மிதுனம் ஆகஸ்ட் மாத ராசி பலன் 2022 | August Matha Mithunam Rasi Palan 2022

மிதுனம் ஆகஸ்ட் 2022 பொதுப்பலன்கள்:
மிதுன ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்கள் குடும்பப் பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு நிலை சிறப்பாக இருக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். அவர்களை அனுசரித்து நடந்து கொள்வதும் வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நன்மை பயக்கும். மளிகை வியாபாரம் மூலமாக நல்ல வருமானம் கிடைக்கும். தரகு சம்மந்தப்பட்ட தொழிலில் நல்ல லாபங்களை எதிர்பார்க்கலாம். இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மாணவர்கள் கவனம் செலுத்தி படித்து முன்னேறுவார்கள். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான ராசி பலன் (Horoscope in Tamil) குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.
காதல் / குடும்பம்:
காதலர்களுக்கு இந்த மாதம் சற்றே அனுகூலமற்ற நிலை காணப்படும். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது எனவே தேவையற்ற பேச்சுகள் மற்றும் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. திருமணமான தம்பதிகளுக்கு இந்த மாதம் குடும்பப் பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு நிலை குறிப்பாக தாய் மற்றும் தந்தையுடனான உறவுநிலை நன்றாக இருக்கும். கணவன் மனைவி பரஸ்பரம் ஒருவருக்கொருவர் நேரம் ஒதுக்கி மனம்விட்டு பேசுவதன் மூலம் உறவு நிலை வலுப்படும்.
கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவ துர்கா பூஜை
நிதி நிலை:
இந்த மாதம் உங்கள் பொருளாதார நிலையில் முன்னேற்றமான நிலை இருக்கும். ஆடை மற்றும் அணிகலன் வாங்குவதற்காக அதிக செலவுகள் செய்வீர்கள். நீண்டதூர பயணங்களுக்காகவும் செலவீனங்கள் ஏற்படும். பரஸ்பர நிதியில் முதலீடு செய்வதன் மூலம் அதிக லாபத்தை எதிர்பார்க்க முடியும். பலசரக்கு வியாபாரத்தில் தன வருவாய் கணிசமாக உயரும்.
தன நிலையில் ஏற்றம் உண்டாக சுக்கிரன் பூஜை
வேலை:
உத்தியோகத்தைப் பொறுத்தவரை இந்த மாதம் நீங்கள் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். நீங்கள் அரசுத்துறையில் மனிதவள மேம்பாட்டுத் துறையில் வேலை செய்பவர்கள் என்றால் நீங்கள் எதிர் பார்த்துக் காத்துக் கொண்டிருத்த பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள். கணினி அறிவியல் துறையில் உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். பொருளாதாரத்துறையில் வேலை செய்பவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும்.
தொழில்:
மிதுன ராசி அன்பர்களே! உங்கள் தொழில் சிறப்பாக நடக்கும் என்றாலும் நீங்கள் கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டியிருக்கும். உணவு பொருட்கள் ஏற்றுமதி தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் கணிசமான அளவில் லாபம் பெருகக் காண்பார்கள். கூட்டுத்தொழில் செய்பவர்கள் தங்கள் லாப இலக்குகளை அடைய கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். மளிகை வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை எதிர்பார்க்கலாம்.
தொழில் வல்லுனர்கள்:
இந்த மாதம் கட்டுமானத்துறையை சார்ந்த தொழில் வல்லுனர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும் மாதமாக இருக்கும். சுயமாக தொழில் செய்யும் தொழில் வல்லுனர்கள் தன நிலையில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். தகவல் தொழில் நுட்பத்துறையை சார்ந்த தொழில் வல்லுனர்களுக்கு வெளிநாட்டு உத்தியோகம் கை கூடிவரும்.
உத்தியோகம் மற்றும் தொழில் உயர்வுக்கு முருகன் பூஜை
ஆரோக்கியம்:
இந்த மாதம் உங்களது உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். என்றாலும் அதிக பணிகள் காரணமாக நீங்கள் சோர்வுக்கு ஆளாவீர்கள். பணிகளுக்கு இடையே ஒய்வு எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் பாதுகாக்க முடியும்.
உடல் ஆரோக்கியம் பெற சந்திரன் பூஜை
மாணவர்கள்:
பள்ளியில் படிக்கும் மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்தி தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள். உயர்கல்வி பயிலும் மாணவர்களின் கிரகிக்கும் திறன் அதிகரித்து காணப்படும் அதன் மூலம் தேர்வில் வெற்றிவாகை சூடுவார்கள். சமூக அறிவியல் துறையில் ஆராய்ச்சி கல்வி படிக்க நினைக்கும் மாணவர்கள் தங்கள் விருப்பம் நிறைவேறக் காண்பார்கள்.
மாணவர்களின் கிரகிக்கும் திறன் கூட கணபதி பூஜை
சுப நாட்கள்:
2, 3, 4, 7, 8, 9, 13, 14, 16, 17, 18,
அசுப நாட்கள்:
11, 12, 15, 26, 27, 28, 31.
