AstroVed Menu
AstroVed
search
search

கும்பம் ஆகஸ்ட் மாத ராசி பலன் 2020 | August Matha Kumbam Rasi Palan 2020

dateJuly 9, 2020

கும்பம் ஆகஸ்ட் மாத பொதுப்பலன்கள்:

கும்ப ராசி அன்பர்களே! இந்த மாதம், நிதி மற்றும் தொழில்துறை தொடர்பான நடவடிக்கைகள், உங்களுக்குச் சாதகமாக அமையும். இருப்பினும், தொழில் துறையில் சற்றே கவனமாக இருப்பதும் அவசியம். பணியில் உள்ளவர்களுக்கு சுமாரான பலன் கிடைக்கும். தாய்வழியில் லாபம் உண்டாகும். சிலருக்கு வாகன யோகம் உண்டு சிலர் பணம் முதலீடு செய்து, புதிய தொழில்கள் தொடங்குவீர்கள். தொலை தூரங்களிலிருந்து உங்களுக்கு வரவேற்பு அழைப்புகள் வரக்கூடும். இதனால் உங்களில் சிலர் நீண்ட பயணங்களை மேற்கொள்ளலாம். சில காதல் உறவுகள் திருமணத்தில் முடியும் வாய்ப்பு உள்ளது. இருப்பினும், அதில் சிறு தடைகள் ஏற்படலாம். திருமணமானவர்களுக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும் வாய்ப்பும் உள்ளது. அதிக செலவுகள் காரணமாக, உங்கள் வருவாய் மீது பாரம் விழலாம். தந்தைக்கு உடல் நல பாதிப்புகளும் ஏற்படலாம். இந்த நேரத்தில், சிலர், புனித யாத்திரை செல்ல நேரிடலாம்.  ஜோதிடம், ராசி பலன், நட்சத்திர பலன், இன்றைய பஞ்சாங்கம், வார ராசி பலன்கள், வருடாந்திர ராசி பலன்கள், பரிகாரங்கள் பற்றி மேலும் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.

      

காதல் மற்றும் திருமண வாழ்க்கை:

காதல் வாழ்க்கை சுமாராக இருக்கும். காதல் விவகாரங்களில் தடங்கல்களும் ஏற்படலாம். எனவே உங்களிடம் பொறுமை தேவை. குடும்பப் பிரச்சனைகளைத் தீர்ப்பதிலும், நீங்கள் பொறுமையைக் கடைபிடிப்பது அவசியம். இந்த நேரத்தில், துர்க்கை அம்மனை வெள்ளிக் கிழமைகளில் வழிபடுவது நன்மை தரும். 

நிதி:

பொருளாதார ரீதியாக, உங்களுக்கு மிகவும் பயனுள்ள மாதமாக இது இருக்கும். உங்கள் வருமானம், அனைத்துப் பொறுப்புகளையும் நிறைவேற்றுவதற்குப் போதுமானதாக இருக்கும். உங்கள் நிதி நிலையும் ஓரளவு மகிழ்ச்சி தருவதாக அமையும்.

வேலை:

வேலையில் நிலையான முன்னேற்றம் ஏற்படும். பல்‌வேறு காரணங்களால் எழும் சிக்கல்களை, நீங்கள் துணிச்சலுடன் சமாளிப்பீர்கள். எனினும், பொதுவாக, பணியில் நீங்கள் மிகவும் கவனத்துடன் இருப்பது அவசியம். உங்கள் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களிடம் அன்பாக நடந்து கொள்வதும் நன்மை தரும்.  

தொழில்:

தொழில் வளர்ச்சியில் நீங்கள் சிறப்பு கவனம் செலுத்துவது நல்லது. இது, தற்பொழுது உங்களுக்கு நல்ல பலனைத் தரும். உங்கள் நேர்மறை எண்ணங்களும், உடனடியாகச் செயலில் இறங்கும் ஆற்றலும் உங்களுக்கு பெரும் நன்மையைச் செய்யும். 

தொழில் வல்லுநர்கள்:

கும்ப ராசி தொழில் வல்லுநர்கள், அவர்கள் துறையில், முன்பு இழந்ததைத் திரும்பப் பெறும் காலம் இது. உங்களுடைய அர்ப்பணிப்பு உணர்வு, உங்களிடம் புதிய பொறுப்புக்களைக் கொண்டு வந்து சேர்க்கும். உங்கள் உழைப்பும், பங்களிப்பும் நீங்கள் ஏற்கும் பணிகளுக்கு நல்ல உறுதுணையாக அமையும். 

ஆரோக்கியம்:

உங்கள் உடல் நலன், தாற்காலிகமாக, சுமாராகத் தான் இருக்கும். எனவே, நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம். இந்த மாதம் நீங்கள் ஒரு கண்டிப்பான உணவுக் கட்டுப்பாட்டைப் பராமரிப்பது நல்லது. அன்றாடம் தவறாமல் தியானம் செய்வதும், நலம் தரும்.  

மாணவர்கள்:

இந்தக் காலகட்டத்தில், மாணவர்களின் கல்வி, சீரான போக்கில் இருக்கும். படிப்பில் நீங்கள் நல்ல முன்னேற்றமும் காணலாம். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். நண்பர்களுடன்  நல்லுறவை வளர்த்துக் கொள்வதும் நன்மை தரும். 

சுப தினங்கள் : 1,2,15,16,17,24,25,28,29
அசுப தினங்கள் : 3,4,18,19,22,23,30,31. 

பரிகாரம்:

  • ஸ்ரீ முருகப் பெருமான் மற்றும் ஸ்ரீ விநாயகப் பெருமான் வழிபாடு, பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.
  • செவ்வாய், சனி, ராகு, கேது, குரு கிரக மூர்த்திகளுக்குப் பூஜை, ஹோமம் செய்து வழிபடுதல்.
  • ஆலயங்களுக்குத் திருப்பணி செய்தல். சித்தர் சமாதிகளுக்குப் பூஜை செய்தல், துறவிகளுக்கு அன்னதானம் அளித்தல், உதவி செய்தல்.

banner

Leave a Reply