Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW

அட்சய திருதியை பூஜை

April 5, 2023 | Total Views : 179
Zoom In Zoom Out Print

அட்சய என்ற வடமொழி சொல்லிற்கு அள்ள அள்ளக் குறையாதது என்று பொருள். திருதியை என்பது மூன்றாம் திதி. சித்திரை மாதம் வளர்பிறை அமாவாசை அடுத்த மூன்றாம் நாளில் அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது.

அட்சய திருதியை சிறப்பம்சங்கள் :

இந்த நன்னாளில் பல முக்கிய நிகழ்வுகள் நடந்துள்ளது என்பதை புராணங்கள் வாயிலாக நாம் அறியலாம்.

  •  இந்த நாளில் தான் கிருஷ்ணன் தனது நண்பரான குசேலரின் வாழ்வை மாற்றி அமைத்தார். வறுமையில் இருந்து நீங்கி குசேலர் செல்வம் பெற்ற நாள். குசேலர் கிருஷ்ணரின் பால்ய நண்பர். அவரைக் காண வேண்டும் என்ற ஆவலில் குசேலர் கிளம்பினார். ஆனால் நண்பனுக்கு கொடுக்க தன்னிடம் எதுவும் இல்லையே என்று ஏங்கினார். அவரது மனைவி சிறிது அவலைக் கொடுத்து கிருஷ்ணரிடம் கொடுக்குமாறு கூறினாள். குசேலர் தனது நிலைமை பற்றிக் கூறாமலேயே கிருஷணர் அவரின் வறுமை நிலையைக் கண்டு கொண்டார். எனவே அவருக்கு செல்வத்தை வழங்கினார்.
  • வியாசர் கூறக் கூற விநாயகர் மாகாபாரதம் எழுதிய நாள்
  • அன்னை பார்வதி அன்னபூரணியாக அவதரித்து, பிட்சாடனராக வந்த சிவபெருமானுக்கு அன்னம் இட்ட நாள்.
  • பரசுராமர் அவதரித்த நாள் குபேரன் லக்ஷ்மி தேவியை வணங்கி நிதிகளைக் காக்கும் பதவி பெற்ற நாள்.
  • அட்சய திருதியை தினத்தன்று தான் கிருதயுகம் பிறந்தது
  • பகீரதன் முயற்சியால் கங்கை, பூமியில் முதல் முதலில் அட்சய திருதியை தினத்தன்று தான் பிரவாகம் எடுத்தது.
  • திரௌபதி அட்சய பாத்திரம் பெற்ற நாள்

அட்சய திருதியை பூஜை:

அட்சய திருதியை அன்று அதிகாலை எழுந்து நீராடி தூய ஆடை உடுத்திக் கொள்ள வேண்டும். வீடும் தூய்மையாக இருக்க வேண்டும். பூஜை அறையில் விளக்கேற்றி வழக்கம் போல பூஜைகளை செய்ய வேண்டும். முதலில் விநாயகர் பூஜை  செய்ய வேண்டும். குல தெய்வத்தை வணங்க வேண்டும். பிறகு இஷ்ட தெய்வத்தை வணங்க வேண்டும்.

அன்று திருமால் மற்றும் அவரது  திருமார்பில்  உறையும் மகா லட்சுமிக்கு சிறப்பு பூஜை  செய்வது சிறப்பு.

வெற்றிலை பாக்கு பால் பழங்களுடன் வீட்டில் பானகம், நீர் மோர் தயாரித்து நிவேதனம் செய்ய வேண்டும்.

ஆலயம் சென்று இறைவனை வழிபட வேண்டும்.

அட்சய திருதியை தானம் :

அட்சய திருதியை அன்று பானகம் மற்றும் நீர் மோர் தானம் செய்யலாம்.

அரிசி, நெய், உப்பு, காய்கறிகள். பழம் வாங்கி ஏழை எளியவர்களுக்கு தானம் செய்யலாம்.

அன்னதானம் மேற்கொள்ளலாம்.

வஸ்திர தானம் செய்யலாம்.

குடை, செருப்பு தானம் செய்யலாம்.

விசிறி தானம் செய்யலாம்.

வசதி இருப்பவர்கள் தங்கம், வெள்ளி வாங்கி ஏழை எளியவர்களுக்கு தானம் அளிக்கலாம்.

அட்சய திருதியின் பெருமை விளக்கும் கதை:

அட்சய திரிதியை பற்றிய ஒரு கதையின்படி, பண்டைய காலத்தில் தர்மதாஸ் என்ற வைசியர் இருந்தார். தர்மதாஸ் தனது குடும்பத்துடன் ஒரு சிறிய கிராமத்தில் வசித்து வந்தார். அவர் மிகவும் ஏழையாக இருந்தார். அவர் தனது குடும்பத்தைப் எப்படி பராமரிப்பது என்று எப்போதும் கவலைப்படுவார். அவரது குடும்பத்தில் பல உறுப்பினர்கள் இருந்தனர். தர்மதாஸ் மிகவும் கடவுள் பக்தி உடையவர்  அவருடைய நல்லொழுக்கம் மற்றும் கடவுள் மற்றும் அந்தணர்கள் மீதான பக்தி மிகவும் பிரபலமானது.

அட்சய திருதியை விரதத்தின் பெருமையைக் கேட்டறிந்த அவர், அக்ஷய திருதியை நாளன்று அதிகாலையில் எழுந்து, கங்கையில் நீராடி, தெய்வங்களை வழிபட்டு, தனது சக்திக்கு ஏற்ப, . தண்ணீர், விசிறி, பார்லி, அரிசி, உப்பு, கோதுமை, வெல்லம், நெய், தயிர், தங்கம் மற்றும் வஸ்திரம் போன்றவற்றைக் கடவுளின் பாதத்தில் வைத்து பிறருக்கு தானம் செய்தார்.

இந்த நன்கொடை அனைத்தையும் பார்த்த தர்மதாஸின் குடும்பத்தினர் மற்றும் அவரது மனைவி அவரை தடுக்க முயன்றனர். அப்போதும் தர்மதாஸ் தனது தொண்டு மற்றும் நற்செயல்களில் இருந்து விலகாமல் அந்தணர்களுக்கு பல வகையான தானங்களை வழங்கினார். அவர் வாழ்வில் அட்சய திருதியை என்ற மங்களகரமான பண்டிகை வரும்போதெல்லாம், ஒவ்வொரு முறையும் தர்மதாஸ் இந்த நாளில் வழிபாடு மற்றும் தர்மம் போன்றவற்றை முறைப்படி செய்தார்

நோயால் பாதிக்கப்பட்டு முதுமை அடைந்த பின்னரும் நோன்பிருந்து தான தருமங்களையும் தொண்டுகளையும் செய்தார். இந்த வைசியர் அடுத்த பிறவியில் குஷாவதியின் அரசரானார்.

அட்சய திருதியை நாளில் செய்த தொண்டு மற்றும் வழிபாட்டின் காரணமாக, அவர் தனது அடுத்த பிறவியில் மிகவும் பணக்கார மற்றும் கம்பீரமான அரசராக ஆனார் என்று நம்பப்படுகிறது. அவர் எவ்வளவு பணக்கார மற்றும் கம்பீரமான மன்னராக இருந்தார் என்றால், அட்சய திருதியை நாளில், மும்மூர்த்திகள் கூட அந்தணர் வேடமிட்டு அவரது அரசவையில் வந்து அவரது மகாயக்ஞத்தில் கலந்து கொண்டார்.

தர்மதாஸ் மீது கடவுள் அருளைப் பொழிந்ததைப் போலவே, இந்த அட்சய திருதியை கதையின் முக்கியத்துவத்தைக் கேட்டு, விதிகளின்படி வணங்கி, தானம் செய்பவர் மீண்டும் புகழும் செல்வமும் பெறுவர்.

banner

Leave a Reply

Submit Comment