ரிஷபம் ஆகஸ்ட் மாத ராசி பலன் 2022 | August Matha Rishabam Rasi Palan 2022

ரிஷபம் ஆகஸ்ட் 2022 பொதுப்பலன்கள்:
ரிஷப ராசி அன்பர்களே! இந்த மாதம் குடும்ப உறுப்பினர்களின் மதிப்பிற்கும் மரியாதைக்கும் நீங்கள் ஆளாவீர்கள். நல்லுறவு நீடிக்கும் என்றாலும் குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள் வந்து போகும். இதன் காரணமாக கருத்து வேறுபாடுகளும் வந்து போகும். பூர்வீக சொத்து சம்பந்தமான கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம், கவனம் தேவை. சொந்தமாக தொழில் செய்பவர்கள் நல்ல லாபங்களை அடையக்கூடிய வாய்ப்பு உள்ளது. பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். இன்று நீங்கள் வீட்டிற்கு தேவையான வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் வீட்டு மின்னணுப் பொருட்களை வாங்குவீர்கள். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாணவர்கள் சிறப்பாகத் தேர்வுகளை எழுதி நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான ராசி பலன் (Horoscope in Tamil) குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.
காதல் / குடும்பம்:
காதலர்களுக்கு இந்த மாதம் அனுகூலமான மாதமாக இருக்கும். காதலர்கள் வெளியிடங்களுக்கு குறிப்பாக மலை வாசஸ்தலங்களுக்கு சென்று வருவதன் மூலம் மகிழ்ச்சி காண்பார்கள். கணவன் மனைவிக்கு இடையே சிறிய விஷயங்களுக்கெல்லாம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. எனவே உங்கள் பேச்சில் கவனம் தேவை. தேவையற்ற பேச்சுகள் அல்லது வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.
குடும்ப உறவுகள் மேம்பட குரு பூஜை
நிதி நிலை:
இந்த மாதம் உங்கள் பொருளாதார நிலை ஏற்றமுடன் இருக்கும். உங்கள் வருமானத்தை விட செலவுகள் குறைவாக இருக்கும். இந்த மாதம் நீங்கள் கணிசமான அளவில் பணம் சேர்ப்பீர்கள். பங்கு வர்த்தக தொழில் மூலம் தன வருவாய் கணிசமாக உயரும். பணம் வரவு செலவு குறித்த விவகாரங்களை வீட்டுப் பெரியவர்களுடன் ஆலோசித்து முடிவெடுப்பது நல்லது.
நிதிநிலையில் உயர்வு பெற ராகு பூஜை
வேலை:
உத்தியோகத்தைப் பொறுத்தவரை இந்த மாதம் அனுகூலமான மாதமாக இருக்கும் பணியிடச் சூழல் சாதகமாக இருக்கும். தனியார் துறையில் பணி செய்பவர்கள் தங்கள் திறமை வெளிப்படும் வகையில் பணியாற்றுவார்கள். சக ஊழியர்களின் உதவியுடன் பணிகளை விரைவாக முடிப்பீர்கள். இந்த மாதம் அரசு உத்தியோகத்தில் ஏற்றம் காணப்படும். உடன் பணியாற்றும் பணியாளர்களுடன் நல்லுறவு காணப்படும்.
தொழில்:
சுய தொழில் செய்பவர்கள் இந்த மாதம் தொழிலில் முன்னேற்றம் காண்பார்கள். நண்பர்களின் உதவியுடன் கூட்டுத்தொழிலில் லாபம் கிடைப்பதற்கு வாய்ப்ப்பு உள்ளது. பட்டு வளர்ப்பு துறை சம்மந்தப்பட்ட ஏற்றுமதி தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் ஏற்படும். கணினி மற்றும் தொலைதொடர்பு சாதனம் இறக்குமதி தொழிலில் பங்குகள் ஏற்றம் மிகுந்து காணப்படும்.
தொழில் வல்லுனர்கள்:
உயர்கல்வி சம்மந்தப்பட்ட தொழில் வல்லுனர்கள் தங்கள் பணியிடத்தில் எச்சரிக்கையுடனும் கவனமுடனும் செயல்பட வேண்டும். தகவல் தொழில் நுட்பம் துறையைச் சார்ந்த வல்லுனர்கள் தங்கள் தொழிலை விரிவு படுத்த அல்லது புதிய தொழில் தொடங்க முதலீடு செய்வதை தள்ளிப் போடுவது நல்லது. செய்தே ஆக வேண்டிய கட்டாயம் எனில் முதலீடுகளை மேற்கொள்ளும் போது கவனம் தேவை. ஆயத்த ஆடை வணிகம் செய்யும் தொழில் வல்லுனர்கள் கூட்டுத் தொழிலில் முதலீடுகளை மேற்கொள்வது கூடாது.
உத்தியோகம் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் காண சனி பூஜை
ஆரோக்கியம்:
இந்த மாதம் உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். அதிக பணிச் சுமைகள் காரணமாக உங்கள் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். கழுத்து வலி மற்றும் கை வலி போன்ற உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை ஓய்வு எடுத்து வேலை செய்வது நல்லது. தினமும் கழுத்திற்கும் கைகளுக்கும் பயிற்சி எடுத்துக்கொள்வது புத்துணர்ச்சி அளிக்கும்.
உடல் ஆரோக்கியத்திற்கு புதன் பூஜை
மாணவர்கள்:
பள்ளிக்கல்வி பயிலும் மாணவர்கள் படிப்பில் நல்ல மதிப்பெண் பெறுவார்கள். முதுகலை படிக்க போகும் ஒரு சில மாணவர்களுக்கு வெளிநாட்டில் கல்வி கற்கும் வாய்ப்புகள் உருவாகும். ஆராய்ச்சி கல்வி படிக்கும் மாணவர்கள் ஆராய்ச்சியில் வெற்றி வாகை சூடுவார்கள். படிப்பிலும் சிறந்து விளங்குவார்கள்.
கல்வியில் வெற்றி கிடைக்க கணபதி பூஜை
சுப நாட்கள்:
2, 4, 7, 8, 12, 13.
அசுப நாட்கள்:
1, 5, 6, 9, 10, 11.
