மேஷம் ஆகஸ்ட் மாத ராசி பலன் 2022 | August Matha Mesham Rasi Palan 2022

மேஷம் ஆகஸ்ட் 2022 பொதுப்பலன்கள்:
மேஷ ராசி அன்பர்களே! குடும்பத்தில் உறவு நிலை சிறப்பாக இருக்கும். கணவன் மனைவி உறவில் கடந்த காலங்களில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பிறக்கும். அன்னியோன்யம் கூடும். குடும்பத்தில் அமைதி இருக்கும். பொருளாதாரத்தைப் பொறுத்தவரை இந்த மாதம் உங்களுக்கு பண வரவு அதிகமாக இருக்கும். உபரி பணம் கையில் இருக்கும். செலவுகள் குறைவாக இருக்கும். நீங்கள் பணத்தை சேமிக்கவும் செய்வீர்கள். இந்த மாதம் தொழில் சிறப்பாக இருக்கும். குறிப்பாக ஆயத்த ஆடை சம்மந்தப்பட்ட தொழில் செய்பவர்கள் சிறந்த தொழில் வாய்ப்புகளை பெறுவார்கள். வெளிநாடு சென்று தொழிலை விரிவு படித்த நினைக்கும் உங்கள் கனவுகள் யாவும் நனவாகும். ஏற்றுமதி வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். வயிறு சம்மந்தப்பட்ட அஜீரணக் கோளாறுகள் வந்து நீங்கும். மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான ராசி பலன் (Horoscope in Tamil) குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.
காதல் / குடும்பம்:
காதலர்களுக்கு இந்த மாதம் அனுகூலமான மாதமாக இருக்கும். உறவில் ஒற்றுமையும் இனிமையும் காணப்படும். வெளியிடங்களுக்குச் சென்று மகிழ்வதற்கான வாய்ப்புகளைப் பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். புரிந்துணர்வு அதிகரிக்கும். அன்னியோன்யம் கூடும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையிலும் உறவில் ஒற்றுமை இருக்கும். அதன் காரணமாக குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்பத்தில் குதூகலம் காணப்படும்.
கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்க சுக்கிரன் பூஜை
நிதி நிலை:
பொருளாதாரத்தைப் பொறுத்தவரை இந்த மாதம் ஏற்றம் தரும் மாதமாக இருக்கும். கையில் பணம் தாராளமாகப் புழங்கும். உபரிப் பணம் கையில் இருக்கும். இதனால் சேமிப்புகளை மேற்கொள்வீர்கள். புதிய கடன்கள் வாங்கும் எண்ணம் இருந்தால் அதனை தள்ளிப் போட வேண்டும். பண விஷயங்களில் அவசர முடிவுகள் எதையும் இந்த மாதம் நீங்கள் மேற்கொள்ள வேண்டாம். வீடு பராமரிப்பு மற்றும் வீட்டிற்கு வண்ணம் பூசுதல் போன்றவைகளில் செலவுகள் ஏற்படும்.
கடன் பிரச்சனை தீர ருண விமோச்சன பூஜை
வேலை:
உத்தியோகத்தைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும். பணியிடச் சூழல் உங்களுக்கு ஆதரவாக இருக்கும். சக பணியாளர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். அவர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு கிட்டும். நீங்கள் கடின உழைப்பை மேற்கொள்வீர்கள். உங்கள் தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ற பாராட்டை பணியிடத்தில் பெறுவீர்கள். பணியிடத்தில் நல்ல பெயரும் புகழும் கிட்டும். வெளிநாட்டில் உத்தியோகம் தேடும் பொறியியல் துறையை சார்ந்தவர்களுக்கு வெளிநாட்டில் வேலை வாய்ப்பு கிடைக்கும்.
தொழில்:
இந்த மாதம் தொழில் சிறப்பாக நடக்கும். தொழில் தொடர்பான பயணங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். குறிப்பாக கூட்டுத் தொழில் சிறப்பாக இருக்கும். வெளி நாட்டில் தொழிலை விரிவு படுத்துவீர்கள். அதன் மூலம் லாபம் அதிகரிக்கும். தொழிலில் பெயரும் புகழும் பெறுவீர்கள்.
தொழில் வல்லுனர்கள்:
மேஷ ராசி தொழில் வல்லுனர்கள் இந்த மாதம் கடின உழைப்பை மேற்கொள்வார்கள். வாடிக்கையாளர்களின் ஆதரவையும் அங்கீகாரத்தையும் பெறுவார்கள். அரசுத துறை சார்ந்த தொழில் வல்லுனர்கள் தொழிலில் ஏற்றம் பெறுவார்கள். லாபங்களும் ஆதாயங்களும் பெருகும். தன நிலையில் ஏற்றம் உண்டாகும். வணிகம், தகவல் தொடர்பு போன்ற துறைகளில் இருப்பவர்கள் பணியில் பதட்டமான சூழ்நிலையை எதிர்கொள்ள நேரும். .
உத்தியோகம் மற்றும் தொழிலில் லாபம் கிடைக்க அஷ்ட லக்ஷ்மி பூஜை
ஆரோக்கியம்:
உங்கள் ஆரோக்கியம் சீராக இருக்கும் என்றாலும் கவனம் தேவை. இந்த மாதம் நீங்கள் வயிறு மற்றும் குடல் சார்ந்த அஜீரணக் கோளாறுகளை சந்திக்க நேரலாம். சத்தான சரிவிகித உணவு மற்றும் முறையான உடற்பயிற்சி உங்கள் ஆரோக்கியத்தைக் காக்கும். துரித உணவு மற்றும் எண்ணெய் நிறைந்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். வயதானவர்களின் உடல் நிலையில் அக்கறை தேவை. தாயாருக்கு சிறு உடல் உபாதைகள் வந்து போகும்.
உடல் ஆரோக்கியம் பெற சந்திரன் பூஜை
மாணவர்கள்:
பள்ளிக் கல்வி படிக்கும் மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள். கல்வியில் மேன்மை அடைவார்கள். வெளிநாடு சென்று கல்வி பயில விரும்பும் உயர்கல்வி மாணவர்கள் பெற்றோரின் வழிகாட்டுதலைப் பின்பற்றுவதன் மூலம் வெற்றி காண இயலும். ஆராய்ச்சி கல்வி பயிலும் மாணவர்கள் தைரியமாகச் செயல்படுவார்கள். விடாமுயற்சியுடன் செயல்பட்டு ஆராய்ச்சியில் வெற்றி காண்பார்கள்.
மாணவர்களின் கிரகிக்கும் திறன் கூட கணபதி பூஜை
சுப நாட்கள்:
2, 3, 4, 9, 10, 12, 13, 14, 16.
அசுப நாட்கள்:
1, 5, 6, 7, 8, 11, 15.
