AstroVed Menu
AstroVed
search
search

மேஷம் ஆகஸ்ட் மாத ராசி பலன் 2020 | August Matha Mesham Rasi Palan 2020

dateJuly 9, 2020

மேஷம் ஆகஸ்ட் மாத பொதுப்பலன்கள்:

மேஷ ராசி அன்பர்களே! இந்த மாதம் சில நேரங்களில், உங்களுக்கு சிறிது மனக் குழப்பங்கள் ஏற்படலாம். சில பிரச்சினைகளாலும், சூழ்நிலைகளாலும் உங்கள் நடவடிக்கைகளில் தன்னம்பிக்கையும், தைரியமும் குறைந்து காணப்படலாம். எனவே, வேலையில் மிகுந்த கவனம் தேவை. ஆயினும், தொழில் துறையில் உங்கள் செயல்பாடு மிகச் சிறப்பாக இருக்கும். பணவரவும் நன்றாக இருக்கும். அரசாங்கம் தொடர்பான காரியங்கள் கைகூடும். செய்தொழிலில் நல்ல லாபங்கள் கிடைக்கும். ஜீவனம் நன்றாக நடக்கும். சிலருக்கு பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். உங்களில் சிலர் ஆன்மீகப் பயணங்களும் செல்லக் கூடும். குடும்பத்தில் மிகுந்த சந்தோஷம் நிலவும். குறிப்பாக, பெண்களால் அதிக மகிழ்ச்சி உண்டாகும். எனினும், சகோதரர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. ஜோதிடம், ராசி பலன், நட்சத்திர பலன், இன்றைய பஞ்சாங்கம், வார ராசி பலன்கள், வருடாந்திர ராசி பலன்கள், பரிகாரங்கள் பற்றி மேலும் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.  

    

காதல் மற்றும் திருமண வாழ்க்கை:

காதலர்கள் இப்பொழுது சுமாரான பலன்களையே எதிர்பார்க்கலாம். திருமணம் தொடர்பான விஷயங்களிலும் கவனம் தேவை. ஆயினும், கணவன், மனைவிக்குள் அன்பும், பாசமும் நிறைந்து காணப்படும்.  வாழ்க்கைத் துணையுடன் நல்ல புரிதல் ஏற்பட்டு, தம்பதிகள் இணக்கமான வாழ்க்கையை அனுபவிப்பீர்கள்.  

நிதி:

நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படலாம். வாழ்க்கைத் துணை வழியில் தனவரவு ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. வாகனங்கள், வாசனைத் திரவியங்கள், அழகு சாதனப் பொருட்கள் போன்ற தொழில்களின் மூலம் அதிக லாபம் பெறலாம். இந்த நேரத்தில், உங்கள் பொருளாதாரத் தேவைகள் அனைத்தும் சிறப்பாக நிறைவேறும்.

வேலை:

இந்த நேரத்தில், மேலதிகாரிகளிடம் நீங்கள் கவனமாக இருப்பது அவசியம். உங்கள் பணிகளை எல்லாம், வெற்றிகரமாகச் செய்து முடிப்பதும் அவசியம். அலுவலகத்தில் உங்கள் மதிப்பை நிரூபிக்க ஒரு நல்ல வாய்ப்பு உங்களைத் தேடி வரக் கூடும். சிலர், வேலை தொடர்பாக, குறுகிய காலப் பயணங்களையும் மேற்கொள்ள நேரிடலாம்.

தொழில்:

இந்தக் காலகட்டத்தில், இடை இடையே சிறு பிரச்சனைகள் வந்து விலகும் வாய்ப்புள்ளது. ஆனால் உங்கள் தொழில் சிறப்பாக நடைபெறும். எனினும், சில நேரங்களில் உங்களுக்கு நீங்களே நஷ்டத்தை வரவழைத்துக் கொள்ளக் கூடும். எனவே எச்சரிக்கை தேவை. சனிக் கிழமைகளில் முதியவர்களுக்கு அன்னதானம் செய்வது, உங்கள் தொழில் நிலையை மேம்படுத்தும்.

தொழில் வல்லுநர்கள்:

மேஷ ராசி தொழில் வல்லுநர்கள், தங்களது திறமையால், அனைத்துப் பணிகளையும் திறம்பட செய்து முடிப்பார்கள். ஆனால்,  நீங்கள் கூடுதல் பொறுப்புக்களை ஏற்பது நல்லதல்ல. ஏனெனில், உங்களால் அவற்றை சரியாகச் செய்து முடிக்க இயலாமல் போகலாம். பணியிடத்தில் சக பணியாளர்களுடன்  நட்புடன் நடந்து கொள்வது, நன்மை தரும்.

ஆரோக்கியம்:

இந்த மாதம் உடல் நிலையில் கவனம் செலுத்துவது நல்லது. உங்களில் சிலருக்கு, நரம்பு தொடர்பான பிரச்சனைகள் வந்து விலகக் கூடும். எனினும், ஏற்கனவே உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கும் சிலர், இந்த நேரத்தில், உடல் நலம் பெறும் வாய்ப்பும் உள்ளது. போதுமான, ஆழ்ந்த உறக்கம் உங்களுக்கு நன்மை பயக்கும்.

மாணவர்கள்

மாணவர்களுக்குக் கல்வியில் அதிக கவனம் தேவை. தாங்கள் படித்ததை சிலர் மறந்து விடக்கூடும். உங்கள் உடல் நிலையிலும் கவனம் தேவை. இந்த நேரத்தில், ஆசிரியர்களின் அறிவுரைகளைக் கேட்டு நடப்பது நல்லது. இவற்றைக் கடை பிடித்தால், இந்தக் காலகட்டத்திலும், உங்கள் படிப்பு சீரான போக்கில் செல்லும் வாய்ப்புள்ளது.

சுப தினங்கள்  : 1,2,5,6,7,20,21,28,29
அசுப தினங்கள் : 8,9,22,23,26,27

பரிகாரம்:

  • முருகபெருமான் மற்றும் ஸ்ரீ நரசிம்மர் வழிபாடு, பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வணங்குதல்
  • செவ்வாய், சனி, ராகு, கேது முதலிய கிரக மூர்த்திகளுக்குப் பூஜை, ஹோமம் செய்து வழிபடுதல்.
  • ஆதரவற்றோர் இல்லங்களில் உள்ள குழந்தைகளுக்கு உணவு அளித்தல். ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவி செய்தல்.

Leave a Reply