ஆடி அமாவாசை 2023 : ஆண்கள் , பெண்கள அவசியம் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள்

வருடத்தில் வரும் மூன்று முக்கிய அமாவாசைகளுள் ஆடி அமாவாசை ஒன்றாகும். அன்று இன்னுயிர் நீத்த நமது மூதாதையர்களுக்கு வழிபாடு நடத்தவேண்டியது அவசியம். நாம் செய்யும் இறை பூஜையில் கூட சில நியதிகளை மீறலாம் ஆனால் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளில் தவறக் கூடாது என்று கூறுவார்கள். அவ்வாறு செய்வதன் மூலம் அவர்களின் கோபத்திற்கும் சாபத்திற்கும் ஆளாகாமல் இருக்கலாம். அவர்களுக்கு உரிய கடமைகளை சரியாக செய்வதன் மூலம் நமது வாழ்வின் முன்னேற்றத்தில் காணப்படும் தடைகள் நீங்கும். ஆடி அமாவாசை அன்று என்ன செய்யலாம் என்ன செய்யக் கூடாது என்பதை அறிந்து நடந்து கொள்வதன் மூலம் அவர்களின் பரிபூரண ஆசிகளைப் பெற முடியும்.
ஆடி அமாவாசை அன்று ஆண்களும் பெண்களும் சில நியதிகளை கடைபிடிக்க வேண்டும் மற்றும் சில விஷயங்களை தவிர்க்க வேண்டும். அதனைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
ஆடி அமாவாசை :
மாதா மாதம் அமாவாசை வந்தாலும் ஆடி அமாவாசை சிறப்பு வாய்ந்தது. அன்று தான் நமது முன்னோர்கள் பித்ரு லோகத்தில் இருந்து பூ லோகத்திற்கு தங்கள் பயணத்தை ஆரம்பிக்கிறார்கள். எனவே தான் ஆடி அமாவாசை அன்று கண்டிப்பாக முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய சடங்குகளை தவறாமல் செய்ய வேண்டும் என்பது நியதி. ஆனால் இந்த ஆடி அமாவாசை சடங்கு மற்றும் விரதம் யாரெல்லாம் செய்யலாம் யாரொல்லாம் இருக்கக் கூடாது, அன்று என்ன செய்ய வேண்டும், எவற்றை எல்லாம் செய்யக் கூடாது என்ற வரை முறை உள்ளது.
அமாவாசை அன்று செய்ய வேண்டியவை :
ஆண்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் விட வேண்டும்.
நமது முன்னோர்களுக்கு பிடித்த சமையலை வடை பாயாசத்துடன் செய்து அவர்களுக்கு படைத்துவிட்டு பின்பு தான் நாம் உணவு உண்ண வேண்டும்.
அன்று கண்டிப்பாக காகத்திற்கு அன்னம் இட வேண்டும்.
அமாவாசை அன்று சமையலுக்கு கண்டிப்பாக பூசணிக்காய், அகத்திக்கீரை, வாழைக்காய் உணவில் சேர்க்க வேண்டும்.
யாரையாவது இரண்டு பேரை வீட்டிற்கு அழைத்து சாப்பாடு போடலாம்.
ஆடி அமாவாசை விரதம் யாரெல்லாம் இருக்கலாம் ?
தாய் தந்தையை அல்லது இருவரில் ஒருவரை இழந்த ஆண்கள்.
வாழ்க்கைத் துணையை இழந்த ஆண்கள்.
வாழ்க்கைத் துணையை இழந்த பெண்கள்.
தாய் தந்தை இருப்பவர்கள் இந்த சடங்கை செய்யக் கூடாது.
ஆண்கள் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் :
-
தர்ப்பணம் விட வேண்டும். எள்ளும் நீரும் இறைக்க வேண்டும்.
-
ஒரு வேளை மட்டுமே உணவு உன்ன வேண்டும்.
-
பசுக்களுக்கு உணவு அளிக்க வேண்டும்.
-
ஆலயம் சென்று வழிபட வேண்டும்
-
கோவில் குருக்கள் அல்லது பூசாரிகளுக்கு அரிசி, வாழைக்காய் தானம் அளிக்க வேண்டும்
பெண்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் :
-
பெண்கள் தர்ப்பணம் அளித்தல் கூடாது. குறிப்பாக சுமங்கலிப் பெண்கள்.
-
பெண்கள் உபவாசம் இருக்கக் கூடாது. குறிப்பாக இரவில் ஒரு
கவளமாவது அரிசி உணவை உண்ண வேண்டும்.
