழிலில் கூட்டு சேர்ந்து செய்வதைத் தவிப்பது நல்லது. 

தொழில் வல்லுநர்கள்:

தனுசு ராசி தொழில் வல்லுநர்களின் நடவடிக்கைகள் முன்னேற்றம் தருவதாக இருக்கும். இந்தக் காலகட்டத்தில், நேரத்திற்கும், சூழ்நிலைக்கும் ஏற்ப, திட்டங்களை நீங்கள் வடிவமைப்பது நல்லது. எனினும், வேலையில் தாமதங்கள் ஏற்படலாம். ஆனால், அவற்றைக் கண்டு நீங்கள் நம்பிக்கை இழந்து விட வேண்டாம்.  

ஆரோக்கியம்:

உங்கள் உடல்நிலையில் கவனம் தேவைப்படலாம். சிலருக்கு நோய்கள் வந்து விலகும் வாய்ப்பு உள்ளது. பிறகு ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணப்படும். இந்த நேரத்தில் நீங்கள், இயற்கை உணவுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது நல்லது. இதன் மூலம், நீங்கள் மன அழுத்தம் இல்லாத அமைதியான வாழ்க்கையை அனுபவிக்க முடியும். 

மாணவர்கள்:

மாணவர்கள் பொதுவாக படிப்பில் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள். எனினும், நீங்கள் வெளியே செல்வதில் நேரத்தைச் செலவிடுவதற்கு பதிலாக, கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டு படிப்பது, அதிக நலன் தரும். உங்களில் சிலர், சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்க விரும்புவீர்கள். 

சுப தினங்கள் : 10,11,12,18,19
அசுப தினங்கள் : 13,14,24,25,26,27

பரிகாரம்:

சிவபெருமான் மற்றும் சித்தர்கள் வழிபாடு, பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.
குரு, சனி, ராகு, கேது கிரக மூர்த்திகளுக்கு, ஹோமம் மற்றும் பூஜை செய்து வழிபடுதல்.
ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு அளித்தல், உதவி செய்தல்.


banner

Leave a Reply