AstroVed Menu
AstroVed
search
search

மீனம் ஆகஸ்ட் மாத ராசி பலன் 2022 | August Matha Meenam Rasi Palan 2022

dateJune 28, 2022

மீனம் ஆகஸ்ட் 2022 பொதுப்பலன்கள்:

குடும்ப உறுப்பினர்கள் மற்றும்  நண்பர்களின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். அவர்கள் மூலமாக பணம் சார்ந்த  உதவிகளை எதிர்பார்க்கலாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் பணியிடத்தில் பெயரும் புகழும் பெறுவார்கள். தொழில் செய்பவர்களுக்கு தொழில் சிறப்பாக இருக்கும். இந்த மாதம் தங்களுக்கு தூக்ககுறைபாடுகள் வந்து மறையும். உணவுக் கட்டுபாடு மற்றும் நடை பயிற்சி செய்வது உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இந்த மாதம் மாணவர்கள் படிப்பில் கவனம் அதிகரித்து காணப்படும்.  மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான ராசி பலன் (Horoscope in Tamil) குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.

காதல் / குடும்பம்:

மீன ராசி காதலர்கள்  தனது துணையுடன் இன்பச்சுற்றுலா சென்று மகிழ்வார்கள். கணவன் மனைவி தங்களுக்குள்  விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் நல்லிணக்கம் காண்பார்கள். குழந்தைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உடனான உறவு நிலை மேம்பட்டு காணப்படும். 

கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்க சுக்கிரன் பூஜை

நிதி நிலை:

கடந்த கால முதலீடுகளின் மூலமாக அதிக தன லாபம் கிடைக்கும். நீண்ட நாள் நிலுவையில் இருக்கும் கடன் தொகை  இந்த மாதம் வசூலாகும். இந்த மாதம் தொழில் தொடர்பான  பயணங்களால் உங்களுக்கு அதிக செலவுகள் ஆகும். கண்கள் சம்பந்தமான பாதிப்புகளால் உங்களுக்கு மருத்துவ செலவுகள் ஆகலாம். 

கடன் பிரச்சனை தீர ருண விமோச்சன பூஜை

வேலை:

வெளிநாட்டில் உத்தியோகம் தேடும் உயர்கல்வி முடித்தவர்கள் தங்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும் வகையில்  வெளிநாட்டில் வேலை வாய்ப்பு கிடைக்கப் பெறுவார்கள். பொதுப்பணித் துறையில் பணியில் உள்ள பொறியாளர்கள் தன நிலையில் ஏற்றம் காண்பார்கள். நீங்கள் கடினமாக உழைப்பினை மேற்கொண்டு  பணியிடத்தில் பெயரும் புகழும் பெறுவீர்கள்.  உங்கள் பணிக்கான அங்கிகாரம் கிடைக்கப்பெறுவீர்கள். 

தொழில்:

இந்த மாதம் உங்கள் தொழில் சிறப்பாக நடக்கும். குறிப்பாக கூட்டுத் தொழில் சிறப்பாக நடக்கும். தொழில் மூலம் லாபம் கிட்டும்.  பரம்பரைத் தொழிலை செய்பவர்கள் தனது தந்தையின் அறிவுரையை கேட்டு நடப்பதன் மூலம் தொழிலில் நல்ல லாபத்தை ஈட்ட முடியும். ஊடகத் துறை மற்றும் பொழுதுபோக்குத் துறை சார்ந்த தொழில் செய்பவர்கள் தங்கள் தொழில் மூலம் அதிக லாபத்தை சம்பாதிக்க முடியும். 

தொழில் வல்லுனர்கள்:

உத்தியோகத்தில் உள்ள தொழில் வல்லுனர்கள் இந்த மாதம் பணியில் சில முன்னேற்றங்களைக் காண்பீர்கள். சம்பள உயர்வுடன் கூடிய பதவி உயர்வு உங்களை நாடி வரும் மாதம் ஆகும். வாடிக்கையாளர்களை திருப்தி படுத்துவதன்  மூலம் உங்கள் மதிப்பு அதிகரித்து காணப்படும். 

உத்தியோகம் மற்றும் தொழில் சிறக்க சனி பூஜை

ஆரோக்கியம்:

இந்த மாதம் உங்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும் என்றாலும்  சிறு உபாதைகள் தோன்றி மறையும். சரிவிகித உணவும் முறையான உடற்பயிற்சியும் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். வயதானவர்களுக்கு சிறுநீரகப்பிரச்சனை வரலாம். அவர்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிறிய பாதிப்புகள் வரும் பொழுதே மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெறுவது சாலச்சிறந்தது. 

உடல் ஆரோக்கியத்திற்கு புதன் பூஜை

மாணவர்கள்:

இந்த மாதம் பள்ளிக் கல்வி படிக்கும் மாணவர்களுக்கு அதிர்ஷ்டகரமான மாதமாக இருக்கும். உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் படிப்பில் முதலிடம் பிடிப்பார்கள். ஆராய்ச்சி கல்வி படிக்கும் மாணவர்கள் தனது ஆராய்ச்சி கட்டுரையை பல்கலைகழகத்தில் சமர்ப்பித்து பாராட்டுதலை பெறுவார்கள். கைபந்து, கால்பந்து மற்றும் டென்னிஸ் போன்ற விளையாட்டுகளில் கோப்பையை வெல்லும் வாய்ப்பு உள்ளது.

மாணவர்கள் படிப்பில் வெற்றி பெற சரஸ்வதி பூஜை

சுப நாட்கள்: 

2, 3, 4, 7, 8, 9, 10, 12, 13, 14, 16, 17, 18, 21, 22, 23, 24, 25.

அசுப நாட்கள்:

1, 5, 6, 11, 15, 19, 20, 31.


banner

Leave a Reply