x
x
x
cart-added The item has been added to your cart.

கன்னி ஆகஸ்ட் மாத ராசி பலன் 2020 | August Matha Kanni Rasi Palan 2020

July 8, 2020 | Total Views : 66
Zoom In Zoom Out Print

கன்னி ஆகஸ்ட் மாத பொதுப்பலன்கள்:

கன்னி ராசி அன்பர்களுக்கு, இது, சுமாரான பலன்களைத் தரும் மாதமாக இருக்கும். தொழில் சாதாரணமாக நடைபெறும். எனினும், செய்தொழிலில் லாபங்கள் தடைபடலாம். பணவரவு நன்றாக இருக்கும். சகோதர வழியிலும் நீங்கள் நல்ல பலன்களை அடையலாம். சிலருக்கு வாகனங்கள் வாங்க வாய்ப்பு உண்டாகும். வேலையில் இடமாற்றங்களும் ஏற்படலாம். சிலர் குடும்பத்துடன் வெளியூர்ப் பயணங்கள் செல்லக்கூடும். உங்கள் உடல் நலனில் முன்னேற்றம் காணப்படும். தந்தையின் உடல் நலமும் நன்றாக இருக்கும். ஆனால் துணைவர், தாய் போன்றவர்களின் உடல் நிலையில் கவனம் தேவை. திருமண வாழ்க்கையில் சில தடங்கல்கள் காணப்படலாம். சிறு கஷ்டங்களும் இடையிடையே வந்து போகக் கூடும். ஜோதிடம், ராசி பலன், நட்சத்திர பலன், இன்றைய பஞ்சாங்கம், வார ராசி பலன்கள், வருடாந்திர ராசி பலன்கள், பரிகாரங்கள் பற்றி மேலும் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.  

    

காதல் மற்றும் திருமண வாழ்க்கை:

காதல் உணர்வு சிறிது மந்தமாகக் காணப்படலாம். சில காதலர்களுக்குள் மனகசப்பும் ஏற்படக் கூடும். எனினும், சில காதல் உறவுகள் திருமணத்தில் முடியும் வாய்ப்புகளும் உள்ளன. கணவன் மனைவிக்குள் புரிந்துணர்வு அதிகரிக்கும். துணைவரின் உடல் நலத்தில் அக்கறையுடன் இருப்பது அவசியம். 

நிதி:

உங்கள் பொருளாதார நிலை நன்றாக இருக்கும். அரசாங்கம் மூலமாக லாபம் அடைவீர்கள். பணத்தைச் சேமிப்பதற்கான உங்களுடைய ஒவ்வொரு முயற்சியும், இப்பொழுது சுலபமாக வெற்றி பெறக் கூடும். உங்கள் வருமானமும், உங்களது அனைத்துப் பொறுப்புகளையும்  நிறைவேற்றுவதற்குப் போதுமானதாக இருக்கும். 

வேலை:

அலுவலகத்தில், நீங்கள் மிகவும் நேர்த்தியாகவும், சிறப்பாகவும் பணி புரிவீர்கள். வேலையில் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு, உங்களுக்கென ஒரு தனி அடையாளத்தையும் ஏற்படுத்திக் கொள்வீர்கள். இருப்பினும், ஒரு சிலருக்கு வேலை இழக்கக்கூடிய நிலை உருவாகலாம். எனவே எச்சரிக்கையாக இருக்கவும்.  

தொழில்:

இந்தக் காலகட்டத்தில், உங்கள் தொழில் வகையில் சில மனசஞ்சலங்கள் ஏற்படலாம். உங்கள் எண்ணங்களும் ஒரே சீராக அமையாமல் போகலாம். வெற்றியும் தாமதமாகக் கிடைக்கலாம். ஆயினும், நீங்கள் நிச்சயமாக வெற்றியடைவதோடு, நீடித்த கௌரவமும் பெறுவீர்கள். 

தொழில் வல்லுநர்கள்:

கன்னி ராசி தொழில் வல்லுநர்களுக்கு, இது அனுகூலமான மாதமாக அமையும். உங்கள் செயல்திறன் மூலம், உங்களுக்கு நன்மையான பலன்கள் கிடைக்கும். சிலருக்குப் பதவி உயர்வு வாய்ப்புகள் உருவாகும். வேறு சிலருக்கு, நல்ல, புதிய வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன. பொதுவாக நீங்கள் அதிக தன்னம்பிக்கையைப் பெறுவீர்கள். 

ஆரோக்கியம்:

உங்கள் உடல் நிலையில் ஏற்கனவே பாதிப்பு இருந்தால், இந்த நேரத்தில், அதில் நல்ல முன்னேற்றம் காணப்படும். உங்களது வெற்றி மற்றும் சந்தோஷம், உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தைத் தரும். இப்பொழுது நீங்கள், மன அழுத்தம் இல்லாத அமைதியான வாழ்க்கையை அனுபவிக்கலாம்.  

மாணவர்கள்:

படிப்பதற்கும், சிறந்த கல்வி அனுபவத்தைப் பெறுவதற்கும் இது உகந்த மாதமாகும். உங்களது திறந்த மனமும், பரந்த மனப்பான்மையும், உங்கள் தனிப்பட்ட திறமைகளையும், நற்பெயரையும் மேம்படுத்த உதவும். உங்கள்  செயல் திறனால் பெற்றோர்களும்  மன மகிழ்ச்சியடைவார்கள்.

சுப தினங்கள் : 3,4,13,14,18,19,30,31
அசுப தினங்கள் : 5,6,7,10,11,12,20,21

பரிகாரம்:

பகவான் ஸ்ரீமந் நாராயணன் மற்றும் ஸ்ரீ கணபதி வழிபாடு பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.
புதன், சனி, குரு, ராகு, கேது கிரக மூர்த்திகளுக்குப் பூஜை, ஹோமம் செய்து வழிபடுதல்.
ஏழைக் குழந்தைகளுக்கு, கல்வி மற்றும் மருத்துவ உதவி செய்தல். ஆதரவற்றோருக்கு அன்னதானம் அளித்தல்.
 

Leave a Reply

Submit Comment
See More

Latest Photos