சிம்மம் ஆகஸ்ட் மாத ராசி பலன் 2020 | August Matha Simmam Rasi Palan 2020

சிம்மம் ஆகஸ்ட் மாத பொதுப்பலன்கள்:
சிம்ம ராசி அன்பர்களுக்கு, இது பயனுள்ள மாதமாக விளங்கும். தொழில் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் சிறப்பாக அமையும். இவை வருங்காலத்தில் உங்களுக்கு நல்ல ஆதரவை அளிக்கும். தொழில் துறையில் நன்மை பயக்கக்கூடிய வாய்ப்புகள் உருவாகும். எனவே, கடினமாக உழைத்து, நீங்கள் அதிக உற்பத்தித் திறனை அடைய உரிய காலம் இது. ஆனால், சூழ்நிலைகள், சில சமயங்களில், உங்கள் பொறுமையை சோதிக்கலாம். எனினும், எளிதில் நம்பிக்கை இழக்காதீர்கள். பணிபுரிபவர்களும் இப்பொழுது பதவி உயர்வு போன்றவற்றைப் பெறும் வாய்ப்பு உள்ளது. உடல் நிலையிலும் நல்ல முன்னேற்றம் ஏற்படலாம். எனினும், ஆரோக்கியத்தில் உரிய கவனம் செலுத்தவும். தாயின் உடல்நிலையிலும் அக்கறை தேவை. குடும்ப விஷயங்களில் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. ஜோதிடம், ராசி பலன், நட்சத்திர பலன், இன்றைய பஞ்சாங்கம், வார ராசி பலன்கள், வருடாந்திர ராசி பலன்கள், பரிகாரங்கள் பற்றி மேலும் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.
காதல் மற்றும் திருமண வாழ்க்கை:
காதல், திருமணம் போன்றவற்றிற்கு, இது சுமாரான காலம் எனலாம். எனினும், உங்கள் காதலும், உறவும் உண்மையானதாக இருக்கும் அன்புக்குரியவர்களுடன் நீங்கள் நேரத்தை இனிமையாகச் செலவிட்டு மகிழ்வீர்கள் திருமணமாகாதவர்கள், புண்ணியத் தலங்களுக்குச் சென்று வந்தால், திருமணம் கைகூடி வரும் வாய்ப்பு உருவாகும்.
நிதி:
உங்கள் நிதி நிலை சிறப்பாகக் காணப்படுகிறது. அதில் படிப்படியான முன்னேற்றத்தையும் கூட நீங்கள் எதிர்பார்க்கலாம். செய்தொழிலில் அதிக லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. எதிர்காலத் தேவைகளுக்காக, இப்பொழுது நீங்கள், சில நிதி திட்டங்களில் முதலீடு செய்யக்கூடும்.
வேலை:
பணியில் இருப்பவர்களுக்கு சராசரியான பலன் கிடைக்கும். புதிய தொழில் நுட்பங்களினால், உங்களுக்கு நல்ல அனுபவம் கிடைக்கும். உடன் பணியாற்றும் ஊழியர்களும் உங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள். ஒரு சிலருக்கு வேலையில் இடமாற்றம் ஏற்படலாம்.
தொழில்:
உங்கள் தைரியமான அணுகுமுறையும், சுதந்திரமான இயல்பும் உங்களது தொழில் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும். இந்த நேரத்தில், நீங்கள் எந்த வகையான பணியை எடுத்துச் செய்தாலும், அதில் சிறப்பாகவே செயல்படுவீர்கள். இதனால், உங்கள் தொழில் முன்னேற்றம் சிறந்து விளங்கும்.
தொழில் வல்லுநர்கள்:
சிம்ம ராசி தொழில் வல்லுநர்களின் செயல்திறன் காரணமாக, அவர்களுக்கு இப்பொழுது நற்பலன்கள் கிடைக்கும். சில தாமதங்கள் ஏற்பட்டாலும் கூட, தொழில் முன்னேற்றம் காணப்படும். உங்களுக்குப் பதவி உயர்வு வாய்ப்புகளும் உருவாகலாம். சிலருக்குப் புதிய வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன.
ஆரோக்கியம்:
உங்கள் உடல்நிலை ஓரளவு நன்றாகவே இருக்கும். எனினும் சிலருக்கு, கபம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்பட்டு விலகக்கூடும். எண்ணெய் உணவு உட்கொள்வதன் காரணமாக, செரிமானப் பிரச்சினைகளாலும் சிலர் பாதிக்கப்படலாம். இருப்பினும், பொதுவாக, உங்கள் ஆரோக்கியத்திற்கு எந்த குறையும் இருக்காது.
மாணவர்கள்:
மாணவர்களுக்கு இது ஒரு சாதாரண காலமாக இருக்கும். இந்த நேரத்தில் உங்கள் கல்வி முயற்சிகள் சீரான போக்கில் நடைபெறும். எனினும் உங்கள் மன நிலையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது அவசியம். நண்பர்களுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்வதும் நன்மை தரும்.
சுப தினங்கள் : 1,2,10,11,12,15,16,17,28,29
அசுப தினங்கள் : 3,4,8,9,18,19,30,31
பரிகாரம்
- ஸ்ரீ ஆஞ்சநேயர் மற்றும் ஸ்ரீ ஆதிசேஷன் வழிபாடு, பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.
- சூரியன், சனி, குரு, ராகு, கேது கிரக மூர்த்திகளுக்குப் பூஜை, ஹோமம் செய்து வழிபடுதல்.
- ஏழைக் குழந்தைகளின் கல்வி மற்றும் மருத்துவத்திற்கு உதவுதல். அனாதை ஆசிரமங்களில் உள்ள குழந்தைகளுக்கு அன்னதானம் அளித்து உதவி செய்தல்.
